Tuesday, May 10, 2011

அரபு முஸ்லிம் உலக மக்கள் எழுச்சிக்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் பேரணி
நேற்று லண்டனில் அரபு முஸ்லிம் நாடுகளில் நடைபெறும் மக்கள் எழுச்சிக்கு ஆதரவான மக்கள் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது இதில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர் பேரணியில் கலந்து கொண்டவர்கள் லிபியா,சிரியா, யெமன், பஹ்ரைன், ஆகிய நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுச்சி பெற்றுள்ள மக்களுக்கு தமது ஆதரவை தெரிவித்து இந்த பேரணியை நடத்தியுள்ளனர்.
லண்டனில் அரபு முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் எட்வேர்ட் பகுதியில் இருந்து லிபியா,சிரியா, யெமன், பஹ்ரைன் ஆகிய நாடுகளின் தூதராளையங்கள் அமைந்திருக்கும் பகுதியை நோக்கி அந்த பேரணி சென்றுள்ளது அங்கு கலந்து கொண்டவர்கள் ‘Arab Puppet Rulers Must Go!’; ‘Syria – Yemen – Bahrain – Libya:Time for Real Change’; ‘No to Colonialism. Yes to Khilafah’; and ‘One Ummah .. Want Justice .. Want Unity .. Want Change .. Khilafah is the Answer’. போன்ற செய்திகளை கொண்ட பதாகைகளை சுமந்தவர்களாக கலந்து கொண்டுள்ளனர் இந்த பேரணியை பிரிட்டன் ஹிஸ்புத் தஹ்ரீர் ஏற்பாடு செய்துள்ளது
ஹிஸ்புத் தஹ்ரீரின் பேச்சாளர்கள் பேரணியில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளனர் இங்குஉரையாற்றிய பிரிட்டன் ஹிஸ்புத் தஹ்ரீரின் ஊடக பேச்சாளர் முஸ்தபா இந்த பேரணி லிபியா,சிரியா, யெமன், பஹ்ரைன், ஆகிய நாடுகளில் பிரிட்டனில் வாழும் மக்களை ஒன்றுபடுத்தியுள்ளது நாங்கள் இங்கு மேற்கு உலகு சார்பான அரசுகளுக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளோம் ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுச்சி பெற்றுள்ள மக்களுக்கு ஆதரவாக கூடியுள்ளோம் இங்கு கூடியுள்ள அனைவரும் இஸ்லாமிய பெறுமானங்களை கொண்ட கிலாபத்தான் மத்திய கிழக்கிலும் , வட ஆபிரிக்காவிலும் பொதுவாக முஸ்லிம் உலகிலும் ஒன்றுமைகும் அமைதிக்குமான சிறந்த சந்தர்பத்தை வழங்கும் என்று நம்புகின்றோம் என்று தெரிவித்துள்ளார.

Wednesday, May 4, 2011

ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டது, அமெரிக்க ஹோலி வூட் படம் ஒன்றின் உச்சகட்ட கதை ??

ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டது, அமெரிக்க ஹோலி வூட் படம் ஒன்றின் உச்சகட்ட கதை ??

