Friday, February 18, 2011

துனிசியாவில் இஸ்லாமிய ஆட்சி வேண்டும் _ மக்கள் புரட்சி

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=BBpSFbu-5pE

ஹிஸ்புத் தஹ்ரீர் என்ற சர்வதேச இஸ்லாமிய அமைப்பு !

ஹிஸ்புத் தஹ்ரீர் என்ற மூன்றாவது சர்வதேச இஸ்லாமிய அமைப்பு !
ஹிஸ்புத் தஹ்ரீர் என்ற அமைப்பு ஒரு சர்வதேச இஸ்லாமிய இயக்கமாகும் இந்த அமைப்பு உலகின் நாற்பது நாடுகளில் தற்போது இயங்குவதாகவும் 10 இலட்சம் உறுபினர்களை கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன மற்றைய சர்வதேச இஸ்லாமிய இயக்கங்களான 1928 இல் இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்களால் கிலாபத்தை மீண்டும் ஏற்படுத்தும் நோக்கம் கருதி உருவாக்கப்பட்ட இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பையும் அதேபோன்று இந்திய துணைக்கண்டத்தில் 1940 இல் மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்காளால் உருவாக்கப்பட்ட ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பையும் இதனுடன் ஒப்பிடும்போது ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பு இளையது இந்த அமைப்பு 1953 ஆம் ஆண்டு கிலாபத்தை மீண்டும் ஏற்படுத்தும் நோக்கம் கருதி தக்கியுதீன் அல் -நப்ஹானி (ரஹ்) அவர்காளால் பலஸ்தீன் ஜெருசலத்தில் தோற்றுவிக்கப்பட்டது.
மேற்கண்ட மூன்று அமைப்புகளும் வன்முறையற்ற சாத்வீக வழிமுறைகள் ஊடாக இஸ்லாமிய எழுச்சிக்காக உழைத்தாலும் இஹ்வானுல் முஸ்லிமூன் , ஜமாஅத்தே இஸ்லாமி ஆகிய அமைப்புகள் நடைமுறை அரசியலில் பங்குகொண்டு தேர்தல், பாராளுமன்ற உறுப்புரிமை என்ற அரசியல் நடைமுறை கட்டமைப்புகளையும் உள்ளடக்கிய இஸ்லாமிய எழுச்சி என்ற பரிமாணங்களை கொண்டு செயல்படுகிறது ஹிஸ்புத் தஹ்ரீர் தன்னை முழுமையான ஒரு இஸ்லாமிய அரசியல் கட்சியாக அடையாளப் படுத்துவதிலும் அதேவேளை நடைமுறை அரசியலில் பங்குகொள்வதில் இருந்து முற்றிலுமாக விலகிய போக்கை கடைபிடிப்பதிலும் தன்னை வேறுபடுத்தி நிற்கின்றது.
மேற்சொன்ன மற்றைய இரண்டு இஸ்லாமிய அமைப்புகளையும் விடவும் கிலாபத் என்ற சொல்லை தற்போதைய உலகின் அதிகம் முழங்கும் அமைப்பு ஹிஸ்புத் தஹ்ரீர்தான் , இன்று உலகில் முஸ்லிம் சமுகம் தனது முதற் பணியாக கிலாபத்ததை ஏற்படுத்த வேண்டும் அதற்கு பிறகுதான் இஸ்லாமிய அழைப்பு பணிகூட கடமையாகும் என்ற நிலைபாட்டில் உள்ளவர்கள் இவர்கள் கடந்த பல காலம் இயங்கிவந்தாலும் பிரிட்டனில் இவர்களின் நடவடிக்கைகள் செல்வாக்கு செலுத்தியதன் பின்னர்தான் மேற்குலகின் கவனத்தை பெற்றுள்ளனர் இவர்கள் ஆரம்பத்தில் பயங்கரவாத ,தீவிரவாத அமைப்பு போன்று பார்க்கபட்டாலும் தற்போது இவர்கள் பயங்கரவாதம் ,தீவிரவாதம் போன்ற வற்றுடன் எந்த தொடர்புகளையும் கொண்டிராதவர்கள் என்பதுடன் அதற்கு எதிரானவர்கள் என்ற மேற்கின் நிலைபாட்டை வென்றுவருகின்றனர்.
அண்மையில் துனூசியாவில் ஏற்பட்ட அரசுக்கு எதிரான மக்கள் ஆர்பாட்டங்களிலும் இவர்கள் பங்குகொண்டுள்ளனர் இவர்கள் துனூசியாவில் தொகையில் குறைவாக இருந்தாலும் கிலாபத்தை நோக்கி துனூசிய மக்களை பகிரங்கமாக அழைத்து வருகின்றனர்,
இன்றைய இஸ்லாமிய எழுச்சியுடன் அந்த மூன்று அமைப்புகளும் தொடர்புபட்டாலும் அவை ஒவ்வொன்றினதும் வேலைத் திட்டங்களின் ஆழ அகலங்கள் அதன் பரிமாணங்கள் மிக பாரிய வித்தியாசங்களை கொண்டது சமூகத்தில் இஸ்லாமிய உட்கட்டமைப்பு என்ற விடயத்தில் இஹ்வானுல் முஸ்லிமூன், ஜமாஅத்தே இஸ்லாமி ஆகியன ஆழ ஊடுருவியுள்ளன என்பது குறிபிடத்தக்கது -அண்மையில் ஹிஸ்புத் தஹ்ரீர் துனூசியாவில் செய்த ஆர்ப்பாட்டம் பார்க்கலாம்

Monday, February 14, 2011

கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் PART-1

கிலாஃபா முற்றாக அழிக்கப்பட்டு 85 வருடங்களையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் இன்றைய சூழலில் முஸ்லிம் உம்மத் தாம் உலகின் பற்திசைகளிலும் எவ்வாறு அதிகாரத்துடனும், கண்ணியத்துடனும் இருந்தோம் என்பதை விரிவாகவும், ஆழமாகவும் புரிவது இன்றியமையாததாகும். மேலும் கிலாஃபத்தின் வரலாறு குறித்தும் அது எவ்வாறு படிப்படியாக மறைய ஆரம்பித்து பின்னர் முற்றாக வீழ்த்தப்பட்டது தொடர்பாகவும் ஆராய வேண்டியதும் முக்கியமானதாகும், மேலும் சிலர் தவறாகக்கூறுவதைப்போல கிலாஃபத்தின் வீழ்ச்சியின் போது அப்போதிருந்த மார்க்க அறிஞர்களும் முஸ்லிம்களும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்ற கருத்தின் உண்மைநிலை குறித்தும் நாம் முற்றாக ஆராய வேண்டும். உண்மையில் அந்தக்கூற்று மிகவும் தவறானதாகும். ஏனெனில் து}ய்மையான முஸ்லிம்கள் பலர் கிலாஃபத்தை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்பதில் காட்டிய அக்கறையையும், அது தமது கண்முன்னால் அழிக்கப்படும்போது அதனால் அவர்கள் அடைந்த வேதனைகளையும் வரலாறு பதிந்து வைத்திருக்கிறது. இதற்கொரு சிறந்த சான்றே இந்திய முஸ்லிம்களும், இந்தியாவில் உருவான கிலாஃபத் இயக்கமுமாகும்.
கிலாஃபத் அழிக்கப்பட்டபோது இந்திய முஸ்லிம்களின் எதிர்நடவடிக்கை எவ்வாறிருந்தது என்பதை ஆராய முன் எவ்வாறு இஸ்லாமிய ஆட்சி இந்திய துணைக்கண்டத்தை வந்தடைந்தது என்பதை ஆராய்வது அவசியமாகும். இன்று முஸ்லிம்களின் உலக சனத்தொகையில் ஏறக்குறைய அரைப்பகுதியை அதாவது அரை பில்லியன் பேரை இன்றைய இந்தியாவின் 250 மில்லியன் முஸ்லிம்கள், பாகிஸ்தானின் 160 மில்லியன் முஸ்லிம்கள், பங்களாதேஸின் 120 மில்லியன் முஸ்லிம்கள் உள்ளடக்குகின்றனர் என்பதும், இன்றைய முஸ்லிம் உம்மத்தின் பெரும்பான்மையோரின் மொழியாக (அரபைவிடவும்) உருது மொழி மாறிவிட்டது என்பதும் இங்கே கவனத்திற்கொள்ளத்தக்கது.
இந்தியாவில் கிலாபத்தின் சுருக்க வரலாறு
முஸ்லிம் வர்த்தகர்கள் சிலர் கி.பி 711ம் ஆண்டு சிந்து நதிக்கரை ஓரமாக இந்து சமுத்திரத்தில் பயணித்துக்கொண்டிருந்தார்கள். இதன்போது இவர்கள் பயணம் செய்த கப்பல் கடத்தப்பட்டு கொள்ளையிடப்பட்டு பின் பயணம் செய்த அனைவரும் சிறைப்பிடிக்கப்பட்டார்கள். இந்தச் செய்தி இஸ்லாமியக் கிலாபத்தின் தலைமையகத்தை எட்டியது. அன்றைய கலிஃபா அல் வலித் இப்னு அப்துல் மலிக்; இதுபற்றி அறிந்து இடம்பெற்ற அநீதிக்காக சிந்தின் ஆட்சியாளர்களை மன்னிப்புக்கேட்குமாறும் சிறைப்பிடிக்கப்பட்ட முஸ்லிம்களை விடுவிக்குமாறும் கோரும்படி, பக்தாத்திலே தனது ஆளுநராக இருந்த ஹஜ்ஜாஜ் பின் யூசுபிற்கு பணித்தார்கள். இப்பாரிய பணிக்காக முஸ்லிம்களின் படையொன்றும் சிந்து பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தப் இஸ்லாமியப் படைக்குத் தலைமை தாங்கியபடி வெறுமனவே 17 வயதே நிரம்பிய முஹம்மது பின் காஷிம் அல் தகாபி தனது படையுடன் சிந்திற்கு புறப்பட்டார்.
இஸ்லாமியப்படை சிந்துப்பிரந்தியமான தபெலை (தற்போதைய கராச்சி) அடைந்தவுடன் படைத் தளபதி கலீஃபாவின் கோரிக்கையை சி;ந்தை ஆட்சி செய்துகொண்டிருந்த ராஜா தாஹிரிடம் முன்வைத்தார். எனினும்; இந்த நியாயமான கோரிக்கையை ராஜா தாஹிர் அடாத்தாக மறுத்தார். எனவே முஸ்லிம் படையினர் ராஜா தாஹிரை எதிர்த்து தோற்கடித்ததுடன் சிந்தை கைபற்றி கிலாஃபத்தின் கீழ் கொண்டு வந்தனர்.அல்லாஹ்வின்; கட்டளையை மேலொங்கச் செய்யும் நோக்குடன் முஹம்மது பின் காஸிம் முஸ்லிம்கள் சிந்தில் பெற்ற வெற்றியை மேலும் விரிவுபடுத்தினார். இஸ்லாமிய அகிதாவால் உந்தப்பட்ட இந்த இராணுவம் முன்;றே ஆண்டுகளில் முல்தான் வரை படையெடுத்து சிந்தை முழுமையாக கைபற்றியதுடன் பஞ்சாப்பின் கீழ்ப்பகுதியையும் கிலாஃபத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.இந்திய உபகண்டத்தின் வடமேற்கு பிரதேசத்தையும் கைபற்றிய இஸ்லாமிய இராணுவம் அங்கு சிலைகளை வைத்து வணங்கிக்கொண்டிருந்தவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்து அவர்களை இஸ்லாத்தின் கீழ் கொண்டு வந்தது. முஹம்மது பின் காஸிமின் நிர்வாகம் முஸ்லிம்களையும் முஸ்லிம் அல்லாதவர்களையும் ஒரே விதமாகவே பரிபாலித்ததுடன் கைபற்றப்பட்ட பகுதிகளின்; அதிகாரிகளாக முன்பு கடமையாற்றிய முஸ்லிம் அல்லாதவர்களையே மீண்டும் அவர்களின் பதவிகளில் அமர்த்தியது. முஹம்மது பின் காஸிம் “மக்களுடனும், அரசுடனும் நேர்மையாக இருங்கள். மக்களின் இயலுமைக்கேற்ப வரிகளை தீர்மானித்துக் கொள்ளுங்கள்” என கிலாஃபத்தின் அதிகாரிகளிடம் பணித்தார்.
கலிஃபா இசாம் பின் அப்துல் மாலிக்கி;ன் ஆட்சிக் காலத்தில் (கிபி 724 - கிபி 743) முஸ்லிம்கள் காஷ்மிரையும் கங்ராவையும் கைபற்றினர். கிபி 754 கிபி - 775 காலப்பகுதியில் ஆட்;சி செய்த அப்பாசிய கலிஃபா அபு ஜாபர் அல் மன்சூரின் ஆட்சிக் காலத்தில் கந்தஹாரும் கைப்பற்றப்பட்;டதுடன் இந்திய உபகண்டம் முழுவதையும்; இஸ்லாமிய கிலாஃபத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற முனைப்பு தீவிரம் பெற்றது.
கிபி 786 - கிபி 809 காலப்பகுதியில்; ஆட்சி செய்த கலீஃபா ஹாரூன் அர் ரஷீத்தின் காலப் பகுதியில் முஸ்லிம்கள் தமது எல்லையை சிந்துவின் மேற்கு பகுதியிலிருந்து குஜாராத் வரை விரிவடையச் செய்தனர். இக்காலப் பகுதியில் இஸ்லாமிய இராணுத்தினரும் அங்கே குடியமர ஆரம்பித்ததுடன் புதிய நகரங்களும் தோற்றம் பெற்றன. இக்காலப்பகுதியில் சாதி முரண்பாடுகளில் சிக்குண்டு குப்ருடன் முரண்பட்டுக்கொண்டிருந்த பெரும்பான்மை இந்தியர்கள் உலகச்சகோதரத்துவ இயக்கமான இஸ்லாமிய உம்மத்துடன் கோர்க்ப்பட்டனர். குப்ரின் காரிருளில் மூழ்கியிருந்தவர்கள் இஸ்லாத்தின் து}ய பரகாசத்திற்குள் நுழைந்தனர். சிலை வணக்கத்திலிருந்து முற்;றாக விடுபட்டு ஏக இறைவனான அல்லாஹ்வை அடிபணிய ஆரம்பித்தனர். இவ்வாறு இன்று மேற்குலகின் திட்டமிட்ட சதியால் பிரிக்கபட்டு இந்தியா, பாகிஸ்தான், காஷ்மீர், பங்களாதேஸ் என இப்போது அழைக்கப்படும் அனைத்துப்பகுதிகளும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய கிலாஃபத்தின் கீழ் ஆழப்பட்டன.
எனவே இந்திய வரலாற்றைத் திரித்துக் கூறுபவர்களுக்கு மத்தியில் இந்தியா இஸ்லாமிய கிலாபத்தின் ஓரு பகுதி என்பதை நாம் உணர வேண்டும். சில கலிஃபாக்களின் கவனயீனத்தால் இந்தியா இஸ்லாமிய ஆட்சியின் மேற்பார்வையிலிருந்து சிறுகச் சிறுக விலகத் தொடங்கினாலும் அங்கு ஷாPஆ நிலைநாட்டப்பட்டு வந்ததுடன் பிரித்தானியர்கள்; இந்தியாவை கைபற்றும் வரை அது கிலாபத்தின் கீழே இருந்து வந்தது. முஸ்லிம் வரலாற்றாசிரியரான இப்னு கதPர் அல் திமிஷ்கி தமது புகழ் பெற்ற நு}லான அல் பதாயா வன்நிஹாயாவில் இந்தியா தாருள் இஸ்லாத்தின் ஒரு பகுதி எனக்குறிப்பிடுவதுடன் இந்தியாவின் கைப்பற்றுகை குறித்த பின்வரும் ஹதீஸையும் குறிப்பிடுகிறார்.
ரஸ}ல் (ஸல்) அவர்கள் கூரியதாக அபு ஹ_ரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள.
“இந்த உம்மத்தின் படை சிந்துக்கும், இந்தியாவுக்கும் அனுப்பபடும்”“அப்படையில் பங்கு பெற எனக்கு வாய்ப்பு கிடைத்து, நான் ஷஹீதானால் அது வெற்றியாகும். நான் இங்கு மீண்டும் திரும்பி வந்தால்; நான் விடுதலைபெற்ற அபு ஹ{ரைராவாவேன். அல்லாஹ் எனக்கு நரகிலிருந்து விடுதலை அழிப்பான் (அஹ்மத்)
கிபி 1556 - கிபி 1605 வரையான அக்பரின் ( அக்பர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி தீனே இலாஹி என்ற புதிய மதத்தை உருவாக்கிறானார்) காலப்பகுதி தவிர கிபி1205 - கிபி 1526 வரை டெல்லி சுல்தானியக் காலப் பகுதியிலும் கிபி 1526 - 1557 முகலாயக் காலப்பகுதியிலும் இந்தியா கிலாஃபத்தின் ஒரு மாகாணமாகவே இருந்தது.12ம் நு}ற்றாண்டின் இறுதி காலப்பகுதியில் கஸ்னி, முல்தான், சிந்து லாஹ}ர், டெல்லி என பல பகுதிகளை முஹ்மது கஹ்ர்; வரிசையாக கைபற்றத் தொடங்கினார். இவரின் ஜெனர்ல்களில் ஒருவரான குதுபுத்தீன் அய்பக் டெல்லியின் சுல்தானாக பதவியேறறார். பின்பு 13ம் நு}ற்றாண்டின் சம்சுதீன் இல்துமிஷ் கிபி1211 - கிபி 1236 என்ற முன்னால் துர்கிக் (வுரசமiஉ) போராளி டெல்லியின் அதிகாரத்துக்கு வந்தார். இவரின் வருகை பின்னை நாள்; சுல்தான்கள் அனைவருக்கும் மற்றைய பகுதிகளையும் கைபற்ற வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது.

கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் - பகுதி 4


இந்தியாவை பிரித்தானியா ஆக்கிரமிப்புச்செய்தலும் இந்திய முஸ்லிம்களின் எதிர் நடவடிக்கைகளும்.
காலனித்துவவாதிகளின் தொடர்ச்சியான சதிகளும் முஸ்லீம்களின் அறிவார்ந்த வீழ்ச்சியும் இந்திய உபகண்டத்தை காபிர்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தன. கி.பி 1600 இல் கிழக்கிந்தியக் கம்பனி பிரிட்டனால் இந்தியாவில் அமைக்கப்பட்டது. முஸ்லிம்களி;ன் நிலங்களையும் வளத்தையும் ஐரோப்பிய காலனித்துவ வாதிகள் படிப்படியாக விழுங்குவதற்கு ஆரம்பித்த அந்த காலப்பகுதியிலேயே சுதேசிகளான முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் இடையே பகையுணர்வை வளர்ப்பதற்கும் இவர்கள் ஆரம்பித்தார்கள். பின்னர் 1819 இல் பிரித்தானியா இந்தியாவை நேரடியாக ஆக்கிரமித்த போது முஸ்லிம்களின் கடுமையான எதிர்ப்பை சந்திக்க நேர்ந்தது. இந்த யுத்தத்தில் முஸ்லிம்களுக்கும் பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே வெற்றி தோல்விகள் மாறி மாறி வந்தன. பிரித்தானியர் சுதேசிகளாக இருந்த சில இந்துக்களினதும், சீக்கியர்களினதும், பௌத்தர்களினதும் உதவிகளைப் பெற்றுக் கொண்டனர். எனினும் 1846 வரை முஸ்லிம்களுடன் போராடிய 27 வருட காலப்பகுதியில் பிரித்தானியரால் அங்கு நிலையான கட்டுப்பாட்டை கொண்டு வர முடியவில்லை.
இக்காலப்பகுதியில் முகலாய விலாயாவின்; அதிகாரம் இந்தியாவின் சில பகுதிகளில் பலவீனமடையத் தொடங்கியது. சில ஆட்சியாளர்கள் இஸ்தான்புல்லில் இருந்து கிலாஃபாவின் உதவியைக் கோரினார்கள். உதாரணமாக 1779 இல் கன்னூரின் (cannore) மகாராணி, சுல்தான் அப்துல் ஹமீதுக்கு தன்னை ஆங்கிலக் கிழக்கித்தியக்கம்பனியின் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்குமாறு கோரி ஓர் இராஜதந்திரத் தகவலை அனுப்பியமையைக் கூறலாம். திப்பு கல்தான் தன்னை மைசூரின் ஆட்சியாளராக அங்கீகரிக்குமாறு கலீஃபாவிடமிருந்து ஒரு கடிதத்தைக் கோரிப் பெற்றுக்கொண்டார்.
பிரித்தானிய காலனித்துவவாதிகள் இந்தியாவிலிருந்து இஸ்லாமிய ஆட்சியை ஒழித்த போதும் இந்திய முஸ்லிம்கள் இஸ்தான்புல்லிருந்த கலீஃபாவுக்கு விசுவாசமாகவே இருந்து வந்தனர். அத்துடன் சைய்யித் அஹ்மத் ஷஹீத் போன்றோர் பிரித்தானியர்களுக்கெதிராக ஜிஹாதை தொடர்ந்து வந்தனர். உலமாக்களும் குறிப்பாக யகெஸ்டனில் (பிரித்தானியர்களின் இந்திய ஆட்சிக்காலப்பகுதியில் ஹேரட், கந்தஹார், சாபுல், கஸ்னி மற்றும் காபுல் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியான பஸ்தூன் கோத்திரத்தவர்களின் பகுதியாகும்).கிரேக்க – துருக்கியப் போரில் உஸ்மானிய கிலாஃபா வெற்றி பெற்றதன் முகமாக சுல்தானை கொளரவிப்பதற்காக இந்திய முஸ்லீம்கள் மௌலானா அப்துல் பாரியின் தலைமையில் கீழ் லக்னோவில் கூடியதையும் பால்கனிலும் திரிபோலியிலும் கிலாஃபாவுக்கு பின்னடைவு ஏற்பட்ட போது கிலாஃபாவை வீழ்த்த மேற்கத்திய சக்திகள் மேற்கொண்ட செயல்களை இந்திய முஸ்லீம்கள் எதிர்த்ததையும் இங்கே குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.
இந்தியாவின் புகழ்பெற்ற பிரித்தானிய எதிர்ப்பாளரும் கிலாஃபத்தின் ஆதரவாளருமான மௌலானா முஹம்மது அலி யௌஷர் (ரஹ்) லிங்கன் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்து விட்டு 1914ல் London Times இல் வெளிவந்த ஒரு கட்டுரைக்குப் பதிலடியாக Choice of Turks என்ற கட்டுரையை எழுதினார்கள். 1912ல் பால்கான் யுத்தம் தொடங்கிய போது பாதிக்கப்பட்ட துருக்கியருக்கு உதவிகளைக் கோரியதுடன் அங்கு ஒரு மருத்துவக் குழுவினரையும் அனுப்பினார்கள். இவையெல்லாம் எவ்வாறு இந்திய முஸ்லிம்கள் முஸ்லிம் உம்மத்தின் ஒரே தலைமையான கிலாஃபத்தின் மீது தமது முழுமையான அக்கறையை வைத்திருந்தார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
இந்தியாவில் புகழ்பெற்ற இஸ்லாமிய பல்கலைகழகமான தாருல் உலூம் தியோபந்தின் தலைவரான ஷெய்ஹ் அல் ஹிந்த் மௌலானா மஹ்மூத்; ஹஸன், பால்கன் மற்றும் திரிபோலி யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நிதி சேகரித்தார்கள். இவர் குறித்து மௌலானா ஹ{சைன் அஹ்மத் மதனி பின்வருமாறு கூறுகிறார்.“பால்கன் மற்றும் திரிபோலிய யுத்தம் மௌலானா மஹ்மூத் ஹஸன் மனதில் கடுமையான சோகத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அவர்கள் தாருல் உலூமின் ஸ்தாபகரில் ஒருவரான மௌலானா காசிம்; நனாவுட் (சோவியத் துருக்கிப் போரில் கலீஃபாவுடன் இணைந்து பணியாற்றியவர் ) பின்பற்றிய பாதையை தானும் தெரிவு செய்து கொண்டார்கள். அவர்கள் தன்னை இஸ்லாத்துக்காக அர்பணித்ததுடன் உஸ்மானிய சாம்ராஜியத்துக்கு தன்னாலான உதவிகள் பலவற்றை செய்தார்கள். அவர்கள் தாருல் உலூமை மூடி விடுமாறு பத்வா வழங்கியதுடன் உஸ்மானிய சாம்ராஜியத்திற்காக நிதி சேகரித்ததுடன் மாணவர் குழுக்களை துருக்கிக்;கு அனுப்பியதுடன் இதில் ஒரு குழுவுக்கு தானே தலைமை தாங்கிச் சென்றார்கள். எனினும் அவர் தான் உஸ்மானிய சாம்ராஜியத்துக்கு செய்த உதவிகளால் திருப்த்தியடையவில்லை. பால்கன் போரின் எதிர்விளைவுகள் இவரைப் போன்ற முஸ்லிம் இலட்சியவாதிகளைச் பெரிதும் சோர்வடைய செய்தது. ஐரோப்பியர்கள் இஸ்லாத்தின் ஒளியை அணைக்க சதி செய்வதை இவர்கள் உணர்ந்து கொண்டார்கள். மேலும் ஸ்குயிப் போன்ற பிரித்தானிய ஆட்சியாளர்கள் முஸ்லிம்களுக்கு செய்த அநியாயமும், ரஷ்யர்கள் முஸ்லிம்களுக்கு இழைத்த கொடுமைகளும், துருக்கியில் ஏற்பட்ட பிளவும் வெள்ளைக்காரர்களின் நீண்ட நாள் கனவு நனவாகப்போகிறது என்ற நம்பிக்கையை இவர்களிடையே ஏற்படுத்தியது (Nagsh – e - hayat , Vol2 , pg . 140 )
முதலாம் உலகப்போர் காலப்பகுதியில் இந்தியப்பள்ளிவாசல்களில் தொடர்ச்சியான தொழுகைகள் இடம்பெற்றதுடன் அவர்களின் குத்பாக்களில் சுல்தானினது நலன் வேண்டியும் அவரது இராணுவத்தின் வெற்றிவேண்டியும் பிரார்த்தனையும் செய்யப்பட்டது. இன்னுமொரு தலை சிறந்த தலைவரான மௌலானா சௌகத் அலியிடம் ஏன் உங்களது குத்பாவை துருக்கிய சுல்தானின் பெயரால் ஓதுகிறீர்கள்? எனக் கேட்கப்பட்டபோது “இஸ்லாமிய கலீஃபாவும் துருக்கி சுல்தானும் ஒரே நபராக இருக்கும்போது என்னைக் குறை கூற முடியாது”எனக்கூறினார்கள்(The Khilafah movement, Gail minault, Oxford University press, 1982,p.55 ).
இந்திய முஸ்லீம்களின் முயற்சியை கிலாஃபா அங்கீகரித்ததுடன் தனக்கு உதவிசெய்யுமாறும், பிரித்தானியருக்கெதிராக போராடுமாறும் கேட்டுக்கொண்டது. இஸ்தான்புல்லின் பிரசுரிக்கப்பட்டு வந்த கிலாஃபாவின் அராபியப் பத்திரிகையான “அல்ஜவைத்” இன் ஒரு பிரதியை இஸ்தான்புல்லிருந்து சுமார் 8000 மைல் தொலைவிலுள்ள இந்தியாவின் தாருல் உலூம் மாணவர்களுக்காக அப்பத்திரிகையின் முகாமையாளர் அனுப்பி வந்தாh(sawaneh Qasmi;Vol 2, p.329).