அமெரிக்க ஹாலிவுட் படம் ஒன்றின் உச்ச கட்டம் இது. ஆம், ஒசாமா பின் லேடன் என்று அழைக்கப்பட்ட அந்த படத்தின் வில்லன் 4 ஹெலிகாப்டர்கள் முலம் அதிரடி படைகளின் திடீர் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்த விறுவிறுப்பான கட்டம் உலக செய்தி ஊடகங்களை 24 மணி நேரமும் இது சம்பந்தமாக நேரடி ஒளிபரப்பை செய்ய செய்துள்ளது.
அவர் பாகிஸ்தானில் கொல்லப்பட்டது உண்மையா? இது ஒரு அலங்கரிக்கப்பட்ட சதி திட்டமா ? கொஞ்சம் பொறுமையுடன் வாசியுங்கள்.
ஒசாமா என்ற மனிதர் அமெரிக்கவால் உருவாக்கப்பட்ட கதா பாத்திரம். பயங்கர வாதத்துக்கு எதிரான யுத்தத்துக்காக பகடைக்காயாக உருவாக்கப்பட்ட ஒரு பலிக்கடா. அவர் சோவியத் படைகளின் ஆப்கானிய ஆக்கிரமிப்பின் போது முஜாஹிதீன்களுடன் போராடியது உண்மை.1990 களின் பிற்பகுதியில் பாலஸ்தீன சார்பான போக்கை கையாண்டதுடன் அமெரிக்காவின் மத்திய கிழக்கு வெளிநாட்டு கொள்கையை எதிர்த்தும் உண்மை.ஆனால் அமெரிக்காவும் மேலை நாடுகளும் குற்றம் சாட்டுவது போல, சில அறிவீன முஸ்லீம்கள் நம்புவது போல அவர் தான் செப்டம்பர் 11 ஐ நடத்தினார் என்பதற்கு அமெரிக்கா இன்று வரை எந்த ஆக்கபூவமான ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை.தாலிபான் மீது ஐ. நா பாதுகாப்பு சபை பொருளாதார தடை விதித்ததற்கு தாலிபான் ஒசாமாவை கையளிக்க தவறியமையே காரணம். தாலிபானின் தலைவர் முல்லா உமர் அன்று கூறியதை இன்று மீட்டிப் பார்க்கலாம். 'செப்டம்பர் 11 தாக்குதலின் பின் ஒசாமா தான் இருப்பதற்கான ஒரு ஆதாரத்தை காட்டுங்கள் ஒசாமாவை அமெரிக்காவிடம் கையளிக்கிறோம் 'என்று அன்று அவர் கூறியது.செப்டம்பர் 11 தாக்குதல் நடந்த இடத்தில் தாக்குதல் நடத்திய விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டு எடுக்க முடியாத அமெரிக்கா ,முஹம்மது பத்தாஹ் பாவித்த கடவுச்சீட்டை கண்டு எடுத்தது உட்பட பல கோமாளித்தனமான சம்பவங்களை நாம் கண்கூடாக காண்கிறோம்.(loose change final edition பார்க்க)
2001 இன் பின் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய சாம்ராஜ்யம்/கலீபா ஆட்சி எழுந்து விடுமோ என்ற அச்சத்தில் இஸ்ரேலை பாதுகாப்பதுக்கான உலக அரங்கின் கட்டளையே (world order ) செப்டம்பர் 11 தாக்குதல்.தாக்குதல் ஆரம்பிக்கப்பட்ட ஓரிரு ஆண்டுகளில் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டது அப்போது கூறப்பட்டாலும். ஒசாமா என்று அழைக்கப்பட்ட நபரினால் அமேரிக்க அனுசரணையில் வெளியிடப்பட்ட ஒலிப்பேழைகள் ஒசாமா கொல்லப்படவில்லை என்ற இட்டுக்கட்டப்பட்ட அமேரிக்க உத்தியோக பூர்வ கொள்கையை உறுதிப்படுத்தியது. 2003 ஆம் ஆண்டில் ஒசாமா பின் லேடன் ஒரு தாக்குதில் கொல்லப்பட்டதாக அவரை கொன்ற இராணுவ அதிகாரிகள் தெரிவித்திருந்த போதும் உயர் மட்டத்தில் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
ஒசாமாவுக்காக தொடரப்பட்ட ஆப்கான் மீதான இராணுவ நடவடிக்கை , ஒசாமா கொல்லப்பட்டார் என்ற கருத்து வெளி வந்தால், அல்லது அதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால் அந்த இராணுவ ஆக்கிரமிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய சர்வதேச நிர்பந்தத்துக்கு ஆளாக வேண்டி ஏற்படலாம் என்று எண்ணி ஒசாமாவை தேடும் பணியில், இஸ்லாமிய ஆட்சி மீண்டும் ஆப்கானிஸ்தானில் ஏற்படுவதை தடுத்து நிறுத்த முடிவதுடன் ஒரேஒரு முஸ்லீம் அணுகுண்டு நாடான பாகிஸ்தானின் மீது ஒரு கண் வைக்க முடியும் என்ற எண்ணத்தில் ஒசாமா பின் லாடனை தேடுவதில் மும்முரமாக ஈடு பட்டு வந்தது போல் அமெரிக்கா சர்வதேச அரங்கில் படம் காட்டி வந்தது.
செத்த பாம்பை அடித்து வந்த அமெரிக்கா இதற்காக கொடுத்து வந்த விலை தாலிபானின் போராட்டத்தில் கொடுத்த அமெரிக்கா இராணுவ உயிர்கள்.
சரி இனி புதிதாக வெளிவந்த ஒசாமா கொல்லப்பட்ட விடயத்துக்கு வருவோம்.
'இரவோடு இரவான தாக்குதல்'.'உயிருடன் பிடிக்காமல் கொல்லுமாறு உத்தரவு' 'ஒபாமாவின் உத்தரவு' 'ஒசாமாவின் உடலை சவூதி ஏற்க மறுப்பு ' 'கடலில் ஒசாமாவின் உடல் கலக்கப்பட்டது' போன்ற ஆக்ரோசமான தலைப்புக்கள் செய்தி ஊடகங்களை நிறைத்து கொண்டிருக்கின்றன.
ஒசாமையை கொன்ற அமெரிக்கா இது எல்லாம் செய்து இருக்குமா? ஒசாமா என்ற ஒருவர் இப்போது கொல்லப்பட்டிருந்தால் தானே இது எல்லாம் நடந்து இருக்கும்.
'தனி ஒரு நபரில் தாலிபனின் போராட்டம் தங்கி இல்லை.இந்த செய்தி எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.இந்த செய்தியால் அமெரிக்கா முழுக்க சந்தோசத்தை கொண்டாடுகிறது.இனி வரும் காலங்கள் அமெரிக்காவுக்கு கடுமையானதாக இருக்கும் என்ற கசப்பான செய்தி இருக்கிறது.இந்த போராட்டம் மாறப்போவதில்லை' என்று பாகிஸ்தானுக்கான தலிபானின் முன்னாள் தூதுவர் முல்லாஹ் சயீப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
'Dinning with Terrorists ' என்ற நூலாசிரியர் phil Rees கூறியதும் அமெரிக்காவின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
'ஒசாமா பின் லடேனின் இந்த மரண செய்தி தலிபானின் போராட்டத்தில் எந்த பாதிப்பையும் ஏற் படுத்தபோவதில்லை.ஒசாமா ஓயவுதிய வயதை அடைந்து விட்டார் .கடைசி காலத்தில் தாலிபான் போராட்டத்தில் இருந்து ஒதுங்கி அவர் தனது உயிரை பாதுகாக்க இடம் தேடினார்.இந்த மரண செய்தி போராட்டத்தில் எந்த பாதிப்பையும் ஏற் படுத்தாது.'
ஒசாமா கொல்லப்பட்ட செய்தி இப்போது வெளியாகியத்ற்கு என்ன காரணம் ???
பல காரணங்களை கூறமுடியும்.
THIS ATTACK ONLY BENEFITS AMERICA AND SPECIFICALLY OBAMA.
1 .அமெரிக்காவில் ஒபாமா மீதான செல்வாக்கு குறைந்து வருவதால் ,இந்த செய்தி மூலம் எதிர் வரும் தேர்தல்களில் ஒபாமாவின் கட்சி சிறப்பாக வெற்றி பெற முடியும்