நாம் முன்பு குறிப்பிட்ட ஷெய்ஹ் அல் ஹிந்த் மௌலானா மஹ்மூத் ஹஸன் கிலாஃபாவிற்கு நேரடி ஆதரவு வழங்கியதுடன் அதன் செயற்பாட்டிற்காகவும் கடுமையாக உழைத்தார். அவர் ஹிஜாஸிற்கு பயணம் செய்தபொழுது கிலாஃபாவின் வாலியையும், கலீஃபாவின் உதவியாளர்களையும் மக்காவில் சந்தித்தார். பிரித்தானியாவுக்கெதிராக இந்தியாவில் போராடும் முஸ்லீம்களுக்கு உதவுமாறு கோரிய ஷேய்ஹிற்கு வாலி சில ஆவணங்களை வழங்கினார். இதில் முக்கியமானது அவர் இந்திய முஸ்லீம்களுக்கு எழுதிய கோரிக்கையாகும். அதில் பிரித்தானியாவுக்கெதிரான போராடத்தைத்தொடர்வற்காக ஷெய்ஹ் அல் ஹிந்தை பாராட்டியிருந்ததுடன் முஸ்லீம்கள் தமது உதவிகளை அதிகமாக வழங்கவேண்டும் எனவும் வழியுறுத்தியிருந்தார். கிலாஃபத்திலிருந்து இந்திய முஸ்லீம்களுக்கு தாம் பொருளுதவி அனுப்பவதாகவும் அதில் அவர் உறுதியளித்திருந்தார். மக்காவின் வாலி எழுதிய இந்த ஆவனம் ‘காலீப் நமாஹ்’ என்று அறியப்படுகிறது. 1334 இல் ஹஜ்ஜை நிறைவேற்றிய ஷெய்ஹ் அல் ஹிந்த் கிலாஃபாவின் அதிகாரிகளான அன்வர் பாஷாவையும், ஜமால் பாஷாவையும்; சந்தித்தார். பிரித்தானியாவுக்கெதிராகப் போராடும் இந்திய முஸ்லீம்களை பாராட்டி அன்வர் பாஷாவும் அவர்களுக்கு கடிதம் எழுதினார். ‘காலீப் நமாஹ்’ ஐ ஒத்திருந்த இக்கடிதமும் பிரித்தானியர்களுக்கெதிரான இந்திய முஸ்லீம்களின் போராட்டத்திற்கு உத்மானியா கிலாஃபா பொருளுதவி செய்வதாகவும் உறுதியளித்திருந்தது. மேலும் உத்மானிய கிலாஃபாவி;ன் ஊழியர்களும் பொதுமக்களும் ஷெய்ஹ் அல் ஹி;ந்திடம் நம்பிக்கை வைக்குமாறும் அவருக்கு பொருளுதவி செய்யுமாறும் இக்கடிதத்தில் வேண்டப்பட்டிருந்தனர். இக்கடிதததின் பிரதிகள் இந்தியாவுக்கு இரகசியமான கடத்தப்பட்டதுடன் பிரித்தானிய உளவுத்துறையின் சவால்களையும் தாண்டி யகெஸ்டன்; முழுதும் வினியோகிக்கப்பட்டன [The prisoners of malta(Asiran-e-malte),maulana Ulama-a1-Hind ]
பிரித்தானியாவின் பின்னணியிலிருந்து இயக்கிய ஷரீப் ஹ}சைனினதும் அவரது ஆட்களினதும் சதியை இந்திய முஸ்லீம்கள் அறிந்திருந்ததுடன் அவர்கள் பிரித்தானியாவால் மேற்கொள்ளப்பட்ட ஹிஜாஸ{க்கான உணவுத்தடையையும் கடுமையாக எதிர்தார்கள்.
Colonel T.E. Lawrence இன் விசமப்பிரச்சாரங்களும், அவர் அரபியில் ஆற்றிய உணர்ச்சி பூர்வமான உரையும், ஷரீப் ஹ{சைனுக்கும் சேர் ஹென்றி மெக்மேகனுக்குமிடையே இடம்பெற்ற ரகசிய ஒப்பந்தமும் ஹிஜாஸில் வசித்த மக்களை துருக்கிக்கு எதிராக கிளர்ந்தெழ எவ்விதத்திலும் உதவவில்லை. இந்த இலக்கை அடைய பிரித்தானிய அரசு இன்னும்பல காட்டுமிராண்டித்தனமாக மனிதாபிமானமற்ற பல திட்டங்களை கையாண்டது.அவற்றை ஷெய்ஹ் அல்; இஸ்லாம் மௌலானா ஹ}சைன் அஹ்மத் மதானி பின்வருமாறு விளக்குகிறார்.“ஹிஜாஸ{க்கான உணவு வழங்கல் நிறுத்தப்பட்டுவிட்டது. ஹிஜாஸ{க்கான கடைசி உணவுக்கப்பல் ஹிஜ்ரி 1334 ஷபரில் வந்தடைந்தது. உணவு வழங்கல் நிறுத்தப்பட்டதால் விலைகள் பெருமளவில் உயர்ந்தன. மக்கள் பட்டினியில் வாடினார்கள். இந்திய முஸ்லீம்களின் போராட்டத்தின் காரணமாக ஹிஜ்ரி 1334 ஜமாதி அல் ஸானியில் Fairozi Aganboat சில ஆயிரம் அரிசி மூட்டைகளுடன் கல்கத்தாவிலிருந்து புறப்பட்டது.அந்த மூட்டைகள் கூட ஏடன் துறைமுகத்தில் பலவந்தமாக தரையிறக்கப்பட்டன. ஹிஜாஸிலிருந்து உத்மானிய சாம்ராஜ்ஜியத்தின் ஆதிக்கம் முற்றாக இல்லாமல் போன பிறகே அவை ஜித்தாவிற்குள் அனுமதிக்கப்பட்டன(The Prisonesrs of Malta (Asinain-e-malta), maulana Syed Muhammed miah, jamiat ulama-1-Hing, English edition, P.45)
ஷெய்ஹ் அல் ஹிந்த்; மௌலானா மஹ்மூத் ஹசனை பிரித்தானியார்கள்; 3 ஆண்டுகள் மோல்டாவில் சிறையிலடைத்தார். உஸ்மானியா கிலாஃபாவை விட்டுக்கொடுக்காமையும், சத்தியத்தின் பால் உறுதியாக நின்றமையுமே இதற்கு காரணமானது. உஸ்மானிய கிலாஃபத்துடனான விசுவாசத்தை நிறுத்திவிட்டு ஷரீப் ஹ}சைனுக்கு ஆதரவாக பத்வா ஒன்றை வழங்குமாறும் பிரித்தானியா அவரை மிகவும் பலவந்தப்படுத்தியது.
ஷெய்ஹ் அல்; ஹிந்த் ஹிஜ்ரி 1335 சபர் மாதம் பிறை 23 இல் (21, பெப்ரவரி 1917) துரோகி ஷரீப் ஹ{சைனினால் மக்காவில் வைத்து கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்த்து மௌலானா ஹ{சைன் அஹ்மத் மதானி, மௌலானா அஸீஸ் குல், மௌலானா ஹக்கீம் நுஸ்ரத் ஹ{சைன், மௌலானா வாஹீத் அஹ்மத் போன்றோடும் பிரித்தானிய அரசினால் சிறைப்பிடிக்கப்பட்டு கெய்ரோவினூடாக மால்டாவிற்கு அனுப்பப்பட்டனர்.
மௌலானா மஹ்மூத் ஹஸன் 3 ஆண்டுகளும் 4 மாதங்களும் சிறைவாசம் அனுபவித்த பின் விடுதலை செய்யப்பட்டு 1920 ஜுன் 8 இல் பம்பாயை வந்தடைந்தார். இவர் மால்டாவில் இருந்து திரும்பிய அதே காலப்பகுதியிலேயே இந்தியாவில் கிலாஃபத் இயக்கம் தோன்ற ஆரம்பித்தது.நிஸாரதுல் மாரிப்( அல் குர்ஆன் கற்றலுக்கான நிலையம் ) ஹிஜ்ரி 1321 இல் முஜாஹித் மௌலானா உபைதுல்லாஹ் சிந்தி அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இஸ்லாத்துக்கு எதிரான பிரச்சாரத்தை முறையடிக்கும் வகையில் முஸ்லீம் புத்திஜீவிகளை பயிற்றுவித்து இஸ்லாமிய சிந்தனைகளை பரப்புவது இந்த நிலையத்தின் நோக்கமாக இருந்தது. இந்த இயக்கத்தால் பிரித்தானியர்கள் எதிர்கொண்ட சவால்களை பிரித்தானிய அரசாங்கத்தின் மத்திய உளவுத்துறையின் The petition of the Brithsh Queen Vs Moulana Obaidullah Sindhi என்ற கீழ்வரும் அறிக்கையில் காணலாம்.
“மௌலானா உபைதுல்லாஹ் சிந்தி தாருள் உலூம் தியோபந்தை தனது மிஸனரிகளின் (முஜாஹீதீன்கள்) பயிற்சி முகாமாகப் பாவிக்க முடியாதிருந்தது. ஆகவே இந்த இலக்கை அடைவற்காக ஒரு மத்ரஸாவை (நிஸாரதுல் மாரிப்) டெல்லியில் அமைக்க அவர் முடிவுசெய்தார். அதன் பெயருக்கு ஒப்ப குர்ஆனை சரியான முறையில் போதிப்பதே அதன் நோக்கமாக இருந்தது. அங்கு அரபியும் கற்பிக்கப்பட்டதது.” ( The petiton of the Brithsh Queen Vs Moulana Obaidullah Sindhi, section 47 )
“நிஸாரதுல் மாரிப், இந்த போதனைகளுக்கு புறம்பாக புரட்சிக்காரர்கள் இரகசியமாகக் கூடுமிடமாகவும் இருந்தது.” (The petition of the British queen vs Maulana Obaidullah Sindhi, section 20)
இந்தியாவிலிருந்து பிரித்தானிய ஆட்சியை துடைத்தெரியும் நோக்குடன் செயற்பட்ட முஸ்லிம் புரட்சிக்காரர்களின் கூடும் இடமாக நிஸாரதுல் மாரிப் இருந்ததாக பிரித்தானியர்கள்; குறிப்பிடுகின்றனர். இதில் ஹக்கீம் அஜ்மல் கான், Dr. முக்தார் அஹ்மத் அன்சாரி, மௌலானா சௌகத் அலி, முஹம்மது அலி ஜௌகர், மௌலானா ஸபர் அலி கான், மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆகியோரும் மேற்கூறிய நபர்களில் அடங்குவர்.
வெளிநாட்டு இறக்குமதிகளைப் புறக்கணிக்குமாறும், பிரித்தானிய அரசாங்கத்துக்கெதிராக ஒத்துழையாமையைக் கடைப்பிடிக்குமாறும் முஸ்லிம் உலமாக்களும், சிந்தனையாளர்களும் கேட்டுக் கொண்டனர். இதற்கு ஆதரவாக மக்களைத் திரட்டும் நோக்கில் தொழிலாளர் மாநாடு(Mo’tamar al-ansar) என்ற பெயரிலும் மௌலானா அப்துல் கலாம் ஆசாதின் பத்திரிகையான அல்ஹிலாலின் பெயரிலும், மௌலானா முகம்மது அலி ஜௌகரின் பத்திரிகையான The Comrade இன் பெயரிலும் கூட்டங்கள் ஒழங்கு செய்யப்பட்டன. மேலும் இவர்கள் பிரித்தானிய அரசுக்கெதிரான ஆக்கங்களை தமது பத்திரிகைகளில் பிரசுரித்தார்கள் என்ற குற்றத்திற்காக மௌலானா அப்துல் கலாம் ஆசாத் அவர்களும் மௌலானா முஹமது அலி ஜௌஹர் அவர்களும் கி.பி. 1911 – 1915ம் ஆண்டுவரை சிறையில் அடைக்கப்பட்டார்கள்.எனவே மேற்கூறிய ஆதாரங்களிலிருந்து பார்க்கும்போது இந்திய முஸ்லிம் தலைவர்களும், புத்திஜீவிகளும் கிலாஃபாவுக்கு வழங்கிய ஆதரவு சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தப்படுகிறது. “முஸ்லிம்களை பாதுகாப்பதற்கான ஒரே வாள் உஸ்மானிய சுல்தானிடமே இருக்கிறது” என்று மௌலானா அப்துல் கலாம் ஆசாத் அவர்கள் தனது பத்திரிகையான அல் ஹிலாலில் 1912 நவம்பர் 6 குறிப்பிட்டிருந்தார்கள். மேலும் “கிலாஃபத் என்பது ஷரிஆவின் ஒரு முக்கிய விடயமாகும். அது வஹி மூலம் கடமையாக்கப்பட்டுள்ளதுடன் அது அல்லாஹ்வின் நிறுவன அமைப்புமாகும். அதன் அதிகாரிகளுக்கு கட்டுப்படுவது பர்ள் ஆகும்.” எனவும் குறிப்பிட்டிருந்தார்கள்.

கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் - பகுதி 3

விலாயா அம்மாவுக்கான (General Governorship) இஸ்லாமிய அனுமதி.
குலஃபாக்களால் இந்திய உபகண்டத்துக்கு விலாயா அம்மா வழங்கப்பட்டிருந்தது. இது ஷரியாவால் ஏற்றுக்கொள்ளபட்ட ஒரு நடைமுறையாகும். குலஃபாக்கள் விலாயாக்களை (மாகாணங்களை) பற்றி விசாரிக்கும் பொறுப்பில் கவனயீனமாய் இருந்தது உண்மையென்பதுடன் கவர்ணர்களை நேரடியாக தெரிவு செய்யாமல் பிராந்தியங்களில் தாமாக ஆட்சிக்கு வந்தவர்களை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இந்த கவர்ணர்களை கலீஃபா ஏற்றுக்கொண்டதால் இவர்களுக்கு சட்டபூர்வ அதிகாரம் கலீஃபாவால் வழங்கப்பட்டது.
கிலாஃபத்தின் வீழ்ச்சிக்கு பின்னர் தலைசிறந்த உலமாக்களால் எழுதப்பட்ட (“The Ruling System of Islam”) “இஸ்லாமிய ஆட்சி முறை” என்ற புத்தகத்தில் இரு வகையான விலாயாக்களும் அவற்றுக்கான இஸ்லாமிய ஆதாரங்களும் விவரிக்கப்பட்டிருந்தன. இந்த நூலின் கீழ்வரும் பகுதிகள் இதனை வலியுறுத்தி நிற்கின்றன.“கவர்ணர் கலீஃபாவின் உதவியாளர்: கலீஃபா வழங்கிய அதிகாரத்தின்படியே அவர் செயற்படுவார். விலாயாக்களுக்கு வரையறைகள் இல்லை. ஆகவே ஆட்சி சம்பந்தமாக கலீஃபாவால் நியமிக்கப்பட்ட எவரும் கவர்ணராகலாம். கவர்ணர் எந்த பகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை வரையறுக்குமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
விலாயாக்கள் இருவகைப்படும். ஓன்று பொதுவானது (Genaral), மற்றையது சிறப்பானது (Specific). பொது விலாயாவில் விலாயாவிற்குட்பட்ட ஆட்சி தொடர்பான அனைத்தும் உள்ளடகப்பட்டிருக்கும். விலாயாவிக்கு ஒருவர் நியமிக்கப்படுகிறார் என்றார் அந்த நாட்டின் அல்லது மாகாணத்தின் இமாரா அவருக்கு வழங்கப்படுவதாகக் கொள்ளாமல் இங்கு மக்களின் சாதாரண செயற்பாடுகள் மேற்பார்வை செய்யப்படும். இங்கு மேற்பார்வை செய்வதற்கான பொதுவான பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டிருக்கும். சிறப்பான இமாராவைப் பொருத்தவரை கவர்ணர் இராணுவத்தை நிர்வகித்தல், மக்களை நிர்வகித்தல், எல்லைகளைப் பாதுகாத்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு போன்ற விடயங்களிலேயே அதிகாரம் வழங்கப்பட்டு ஏனையவை கலிஃபாவால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். அவருக்கு நீதித்துறை தொடர்பிலோ, கரஜ் (நிலவரி) மற்றும் சதகா வசூலிப்பு போன்ற அதிகாரங்கள் இருக்காது.
ரஸ{ல் (ஸல்) அவர்கள் பொதுவான வாலியை நியதித்ததற்கு சான்றாக அமர் பின் ஹஸ்மை (ரழி) யெமனுக்கு நியமித்தமையை கொள்ளலாம். அதே போன்று அலி பின் அபுதாலிபை (ரழி) யெமனின் நீதித்துறைக்கு விசேடமாக நியமித்தமையை விசேட (விலாயா காஸ்ஸா) உதாரணமாகக்கொள்ளலாம்.
குலஃபாக்களும் இது தொடர்பில் ரஸ{ல்(ஸல்) அவர்களைப் பின்பற்றியிருந்தனர். உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் முஆவியா பின் அபு சுபியானை(ரழி) ஷாமிற்கு பொதுவான வாலியாக நியமித்திருந்ததுடன், அலி (ரழி) அவர்கள் அப்துல்லாஹ் பின் அப்பாஸை(ரழி) பஸராவுக்கான சிறப்பு வாலியாக நியமித்திருந்தார். இங்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ{க்கு(ரழி) நிதித்துறை தவிர்ந்த மற்றைய விடயங்களில் அதிகாரம் வழங்கப்பட்டிருந்ததுடன் நிதித்துறைப் பொறுப்பு சியாதிற்கு வழங்கப்பட்டிருந்தது.
இரண்டு வகையான விலாயாக்கள் முன்பு காணப்பட்டன. ஓன்று சலாஹ்வுக்கான விலாயா மற்றையது கரஜுக்கான விலாயா. இதனாலேயே வரலாற்று நூல்களில் விலாயாக்களுக்கு இரு வேறுபட்ட பெயர்கள் உபயோகிக்கப்பட்டன: ஒன்று சலாஹ்வுக்கான இமாரா, மற்றையது சலாஹ்வுக்கும் கரஜுக்குமான விலாயா. இங்கு சலாஹ் என்ற பதம் மக்களை தொழுவிப்பது என்பதை மட்டும் குறிக்காது மாறாக நிதித்துறை தவிர்ந்த சகல விடயங்கள் தொடர்பான ஆட்சியையும் குறிக்கும். சலாஹ் மற்றும் ஹராஜ் ஆகிய இரண்டு விலாயக்களும் ஒருவருக்கு வழங்கப்பட்டால் அது பொது விலாயா(விலாயா அம்மாவாக) கருதப்படும். ஒரு விலாயா சலாஹ் அல்லது கரஜுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டு இருந்தால் அது சிறப்பான விலாயாவாகக்கருதப்படும். விலாயாக்களை பொது விலாயா என்றோ சிறப்பு விலாயா என்றோ நீதித்துறை விலாயா என்றோ இராணுவத்திற்கான விலாயா என்றோ வரையறுப்பதற்கான அதிகாரம் கலீஃபாவுக்கு உண்டு. வாலிக்கான கடமைகளை ஷரீஆ வரையறுக்கவில்லை. இதனால் வாலிக்குரிய எல்லாக்கடமைகளையும் செய்ய வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. எனினும் பொதுவாக வாலியினுடைய கடமையை ஆட்சி புரிவது எனலாம். மேலும் அவர் கலீஃபாவின் உதவியாளராக இருப்பதுடன் குறிப்பிட்ட பகுதிக்கு அமீராகவும் இருப்பார். இவை அனைத்தும் ரஸ{ல்(ஸல்) அவர்களின் செயற்பாடுகளில் இருந்து பெறப்பட்ட முடிவுகளாகும். வாலியை பொதுவான வாலியாகவோ சிறப்பான வாலியாகவோ நியமிக்க ஷரீஆவில் இடமுண்டு.
ரஸ{ல்(ஸல்) அவர்கள் ஃபர்வா பின் மூசாயிக்கை(ரழி) முராத், சுபைர் மற்றும் மிஸ்ஹாக் கோத்திரங்களுக்கு நியமித்தமையும் அவருடன் காலித் பின் சயீத் பின் அல் ஆஸை(ரழி) சதகாவுக்கான வாலியாக அனுப்பியமையும் இப்னு ஹிஷாமின் சீராவில் காணலாம். ரஸ{ல்(ஸல்) அவர்கள் சியாத் பின் லபீத் அல் அன்சாரியை(ரழி) சதகாவுக்கான வாலியாக ஹத்ரமவ்த்துக்கு அனுப்பியமையும் அலி (ரழி) நஜ்ராவுக்கு சதகாவையும் ஜிஸ்யாவையும் வசூலிக்க அனுப்பியமையும் அவரையே யெமனுக்கு நீதிபதியாக அனுப்பியமையும் அல் ஹாக்கிமில் பார்க்கலாம்.
“ரஸ{ல்(ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபலை(ரழி) அல் ஜனதின் மக்களிற்கு குர்ஆனையும் இஸ்லாமிய சட்டதிட்டங்களையும் கற்பிப்பதற்கும் அவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவதற்கும் அனுப்பிவைத்தார்கள்” என்ற விடயம் இஸ்திஆப் என்ற புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. யெமனின் ஆமில்களிடமிருந்து சதகா வசூலிப்பதற்கான அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. ரஸ{ல்(ஸல்) அவர்கள் உஹதுக்கு படையெடுத்தபோது போது இப்னு உம் மக்தூமை(ரழி) மதீனாவின் சலாவிற்காக நியமித்தமையை இப்னு ஹிஷாமின் சீராவில் காணலாம்.

கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் - பகுதி 2

அதிலிருந்து தொடர்ந்து வந்த 100 ஆண்டுகளில் டெல்லி சாம்ராஜியம் என அழைக்கப்பட்ட அவ்வாட்சி கிழக்கு நோக்கி வங்காளம் வரையும், தெற்கு நோக்கி டெக்கன் வரையும் விரிவடைந்தது. அந்த டெல்லி சாம்ராஜ்ஜியத்தை 5 வேறுபட்ட அரச பரம்பரையினர் ஆட்சி செய்தனர். அவர்கள் ஸ்லேவ் பரம்பரை(1206 - 1290), ஹல்ஜி பரம்பரை(1290 – 1320), துக்லக் பரம்பரை(1320 – 1413), சைய்யித் பரம்பரை(1414 -1451), லோடி பரம்பரை(1451 – 1526) என அழைக்கப்பட்டனர்.பின்னர் மத்திய ஆசியாவிலிருந்து தோன்றிய பாபரினால் டெல்லி சாம்ராஜியம் 1526 இல் கைப்பற்றப்பட்டு முகலாய சாம்ராஜியம் தோற்றம் பெற்றதுடன் அவரே முதலாவது முகலாய ஆட்சியாளராக தோற்றம் பெற்றார். அவரின் மரணத்திற்கு பின்னர் அவரின் மகன் ஹ}மையுன் (1530 – 1556) ஆட்சிக்கு வந்தார். போபாலில் அமைந்துள்ள அரச நு}லக ஆவனங்களின்படி பாபர் தனது மகனுக்கு பின்வரும் உயிலை எழுதினார் எனத் தெரிய வருகிறது. இந்த உயில் பாரின் தவறுகளையெல்லாம் தாண்டிப்பார்க்கும்போது அவர் இஸ்லாத்தினை நீதியான முறையில் அமுல்செய்யவேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருந்தார் என தெளிவாகக் காட்டுகிறது.
“ எனது மகனே! பின்வரும் விடயங்களை கவனத்திற்கொள். மத hPதியான பாரபட்சங்களுக்கு உனது மனதில் இடங்கொடுக்காதே. மக்களின் மத hPதியான உணர்வுகளையும், வழிபாடுகளையும் கவனத்திற்கு கொண்டு அவர்களுக்கு மத்தியில் நீதி செலுத்துவாயாக. இத்தேசத்தவர்களின் மனதை வெல்வதற்காக பசுக்களை அறுப்பதை தவிர்த்துக்கொள். அது உன்னை மக்களின் பால் நெருக்கமடையச்செய்யும். எந்த மதத்தினரின் வழிபாட்டிங்களையும் அழிக்கவோ, தேசப்படுத்தவோ கூடாது. நாட்டிலே அமைதி ஏற்படும்படி மக்கள் அனைவரின் மீதும் நீதி செலுத்து. இஸ்லாம் கொடுங்கோண்மை அக்கிரமம் எனும் ஆயுதத்தால் போதிக்கப்படுவதைவிட அன்பு ஆதரவு எனும் ஆயுதத்தால் சிறப்பாக போதிக்கப்படலாம். ஷியா , சுன்னி வேறுபாடுகளை புறம்தள்ளிவிடு. வேறுபட்ட பருவ காலங்களை காண்பதைப்போலவே மக்களின் வேறுபட்ட தன்மைகளையும் பார்.”
வரலாற்றை திரிபு படுத்தும் வரலாற்றாசிரியர்கள் நிறைந்திருக்கும் சூழலில் இந்திய வரலாற்றில் முஸ்லிம்களின் ஆட்சி பற்றி நாம் எங்கிருந்து தகவல்களைப்பெறுகிறோம் என்பதில் மிகவுமே கவனம் செலுத்த வேண்டும். இந்திய முஸ்லிம் ஆட்சியாளர்கள் சிலர் சில இஸ்லாமிய சட்டங்களை பிழையாகப்பயன்படுத்தினார்கள் என்பதையும், சில அநீதிகளை செய்தார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். எனினும் இந்தியா இஸ்லாமிய கிலாஃபத்தின் ஒரு பகுதியாக இருந்ததும், அங்கே ஷரிஆ சட்டங்களே அமுல்படுத்தப்பட்டது என்பதும் மறைக்க அல்லது மறுக்க முடியாத உண்மையாகும். சில இந்திய மாநகரங்கில் காணப்படும் நிதிமன்ற ஆவணங்களை பார்க்கும்போது, மக்களின் பிரச்சனைகளைத்தீர்ப்பதில் இஸ்லாமிய ஷரிஆச் சட்டங்களைத்தவிர வேறொரு மூலாதாரத்தை அந்நீதிமன்றங்கள் கொண்டிருந்தாகத் தெரியவில்லை.
ஷரிஆச்சட்டங்களில் சிலதை தவறாகப்பயன்படுத்துவது என்பது, இஸ்லாமிய கிலாஃத்தின் ஆட்சியையும், வாலி(ஆளுநர்கள்),மற்றும் ஆமில் ( நகராதிபதி) ஆட்சியையும் இல்லாது செய்துவிடாது. பல ஹதீஸ்கள் ஆட்சியாளர்ளகள் அநியாயக்காரர்களாக இருந்தாலும் கூட அவர்கள் வெளிப்படையான குபர்ரினை (குபர் புவா) வெளிப்படுத்தாது அல்லது செய்யாது ஷாPஆவினை அமுல்படுத்தும வரை அவர்களுக்கு கட்டுப்படும்படி கூறுகின்றன.
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அல்லாஹ்வின் து}தர் (ஸல்) அவர்கள் கூறியதாகக் கூறுகிறார்கள். “ உங்கள ஆட்சியாளர் காய்ந்த திராட்சைகள் போன்ற முடியுடைய அபிஸீனிய அடிமையாக இருந்தால்கூட அவருக்கு செவி சாயுங்கள், கட்டுப்படுங்கள்”
இன்னுமொரு அறிவிப்பில் “ அவர் அல்லாஹ்வின் கிதாபைக்கொண்டு வழிநடத்தினால்” என வந்துள்ளது. அவ்ப் இப்னு மாலிக்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “ ரஸ}ல்(ஸல்) சொல்ல நான் கேட்டேன், “ உங்களிடையே சிறந்த தலைவர்கள் என்பவர்கள் யாரென்றால் நீங்கள் அவர்களை நேசிப்பீர்கள், அவர்களும் உங்களை நேசிப்பார்கள். அவர்களுக்காக நீங்கள் பிரார்த்திப்பீர்கள், அவர்களும் உங்களுக்காக பிரார்த்திப்பார்கள். உங்களிடையே கெட்ட தலைவர்கள் யாரென்றால் நீங்கள் அவர்களை வெறுப்பீர்கள், அவர்களும் உங்களை வெறுப்பார்கள். நீங்கள் அவர்களை சபிப்பீர்கள், அவர்களும் உங்களைச் சபிப்பார்கள்.” அதற்கு நாங்கள் கேட்டோம். “எனவே அவர்கள் மீது நாங்கள் போர் அறிவிக்கக்கூடாதா?” ரஸ}ல் (ஸல்) கூறினார்கள், “ இல்லை, அவர்கள் உங்கள் மத்தியில் ஸலாஹ்வை நிலைநாட்டும் வரை. எச்சரிக்கை! எவரேனும் தம்மீது ஆட்சிசெலுத்தும் வாலி பாவம் செய்வதைக்கண்டால் அல்லாஹ்வுக்கு எதிராக செய்யப்படும் அந்த தீமையை அவர் வெறுக்கட்டும். ஆனால் அவர் கட்டுப்பாட்டிலிருந்து (பைஆ) தனது கையை எடுக்க வேண்டாம். (முஸ்லிம்)
அல்லாஹ்வின் து}தர்(ஸல்) கூறிய ஹதீஸை அபுதாவூத்திலும், அஹ்மத்திலும் பதிந்திருக்கிறார்கள். “அபு தர்ரே! போர் வெற்றிப்பொருட்களை கைப்பற்றி வைத்துக்கொண்டு அதனை உங்களுக்கு தருவதற்கு ஏவெரேனும் ஒரு வாலி (ஆளுநர்) மறுத்தால் அந்த விசயத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? அவர் கூறினார் “ உங்களை சத்தியத்து}துடன் அனுப்பியவன் மீது ஆணையாக, நான் எனது வாளை உயர்த்தி உங்களை வந்து அடையும் வரை போராடுவேன்.” இதற்கு ரஸ}ல்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “நீங்கள் சொன்னதை விட சிறந்ததொன்றை நான் கூறட்டுமா? நீங்கள் பொறுமையைக்கடைப்பிடித்து என்னை வந்து அடையும் வரை அதனைப் பேணுவதாகும்.”
இந்தியா கிலாஃபத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்தது என்ற உண்மையை இந்து வரலாற்றாசிரியர்கள் கூட ஏற்றுக்கொள்கிறார்கள். சுசி சர்மா என்ற இந்து எழுத்தாளர் தனது புத்தகமான “ “ Caliphs and Sultans – Religious Idealogy and Political Praxis” என்ற தனது புத்தகத்தில் பின்வருமாறு கூறுகிறார்.
“டெல்லி ராஜ்ஜியம் (1205–1526) இருக்கும் வரை அது அப்பாசிய கலீஃபாக்களின் கீழிருந்து முஸ்லீம்களின் சாம்ராஜியத்தின் ஒரு சட்டரீதியான பகுதியாகவே இருந்து வந்தது. சுல்தான்கள் தம்மை கலீஃபாவின் பிரதிநிதிகள் என்றே கருதியதுடன் அதன் மூலமான நிர்வாகத்திற்கான சட்ட ரீதியான அங்கீகாரத்தை பிரதிநிதிகள் என்ற நிலையிலேயே பெற்றுக்கொண்டனர். நிர்வாகத்தின் உச்ச அதிகாரம் கலீஃபாவிடமே இருந்ததால் ஏனைய நிர்வாகிகளும் சிற்றரசர்களும் கலீஃபாவின் சார்பிலேயே அரச அதிகாரத்தை பிரயோகித்தார்கள்”. (Caliphs and Sultans – Religious Idealogy and Political Praxis, page 247).
“மூன்றாம் பஹமனி முஹமது ஷாஹ் (1463-1482)அவர்கள் உத்மானிய சுல்தான் இரண்டாம் முஹம்மது அவர்களைப்பார்த்து “நீங்கள் கலீஃபாவாக இருக்கத் தகுதியானவர்கள்” எனப் பாராட்டுகிறார். அத்துடன் துருக்கிய உத்மானிய இலச்சினையை தமது அரச இலச்சினையாக பிஜாபுர் இராச்சியம் உபயோகப்படுத்தியிருந்தது. குஜராத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய மாலிக் அயாஸ் என்பவர் முதலாம் சுல்தான் சலீமை “உலகின் கலீஃபா” என தெரிவித்திருந்தார். முகலாய மன்னர்கள் துருக்கிய சுல்தான் மீது வைத்திருந்த மரியாதையை டெல்லிக்கும் இஸ்தான்புலுக்கும் இடையே பிரதிநிதிகள் சிலர் சென்று வந்தமை காட்டுகிறது. சுல்தான் சுலைமானுக்கு ஹ}மாயுன் ( இந்திய ஆட்சியாளர் ) எழுதிய கடிதத்தில் சுல்தான் சுலைமானை சிறந்த குணநலன்கள் கொண்ட கலீஃபா என வர்ணித்திருந்ததுடன் அவரின் ஆட்சி நிலைக்க வேண்டுமென பி;ரார்தித்திருந்தார்,“அவன் (அல்லாஹ்) உம்மை உலகின் கலீபாக அனுப்பி வைத்தான்” என்ற குர்ஆன் வசனத்தையும் அவர் மேற்கோள் காட்டியிருந்தார். சுல்தான் இப்ராஹீம் சாஜஹானுக்கு அனுப்பிய கடிதத்தில் “தாம் உலக அரசர்களின் பாதுகாவலர்” எனக்குறிப்பட்டதுடன் கலீஃபாக இருக்கும் பாக்கியத்தைப் பெற்றிருந்தார். சுல்தானிடமிருந்து துருக்கிய பிரதிநிதியான அஹமத் அகா ஓளரங்கசீப்புக்கு 1690ம் ஆண்டு ஒரு கடிதத்தை கொண்டு வந்தார். அதில் சுல்தான் இஸ்லாத்தின் பிரதிநிதி (கலீஃபா) என்பதை வலியுறுத்தும் குர்ஆனிய வசனங்கள் அடங்கிருந்தன. 1723ம் ஆண்டு முகமது ஷாஹ் (1719-1748) இஸ்தான்புல்லுடன் தொடர்புகளை ஏட்படுத்தியிருந்தார். முஹமது ஷாஹ் சுல்தானுக்கு அனுப்பிய கடிதத்தில்;. “பெரும் சுல்தான்களின் பாதுகாப்பிடம்” “மரியாதைக்குரிய “ மன்னர்களின் பாதுகாவலன்” ஷரிஆவின் போதனையை பரப்புபவர்” என வாழ்த்துகிறார். ( Sasi S. Sharma, Caliphs and Sultans – Religious Ideology and Political Praxis, page 248-249).
இந்தியாவுக்கும் கிலாஃபாவுக்கும் இருந்த தொடர்பை சில தொல்பொருட்கள் கூட எடுத்துக்காட்டுகின்றன. உதாரணமாக இந்தியாவின் வாலியாக இருந்த சுல்தான் அல்தமாஷ் (1211-1236) உடைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட வெள்ளி நாணயங்களில் ஒரு பக்கத்தில் கலீஃபா அல்முஸ்தன்ஸிரின் பெயர் பொறிக்கப்பட்டிருந்ததுடன் மறுபுறம் கலீஃபாவின் உதவியாளர் என்ற அல்தமாஷ்ஷின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.1258ல் பக்தாத் வீழ்தப்பட்டு கலீஃபா அல் முஸ்தன்ஸிர் மரணமடைந்த போதும் அவர் பெயர் பொறிக்கப்பட்ட நாணயங்களே இந்தியாவில்; பயன்படுத்தப்பட்டு வந்தன. ஷெய்க் அஹமத் சிரிந்தி போன்ற பெரும் இஸ்லாமிய அறிஞர்கள் கூட இந்தியா கிலாஃத்தின் கீழ்; இருக்கும்போதே உருவாகியிருந்தனர். பிக்ஹ{த்துறையின் அறிஞராக விளங்கிய இவர் முஜத்தித்; அல்ஃப் தானி என்றும் அறியப்பட்டார். அவர் மொத்தமாக 536 கடிதங்களை உத்மானிய ஆட்சியாளருக்கு அனுப்பியிருநதார். ஆது தோகுக்கப்பட்ட கடிதங்கள் அல்லது “மக்துபாத்” என்று அழைக்கப்பட்டது. அக்கடிதங்களினு}டாக அவர் தனது ஆலோசனைகளை கிலாஃபத்திற்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மற்றுமொருவர்தான் ஷாஹ் வலீயுல்லாஹ் டெஹ்லாவி (1703-1762) என்று அழைக்கப்பட்ட இந்தியாவில் பெரிதும் மதிக்கப்பட்ட உலமாவாகும். தெற்காசியா மற்றும் ஏனைய பகுதிகளிலும் பல இஸ்லாமிய இயக்கங்கள் அவரை ஏற்று மதிப்பளித்தனர். இஸ்லாம் தொடர்பான பல்வேறு தலைப்புக்களில் அவர் எழுதியுள்ளார். அவர் காலத்திலிருந்த பல அறிஞர்கள் குர்ஆனை அதன் மூல மொழினான அறபிலே மாத்திரம் கற்க வேண்டும் எனக் கருதிய போது குர்ஆனை உருதிலும் சமஸ்கிரதத்திலும் மொழிபெயர்த்த அவரின் மொழிபெயர்ப்புக்கள் காலத்தால் முந்தியவைகளாகும். காலப்போக்கில் அவரது செயற்பாட்டை இந்திய உலமாக்கள் ஏற்றுக்கொண்டனர்.“ஹ{க்கத் அல் பலகா அம்த் அல்-தவ்ஹீமத் அல்-இலாஹியா” என்பது அவரின் புகழ்பெற்ற இன்னொரு ஆக்கமாகும். “இலாலத் அல் கஃபா” என்ற தனது ஆக்கத்தில் கிலாஃபத்தைப் பற்றியும் அவர் எழுதியிருந்தார். அதில் “ இஸ்லாத்தை நிலைநாட்டுவதினு}டாகவும், அதன் கிளைகளான மார்க்க கல்வி, மார்கக் கிரிகைகளை மேற்பார்வை செய்யும் நிறுவனம், ஜிஹாத்; எனும் கட்டமைப்பு…, இராணுவ வழிநடாத்தல், நீதித்துறை உருவாக்கமும் சட்ட அமுலாக்கமும், குற்றச்செயல் கட்டுப்பாடு… போன்றவற்றினுடாக மக்களின் பொதுநலன்களின் அடிப்படையில் உருவான ஓர் தலைமைத்துவமே கிலாஃபாவாகும். இந்த அனைத்து நடவடிக்கைகளையும் து}தர் (ஸல்) அவர்களை பிரதிநிதித்துவம் செய்கின்றோம் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படவேண்டும்.” எனக் குறிப்பிடுகின்றார்.