2.ஏற்கனவே இரு யுத்தங்களில் காலை விட்டு எடுக்க முடியாமல் தத்தளித்த அமெரிக்காவுக்கு,அங்கிருந்து வெளியேறு வதற்கு இது ஒரு காரணமாக காட்டமுடிவதுடன் லிபியா,சிரியா போன்ற நாடுகளில் மூக்கை நுழைக்க இது பாரத்தை குறைக்கும்.ஆப்கானிஸ்தானில் நேரத்தை வீணடிப்பதை விட சிரியா ,லிபியா போன்ற நாடுகளில் தலைஇடுவதால் கூடிய கேந்திர அனுகூலங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு.
3.Obama can now portray his failed crusade as a victory to his people, securing his re-election.
4.America has now claimed its right before the world that it can unilaterally mount attacks within any sovereign country, any time it likes, without approval from the United Nations or any other international institution.
5.the silence of the traitor rulers over the attack grants America a blank check to extend at will its military operations beyond the tribal areas to any city within Pakistan, whether using military helicopters or aircrafts. This attack is the greatest gift that the traitor rulers have yet granted America. The traitor rulers have thus granted America an open hand to spread their war against Pakistan throughout the country. Indeed, RasulAllah SAW spoke the truth when he said that the biggest treachery is that of the rulers.

கொல்லப்பட்ட ஒசாமாவின் புகைப்படம் எங்கே என்று மக்கள் கேட்பது அமெரிக்கா இட்ட திட்டத்தின் அடுத்த கேள்வி.
வெகு விரைவில் கொல்லப்பட்ட ஒசாமா பின் லேடனின் புகைப்படம் ஹோலி வூடில் இருந்து உருவாக்கப்பட்டு .செய்தி ஊடகங்களில் வெளிவரும்.



பொறுத்திருங்கள்
செப்டம்பர் 11 ஐ உருவாக்கி காட்டிய அமெரிக்காவுக்கு இது எல்லாம் ஒரு ஜுஜுப்பி ...கேட்பதை நம்பும் கேவலமான கூட்டம் இருக்கும் வரை .....
கட்டுரை-ரஹீம்ராஜி