கிலாஃபா இயக்கம்


கிலாஃபா இயக்கம்
கிலாஃபா இயக்கம் (1919-1924) 1919 செப்டெம்பரில் மௌலானா முஹம்மது அலி அவர்களின் சகோதரர் சௌகத் அலி, மௌலானா அப்துல் கலாம் ஆசாத், DR.முக்தார் அஹமத் அனசாரி, ஹஸ்ரத் மொஹானி ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. கிலாஃபாவை எவ்வாறாவது பாதுகாப்பதே அவர்கள் நோக்கமாக இருந்தது. கிலாஃபா மாநாடுகளை இந்தியாவின் வடக்கு நகரங்களில் அவர்கள் ஒழுங்கு செய்தார்கள். கிலாஃபா இயக்கத்திலிருந்த அறிஞர்கள் வேறுபட்ட பின்னணியிலிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக மௌலானா அப்துல் கலாம் ஆசாத் அவர்கள் ‘கைர் தக்லீதி’ (மத்ஹப்பை தக்லீத் செய்வது தடுக்கப்பட்டது) என்ற நிலைப்பாட்டிலிருந்தவர். எனினும் மௌலானா முஹம்மது ஹஸன் ஹனபி மதஹபை சார்ந்திருந்தார். ஆயினும் தமது வேறுபாட்டை கடந்து இவர்கள் அனைவரும் கிலாஃபாவை பாதுகாக்கும் நோக்கத்தில் ஒருங்கிணைந்தனர்.
இதன்படி 1919 பம்பாய் கிலாஃபத் குழு இரு முக்கிய இலக்குகளை வகுத்தது. முதலாவது ‘துருக்கிய சுல்தானின் பௌதீக ரீதியான அதிகாரத்தை தொடர்ந்து நிலைகொள்ள வலியுறுத்துவது’, இரண்டாவது ‘இஸ்லாமிய புனிதத் தளங்கள் மீதான சுல்தானின் கட்டுப்பாட்டை உறுதிப் படுத்துவது’.
1920ல் கல்கத்தாவில் இடம்பெற்ற வங்காள மாகாண கிலாஃபா மாநாட்டில் தலைமை உரையை ஆற்றிய மௌலானா ஆசாத் கிலாஃபாவின் முக்கியத்துவம் பற்றி பின்வருமாறு உரையாற்றினார்கள். “இந்த இயக்கத்தின் இலக்கு, முஸ்லிம் சமூகத்தை சரியான பாதையில் ஒழுங்குப்படுத்தி, நீதியை நிலைநாட்டி சமாதானத்தை உருவாக்கி, இறைவனின் வார்த்தைகளை உலகம் முழுக்கப் பரவச் செய்வதாகும். இவையனைத்தையும் செய்வதற்கு அதிகாரமிக்க கலீஃபா இருக்க வேண்டும்.” என அவர்கள் கூறினார்கள். இமாம் இல்லாத வாழ்வு இஸ்லாமிய முறையில் இருக்காது எனவும், இதனால் மரணத்தின் பின் இறைவனின் தண்டனையை எதிர்நோக்க வேண்டியிருக்கும் எனவும் அவர்கள் உறுதியாக நம்பினார்கள்.
1920ல் மஸ்லா-ஏ-கிலாபத் என்ற நு}லை மௌலானா ஆசாத் அவர்கள் வெளியிட்டார்கள். அதில் “கிலாஃபா இல்லாமல் இஸ்லாத்தின் இருப்பு சாத்தியமில்லை” இந்திய முஸ்லிம்கள் அதற்காக முழுமுயற்சியுடன் உழைக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்கள்.
இரண்டு வகை அஹ்காம் ஷரிஆக்கள் இருக்கின்றன. ஒன்று தனிப்பட்ட ஒவ்வொருவரும் நிறைவேற்ற வேண்டிய பர்ளுகளும் வாஜிப்களுமாகும். மற்றையது உம்மத்தினால் நிறைவேற்றப்பட வேண்டியதாகும். இது ஒரு கூட்டுப்பொறுப்பாகும். நாடுகளை கைபற்றல், அரசியல் பொருளாதார சட்டங்களை வகுத்தல் என்பன இதில் அடங்கும்” என இதே புத்தகத்தில் மௌலானா ஆசாத் அவர்கள் கூறியுள்ளார்கள்.
முஸ்லிம்களின் அரசியலையும் மதத்தையும் பிரிக்கும் ஒரு முஸ்லிமை நிராகரிப்பாளராகவே மௌலானா ஆசாத் கருதியதாக Peter Hardy தெரிவிக்கிறார். இந்தியாவில் முஸ்லிம்களின் அரசியல் பலம் பரிபோனமையும் கலீஃபாவின் அதிகாரத்துக்கு பல்வேறு சக்திகள் அச்சுறுத்தல்; விடுத்தமையும் முஸ்லிம் சமூகத்தலைவர்களை கவலையடையச்செய்தது. இந்தியாவிலிருந்து முஸ்லிம்கள் ஹிஜ்ரத் செய்ய வேண்டும் என பத்வா கொடுக்கும் அளவுக்கு அவர்கள் நிர்பந்திக்கப்பட்டார்கள்.“பிரித்தானியருக்கு ஒத்துழைக்காமல் இருப்பதற்கு மாற்றமாக ஹிஜ்ரத் செய்ய முடியும்” என 1920 ஜுலை 30ல் அப்துல் கலாம் ஆசாத் அவர்கள் அஹ்லே ஹதீஸ் என்ற பத்திரிகையில் பத்வா வழங்கிருந்தார்கள்.மௌலானா அப்துல் பாரி பின்வருமாறு ஒரு பத்வாவை வழங்கிருந்தார்கள்.“இங்கு வாழும் முஸ்லிம்கள் யாரும் பிரித்தானியருக்கு ஒத்துழைப்புக் கொடுக்க கூடாது. அது சாத்தியமில்லை எனில் அவர்கள் ஹிஜ்ரத் செய்ய வேண்டும்”.அர்ப்பணிப்புள்ள முஸ்லிம்கள் யாவரும் இந்தியாவிலேயே தொடர்ந்து ஒத்துழைக்காமல் வேலை செய்வார்கள் என நம்புகிறோம். இது சாத்தியமாகாவிடில் அவர்கள் ஹிஜ்ரத் செய்யட்டும்” என கிலாஃபத் குழு சார்பில் மௌலானா சௌகத் அலி அறிக்கை வெளியிட்டார்கள். இந்த பத்வாவின் விளைவால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இந்தியாவிலிருந்து ஹிஜ்ரத் செய்ய விரும்பினார்கள்.கிலாஃபா என்பது அரசியலுடன் மட்டும் தொடர்புடைய ஒரு பிரச்சனையல்ல. நரகின் தண்டனைக்கும் நரக விடுதலைக்கும் இடையிலான ஒரு பிரச்சினையாகும். துருக்கி அதன் எல்லைகளை இழந்தால் இஸ்லாமிய சித்தாந்தம் அபாயத்துக்குள்ளாகிவிடும். 1923 டிசெம்பர் 7இல் நடந்த கிலாஃபத் மாநாட்டின் பத்தாவது அமர்வில் இதை உறுதிப்படுதிப் பேசிய மௌலானா சௌகத் அலி அவர்கள்,“ஜஸீரதுல் அரபின் ஒரு அங்குளமாவது முஸ்லிம் அல்லாதவரின் ஆக்கிரமிப்பிற்குற்பட்டால் முஸ்லிம்கள் மன நிம்மதியுடன் வாழ முடியாது” என கூறினார்கள். (The Muslims, Shan Muhammad, Meenakshi Prakashan, 1981, Vol 2 page 209)
மொஹமத் ஆஸிப் அலி 1921 நவம்பர் 2ல் எழுதிய கடிதமொன்றில் கிலாஃபாவை நிலைநாட்டுவதன் இஸ்லாமியப் பொறுப்பை பின்வருமாறு கோடிட்டு காட்டினார்கள்.“துருக்கியின் பெருமை இஸ்லாத்தின் பெருமைக்கு நிகரானது உஸ்மானிய சாம்ராஜியத்தி;ன் இருப்பு முஸ்லிம் இனத்தின் வளர்சிக்கு இன்றியமையாதது, உஸ்மானிய சாம்ராஜியத்தி;ன் வீழ்ச்சியுடன் இஸ்லாமிய நாகரீகத்தின் பலம் இல்லாமல் போய்விடும், துருக்கி வீழ்ந்து விட்டால் இஸ்லாத்தால் நிலைக்க முடியாது, ஆகவே துருக்கியே இஸ்லாத்தின் முதுகெலும்பாகும்”. இக் கருத்தை ஆதரித்த மௌலானா முஹமது அலி அவர்கள் முஸ்லிம்களின் பொதுவான கருத்தை இது பிரதிபலிக்கிறது எனக் கூறினார்கள்.
பிராங்கி மஹால் (Firanqi Mahal) இன் ஆதரவுடன் 1919 ஜனவரி 26ல் லக்னோவில் இடம்பெற்ற Anjuman- Moid-ul-Islam தின் கூட்டத்தில் பின்வரும் தீர்மானம் எட்டப்பட்டது. “பிராங்கி மஹால் (Firanqi Mahal) தனது உண்மையான நம்பிக்கையை சுல்தான் முஹம்மது 6 அவர்களுக்கு தெரிவிப்பதுடன், இஸ்லாமிய அகீதாவின் அடிப்படையில் துருக்கியின் தற்போதைய சுல்தான்தான் கலீஃபா என்றும், கிலாஃபத் தொடர்பான தீர்மானத்தில் முஸ்லிமல்லாதவர்களின் தலையீடு இருக்கக் கூடாதென்றும் அறிவிக்கிறது.”சைய்யத் சுலைமான் நத்வி போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் கூட கலீஃபாவி;ன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியள்ளார்கள். “அல்லாமா நஸ்வி, இமாம் ராஸி, காஸி உலூத் ஆகியோர் இது தொடர்பில் விளக்கமாக ஆராய்ந்துள்ளனர். அவர்களின் முடிவே இறுதியானதாக இருக்க வேண்டும். பைஅத் இல்லாமல் மரணிக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் ஜாஹிலிய்யத்தில் மரணிக்கிறார்கள் என சஹீஹ் முஸ்லிமில் ரஸ{ல்(ஸல்) கூறியதாகப் பதியப்பட்டுள்ளது. (The Muslim Outlook, March 1920).
(1920 இல் பாரிஸ் நகரில் ஆற்றிய உரையொன்றில் மௌலானா முஹமது அலி அவர்கள் பின்வருமாறு கூறுகிறார் “ கிலாஃபத்தே உலக முஸ்லிம்களின் முக்கியமான அமைப்பாகும், துருக்கிய சுல்தானே நம்பிக்கையாளர்களின் தளபதியும் கலீபாக்களின் வழித்தோன்றலுமாவார் என உலகின் பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். கிலாஃபத்துக்கென்று போதுமான பிரதேசம் இருக்க வேண்டுமென்பதும் போதுமான இராணுவ வளங்களும் நிதி வளமும் இருக்க வேண்டும் என்பதும் இந்த அகீதாவின் முக்கிய பகுதியாகும்.
”முஹம்மது அலி உரையாற்றிய அதே கூட்டத்தில் சைய்யத் ஹ{சைன் பின்வருமாறு கூறுகிறார். “இஸ்லாம் இந்த உலகில் நிலைக்க வேண்டுமெனில் அதற்கு கிலாஃபத் இருக்க வேண்டியது மிகக் கட்டாயமாகும். 1400 ஆண்டுகால இஸ்லாமிய வரலாறும் இதையே காட்டுகிறது.” மௌலானா மொஹமத் அலி ஜோஹர் பின்வருமாறு கூறுகிறார் “துருக்கிய சுல்தானே கலீஃபா, அமீருல் முஃமினின், நம்பிக்கையாளர்களின் தலைவர், ரஸ{ல்(ஸல்)அவர்களின் வழித்தோன்றல். குர்ஆன் சுன்னா போன்றே கிலாஃபாவும் எமது மத விடயங்களில் ஒன்று” (My life a fragment, Mohamed Ali Johar p.g 41)
உலமாக்களே கிலாஃபா இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
1920 ஏபரல் 5ம் மற்றும் 6ம் திகதிகளில் இந்தியாவில் இடம்பெற்ற கிலாஃபா மாநாட்டில் பல்வேறு உலமாக்கள் கலந்து கொண்டு அங்கே பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் சில கீழ்வருமாறு:
1வது : கிலாஃபா தொடர்பில் மக்கள் அபிப்பராயத்தை ஏற்படுத்த உலமாக்கள் பாடுபட வேண்டும்.
2வது : கிலாஃபத்திற்கு எதிரான அறிஞர்கள் எனப்படுவோரும், முனாபிக்குகளும் புறக்கணிக்கப்படல் வேண்டும்.
7வது: தமது உயிரை கிலாஃபா பற்றி பேசவும் எழுதவும் அர்ப்பணிக்க வேண்டுமென தம்மை பின் பற்றுபவர்களிடம் உலமாக்கள் வாக்குறுதி வாங்க வேண்டும்.
9வது : அரசியலமைப்பு ரீதியிலான தேர்தல்களில் இருந்து முஸ்லிம்கள் விலகியிருக்க வேண்டும்.
டெல்லியில் 1920 நவம்பர் 19ம் 20ம் திகதிகளில் இடம்பெற்ற ஜம்மியதுல் உலமா ஹிந்தினுடைய அகில இந்திய நாட்டில் கிலாஃபாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆங்கிலேயர்களே முஸ்லிம்களின் பிரதான எதிரிகள், எனவே அவர்களை எதிர்ப்பது பர்ளாகும். உம்மத்தையும் கிலாஃபத்தையும் பாதுகாப்பது மிகத் தெளிவான இஸ்லாமியத் தேவையாகும். எனவே இந்த நாட்டிலுள்ள சகோதரர்கள் இதற்காக உதவிகளையும், ஒத்துழைப்பினையும் வழங்குவார்களேயானால் அதற்காக அவர்கள் நன்றிக்குறியவர்களாவார்கள்.
தாருல் உலும் தியோபத்தின் தலைவர் ஹெய்குல் ஹிந்த் மௌலானா மஹ்மூத் ஹஸன் அவர்கள் 1920 ஜுன் 8அன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். தனது விடுதலையின் பின்னர் கிலாஃபத் இயக்கத்தில் அவர் தன்னை ஈடுத்திக்கொண்டார்கள.; இதுகுறித்து மௌலானா ஹ{சைன் அஹமத் மதனி அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
“சிறையில் கடும் கஷ்டங்களை அனுபவித்துவிட்டு ஷெய்குல் ஹிந்த் இந்தியா திரும்பிய போது கூட காலனித்துவவாதிகளுக்கெதிரான அவரது போராட்ட மனப்பாங்கிலும், அவர் பிரித்தானியரை எதிர்த்த விதத்திலும் எவ்வித மாற்றமும் இருக்கவில்லை. martial law அமுலாக்கம்;, ரவ்லாத் சட்டத்தின் (Rawlatt law) அமுலாக்கம், நாட்டினுள் இடம்பெற்ற ஜாலியன்வாலா பாஹ் படுகொலைகள், உஸ்மானிய சாம்ராஜியத்திலிருந்தான பிரிவு, துருக்கிருக்கெதிராக இந்தியாவுக்கு வெளியே மனிதாபிமானமற்ற முறையில் இடம்பெற்ற நிகழ்வுகள் போன்றன அவரை கவலையடையச் செய்திருந்தன. அவர் பம்பாயில் காலடி எடுத்து வைத்தவுடன் மௌலானா அலியையும் கிலாஃபா இயக்கத்தின் மற்றைய உறுப்பினர்களையும் சந்தித்தார். லக்னோ Firqani Mahal இலிருந்து மௌலானா அப்துல் பாரியும் அஹமதாபாதிலிருந்து மகாத்மா காந்தியும் ஷெய்குல் ஹிந்தை வரவேற்க பம்பாய்க்குச்சென்றிருந்தனர். அவர்களுடனும் கிலாஃபத் இயக்கத்தின் ஏனைய உறுப்பினர்களுடனும் தனிப்பட்ட ரீதியிலும் பொதுவாகவும் கலந்துரையாடிய அவர்கள் இந்தியாவை விடுதலைக்காக அகிம்சைப் வழிப்போராட்டத்துக்கு ஒப்புக்கொண்டார்கள் (Naqsh - e – hayat, Vol 2, P. 247)
காலனித்துவவாதிகளுடன் ஒன்றாக செயற்படுவது தொடர்பில் ஷெய்க் அவர்கள் ஒரு பத்வாவை வழங்கியிருந்தார்கள். 1920இல் வெளியிடப்பட்ட அந்த பத்வா இன்றைய நிலைக்குக்குக்கூட பொருத்தமாக காணப்டுகிறது. அந்த பத்வாவில், “இஸ்லாத்தின் கௌரவத்தையும் மரியாதையையும் சீர்குலைக்க எதிரிகள் சகல வழிகளையும் கையாண்டுவிட்டனர். ரஸ{ல் (ஸல்) அவர்களினதும் ஸஹாபாக்களினதும் அதற்குப் பின் வந்தவர்களினதும் கடுமையான தியாகத்தின் விளைவாக வெற்றி கொள்ளப்பட்ட ஈராக், பலஸ்தீன், சிரியா ஆகியன பிரதேசங்கள் மீண்டும் எதிரிகளின் இலக்காகியுள்ளன. கிலாஃபத்தின் மரியாதை தடுமாறிக் கொண்டிருக்கிறது. பூமியிலுள்ள முஸ்லிம் உம்மத்தை ஒன்றிணைக்க வேண்டிய, இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய, முஸ்லிம்களின் உரிமைகளையும் உடமைகளையும் பாதுகாக்க வேண்டிய அல்லாஹ்வின் வசனங்களை நிலைநாட்ட வேண்டிய கலீஃபா தற்போது எதிரிகளால் சு10ழப்பட்டு ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இஸ்லாமியக்கொடி கீழிறங்கி பறக்கிறது. ஹஸ்ரத் அபூ உபைதா(ரழி), சாத் பின் அபி வகாஸ்(ரழி), காலித் பின் வலீத்(ரழி), அபூ அயூப் அன்சாரி(ரஹ்) போன்றோரின் ஆத்மாக்கள் இன்று அமைதியடையாமல் உள்ளன. முஸ்லிம்கள் தமது மதிப்பையும், கௌரவத்தையும், சுய மரியாதையும் இழந்தமையே இதற்குக்காரணமாகும். வீரமும், மார்க்கப்பற்றுமே அவர்களது விருப்பமாகவும் செல்வமாகவும் இருந்தது. கவனயீனத்தாலும், இலட்சியமின்மையாலும் அவர்கள் இதனை இழந்து விட்டார்கள்.”“முஸ்லிம்கள் சகல முஸ்லிம்களுக்கும் உதவாமலிருந்தது கஷ்டமான காலங்களில் மட்டுமல்ல. துரதிர்ஷ்டவசமாக காபிர்களின் நன்மதிப்பையும் நட்பையும் பெரும் பொருட்டு முஸ்லிம்களே தமது சகோதரர்களை கொலை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். முஸ்லிம்களே தமது சகோதரர்களின் இரத்தத்தில் நீந்த ஆரம்பித்து விட்டார்கள்.”
“இஸ்லாத்தின் குழந்தைகளே ! இந்த தேசத்தை விரும்புவர்களே ! இஸ்லாமிய உலகை எரித்து கிலாஃபாவைத் தீயிட்ட இடியும் நெருப்பும் அரபிகளிடமிருந்தும் இந்தியர்களிடமிருந்தும் தான் பெறப்பட்டது என்பதை என்னை விட நீங்கள் நன்கு அறிவீர்கள். முஸ்லிம் தேசங்களை கட்டுப்படுத்த கிறிஸ்தவர்கள் பயன் படுத்திய அதிகாரத்தையும் வளத்தையும் உங்களின் கடும் உழைப்பிலிருந்தே அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.” “கிறிஸ்தவர்களுடன் ஒன்று சேர்ந்து செயற்படுவதன் விளைவுகளை அறியாத முட்டாள் முஸ்லீம்கள் யாரும் இருக்கிறார்களா(From Fatwa of Moulana Mahmood Hasan on 16th Safar 1339 Hijri, Corresponding to October 29th, 1920, Georgian year, The Prisoners of Malta, (Asira’h - e- malta), Moulana Syed Muhammed Mian, Jamiat ulama- l- hind, English edition, page 78-79.)
இன்றைய உலமாக்களில் பலர் கூறுவது போல் இஸ்லாமும் அரசியலும் வேறுபட்டது என்பதற்கு மாற்றமாக இஸ்லாமும் அரசியலும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாத விடயங்கள் என்பதை அன்றைய உலமாக்கள் உணர்ந்திருந்தனர். கிலாஃபத்தின் வீழ்சிக்கு சில நாட்களுக்கு முன்பு ஜம்மியதுல் உலமா ஹிந்துடைய 4வது அமர்வு 1923 டிசம்பர் 24ல் காயாவில் நடைபெற்றது. இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் வந்திருந்த இஸ்லாமிய அறிஞர்கள், முஸ்லீம் சமூகத்தின் அரசியல் எதிர்காலம் குறித்து ஆழமாக கலந்து உரையாடினார்கள். நீண்ட ஆலோசனைகளின் பின் மதமும் அரசியலும் இஸ்லாத்தின் பிரிக்க முடியாத இரு அங்கங்கள் என்ற முடிவுக்கு வந்தனர்.இந்தியாவில் கிலாஃபா இயக்கத்தின் பரந்த அளவிலான செல்வாக்கினை பார்த்து இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படும் இந்துமதத்தைச் சார்ந்த மோகன்தாஸ் காந்தியும் கிலாஃபா இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினரானார்.
முஸ்தபா கமாலினால் 1924 மார்ச் 3 அன்று கிலாஃபா வீழ்தப்பட்டதுடன் கிலாஃபா இயக்கமும் மறைந்துவிட்டது. கிலாஃபாவை மீளமைப்பது சாத்தியம்மற்றது எனக் கருதிய பலர் பின்நாளில் பிரத்தானிய காலனித்துவ வாதிகளிடமிருந்து இந்தியாவை விடுதலை அடையச் செய்வதில் கவனத்தை செலுத்தினர். கிலாஃபா வீழ்தப்பட்ட அடுத்த நாளின் மௌலானா முஹம்மது அலி கௌஷர் கூறியதாக TIMES பத்திரிகை 1924 மார்ச் 4ல் பின்வரும் செய்தியை வெளியிட்டது.
“கிலாபாவின் வீழ்ச்சி இந்திய முஸ்லிம்களின் மனதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என எதிர்வு கூறுவது கடினமாகும். இஸ்லாத்திற்கும் நாகரிகத்திற்கும் இது ஒரு அழிவை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இஸ்லாமிய ஒற்றுமையின் சின்னம் என முஸ்லிம் உலகால் அறியப்பட்ட அமைப்பின் வீழ்ச்சி ஒற்றுமையீனத்தை ஏற்படுத்தும்…”கிலாஃபாவின் வீழ்ச்சிக்குப்பின் அவர் கூறிய அதே விடயங்களை நாம் இன்று காண்கிறோம். எனினும் கிலாஃபா வீழ்தப்பட்டு 80 ஆண்டுகளைத்தாண்டியுள்ள நிலையில் கிலாஃபா என்பது மேற்கின் அரசியல்வாதிகளினதும், தலைவர்களினதும், சிந்தனையாளர்களினதும் பேசுபொருளாக மாறிவிட்டதுடன் கிலாஃபாவை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்ற உணர்வு முஸ்லிம்களிடையே வலுப்பெற்று வருவதைக்கண்டு அவர்கள் தயக்கம் கொள்வதை எம்மால் வெளிப்படையாகவே காண முடிகின்றது. 2006 அக்டோபர் அன்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் ஜோர்ஜ் டபிள்யு புஷ் பின்வருமாறு கூறியிருந்தார்.
“ புத்திஜீவிகளை மிரட்டி மிதவாத அரசாங்களைக் கவிழ்த்து கிலாஃபத்தை நிலைநாட்டி விரிபுபடுத்த தீவிரவாதிகள் முயற்சிக்கின்றனர். தங்களது இலக்கை இடைய தீவிரவாத சக்திகள் மதத்தை உபயோகிக்கின்றனர். நாங்கள் வெளியேறுவதையே விரும்பும் அவர்கள் அரசுகளை கவிழ்க்க நினைக்கின்றனர். சுதந்திரத்துக்கு இடம் வழங்காத சித்தாந்த ரீதியான கிலாஃபத்தை; நிலைநாட்ட நினைக்கின்றனர்.”
கிலாஃபா இஸ்லாத்தின் உள்ளாந்த பகுதிகளின் ஒன்று என்பதை மேற்கு உணர வேண்டியிருக்கிறது. எனவே கிலாஃபத்தின் மீள்வருகைக்கு எதிராக பேசுவதை தவிர்த்துக்கொண்டு அது மீள வரும்போது எவ்வாறு அதனுடன் சேர்ந்து இயங்க முடியும் என்பதை சிந்திப்பதே அவர்களுக்கு சிறந்ததாகும்.
கிலாஃபாவின் அவசிய தேவையை இந்திய உபகண்ட முஸ்லிம்கள் மறந்து விடவில்லை. உபகண்டத்திற்குள்ளேயே அதை மீள நிலைநாட்ட இயக்கங்களும், சிந்தனையாளர்களும் குரல் கொடுத்து வருகிறார்கள் என்பது திருப்தியளிக்கிறது. எனினும் இன்னும் பாரிய முயற்சிகள் ஓர் தலைமைக்குக்கீழ் மேற்கொள்ளப்பட்டு முன்னெடுக்கப்படவேண்டும். கிலாஃபா மீள நிலைநாட்டப்படும் என்பதையும் அது இந்திய உபகண்டததை மீளவும் கைபற்றும் என்பதையும்; பின்வரும் ஹதீஸ் தெளிவாக குறிப்பிடுகிறது.
நபி (ஸல்) கூறியதாக அபு ஹ{ரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,“உங்களில் ஒரு கூட்டம் இந்தியாவை கைபற்றும்”.
மற்றொரு ஹதீஸில்“இரு கூட்டத்தாரை அல்லாஹ் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்து விட்டான். ஒரு கூட்டம் இந்தியாவை வெற்றிகொண்ட கூட்டம், மற்றையது ஈஸா இப்னு மர்யமுடன் இருக்கும் கூட்டம். (அஹமத், நஸாஈ)
எனவே மேல் குறிப்பிடப்பட்ட அல்லாஹ்வின் வாக்குறுதியை விசுவாசித்து எமது முன்னைய தலைவர்களின் தலைநிமிர்ந்த போராட்டங்களின் வழித்தடங்களிலே நாமும் விரைவாக முன்னேறுவதற்கு திடசங்கற்பம் பூணுவோம்.

Friday, February 11, 2011

‘கிலாபத்’ கவிதை

‘கிலாபத்’ வீழ்த்தப்பட்டது,தாங்க முடியாத சோகத்தால்இதயம் நிறைந்தது.
‘பலஸ்தீன்’ ஆக்கிரமிக்கப்பட்டது,அங்கத்தை துண்டாக்கிய வேதனைஉடலெங்கும் பரவியது.
‘ஆப்கான்’ அழிக்கப்பட்டது,வார்த்தைக்குள் வராத துயரம்கண்களை ஆறாக்கியது.
‘ஈராக்’ இடிக்கப்பட்டது,கனவிலும் காணாத கவலைதூக்கத்தை அபகரித்தது.
‘ஷரி அத்’ தை சாடினார்கள்,முழு ‘ஷரிஅத்தை’யும் அமுலாக்கும்‘கிலாபத்தே’ இலக்கென்றோம்..
குர்ஆனை மிதித்தார்கள்,ஒருவருக்கும் தயங்காமல்குரல் கொடுத்தோம்.ஓதி செயற்பட்டோம்.
தூதரை அவமதித்தார்கள்,ஒரு கணமும் ஓயாமல்பதில் கொடுத்தோம்.நபி வழியில் நாம் நடந்தோம்.
ஈமானை மறுக்கலாம்,இஸ்லாத்தை மறைக்கலாம்,முஸ்லிமை வெறுக்கலாம்,பல போர்கள் தொடுக்கலாம்,எமது இறுதி மூச்சும்இஸ்லாத்துக் கென்றோம் நாம்.
‘அபூ குரைப்’பின் சித்திரவதையும்,‘குவன்தனா மோபே’யின் சிறை வைப்பும்,அதிகார வர்க்கத்தின் அநீதியும்,முகவர் ஆட்சியிpன் அட்டூழியமும்,உளவுப்படையின் துன்புறுத்தலும்,மேற்குலகின் தலையீடும்,மீடியாவின் அபாண்டமும்,உச்ச கட்ட ஈமானின் …பரீட்சைகள் என்றோம் நாம்..
புனித பூமியை மீட்கவும்..ஆக்கிரமிப்பை அகற்றவும்..ஓன்று பட்டோம் நாம்.
குர்ஆனாய் நடமாடி..நபிவழியில் நாம் ஆள ..இன்றே உழைப்போம் வாருங்கள்.

‘வெற்றிவரை புரட்சி’- Revolution until victory

எகிப்தில் மிக பாரிய ஆர்பாட்டம் ‘வெற்றிவரை புரட்சி’ நடைபெறுகின்றது
எகிப்தின் ஜனாதிபதி முபாரக் அரசுக்கு எதிரான ஆர்பாட்டங்கள் 18 ஆவது தினத்தில் இன்று இதுவரை காணாத மக்கள் வெள்ளமாக காணப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன ஹுஸ்னி முபாரக் நேற்று இரவு பதவி விலகுவார் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்த மக்கள் பலத்த ஏமாற்றமும் கோபமும் அடைந்துள்ளனர் இதை தொடர்ந்து இன்று வெள்ளிகிழமை ஜும்மாஹ் தொழுகையின் பின்னர் மிக பாரிய அளவில் ஆர்பாட்டம் வெடித்துள்ளது.
எகிப்தின் தேசிய தொலைக்காட்சி மக்களால் சுற்றிவளைக்க பட்டுள்ளது ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக மக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையில் முறுகல் நிலை காணப்படுவதாகவும் அல் ஜஸீரா தெரிவிக்கின்றது முபாரக்கின் அறிவிப்பை நிராகரித்துள்ள மக்கள் ‘வெற்றிவரை புரட்சி’- Revolution until victory- என்று அறிவித்து நாடு தழுவிய அமைதி ஆர்பாட்டத்தில் குதித்துள்ளனர் விரிவாக எகிப்தின் இராணுவம் தற்போது முபாரக் அரசுக்கு சார்பான நிலை எடுத்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது
இணைப்பு-2 இதேவேளை நேற்று முபாரக்கின் உரை தொடர்பாக கருத்துரைத்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோசி ஒரு சர்வாதிகார அரசுக்கு எதிராக நடைபெறும் ஆர்பாட்டம் இஸ்லாமிய சர்வாதிகாரத்தை ஏற்படுத்தாமல் பார்த்து கொள்ளவேண்டும் ஈரானிலும் மன்னர் ஷா என்ற மேற்குலக ஆதரவாளருக்கு எதிராக நடைபெற்ற ஆர்பாட்டங்கள் இஸ்லாமிய சர்வாதிகாரத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளமை குறிபிடத்தக்கது

Wednesday, February 9, 2011

உமர் சுலைமான் இஸ்ரேலும் அமெரிக்காவும் முன்பே தெரிவு செய்யதுள்ள அதிபர்: விக்கிலீக்

உமர் சுலைமான் இஸ்ரேலும் அமெரிக்காவும் முன்பே தெரிவு செய்யதுள்ள அதிபர்: விக்கிலீக்

OurUmmah: விக்கிலீக் லண்டனை தளமாக கொண்டு செயல்படும் The Daily Telegraph க்கு வழங்கியுள்ள தகவலை The Daily Telegraph பத்திரிகை வெளியிட்டுள்ளது அதில் தற்போது எகிப்தின் துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள எகிப்தின் உளவு துறை தலைவர் உமர் சுலைமான் எகிப்தின் அடுத்த ஜனாதிபதியாக நியமிக்கப் படவேண்டும் என்று இஸ்ரேல் அமெரிக்காவிடம் தெரிவித்தமை வெளியிடப்பட்டுள்ளது, கடந்த 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இரகசிய பாதுகாப்பு கலந்துரையாடலின் போது உமர் சுலைமானை எகிப்தின் அடுத்த ஜனாதிபதிக்கு பொறுத்த மாணவராக இஸ்ரேல் எடுத்துரைத்துள்ள இரகசிய ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது
இஸ்ரேலின் யுத்த அமைச்சின் மூத்த ஆலோசகர் டேவிட் ஹாச்ஹம் -David Hacham- என்பவர் பல தடவைகள் இந்த வேண்டுதலை விடுத்துள்ளார் என்றும் இஸ்ரேலிய அமைச்சுக்கும் எகிப்து புலனாய்வு துறைக்கும் இடையான விசேட தொலை தொடர்பு தினமும் இயங்கி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது விரிவாக
வளைகுடா சமாதான முயற்சிகளுக்காக செயல்பட்டு வந்தவரான உமர் சுலைமான் ஒரு தடவை இஸ்ரேல் இராணுவம் எகிப்தை ஆக்கிரமித்தால் அதை நான் வரவேற்பேன் என்று தெரிவித்துள்ளார் இவர் தெரிவித்ததாக வெளியாகியுள்ள தகவலில் அயல் நாடான காஸாவில் இயங்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதை நிறுத்த இஸ்ரேல் இராணுவம் எகிப்தை ஆக்கிரமித்தால் அதை நான் வரவேற்பேன் என்று தெரிவித்துள்ளார்
வயதாகிக்கொண்டிருக்கும் ஹுஸ்னி முபாரக் வயது 83 தொடர்பில் கெய்ரோவில் இருக்கும் அமெரிக்கா தூதரகமும் , டெல் அவியும் எகிப்தின் உளவுத்துறை தலைவர் உமர் சுலைமானுடன் அடுத்த எகிப்தின் தலைவர் பற்றி தொடர்ந்து ஆலோசிக்கப் பட்டுவந்ததாகவும் தெரிவித்துள்ளது
அரபு முஸ்லிம் நாடுகளில் முக்கிய நாடாகவும் இஸ்ரேலுடனும் அமெரிக்காவுடனும் நெருங்கிய உறவு கொண்ட நாடான எகிப்தின் அரசியல் நிலைப்பாடு தொடர்ந்து பேணப்படவேண்டும் என்பதில் அமெரிக்காவும் இஸ்ரேலும் மக்களின் உரிமைகளுக்கு மேலாக மிகுந்த கரிசனை கொண்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டி காட்டுகின்றனர் தற்போது துணை ஜனாதிபதியாக முபாரக்கினால் நியமிக்கப்பட்டுள்ள உமர் சுலைமான் அமெரிக்காவின் முழு ஆதரவையும் பெற்றுள்ளார் என்பது குறிபிடத்தக்கது