Tuesday, December 21, 2010

காவிப் பயங்கரவாதம்

கொஞ்சம் வெளிவரும் இந்திய காவிப் பயங்கரவாதம் !!

ஹைதராபாத்தின் மக்கா மஸ்ஜித் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய அசிமானந்தா சாமியாருக்கு , 68 பேரைர் பலிகொண்ட சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்புச் சம்பவத்திலும் தொடர்பு உள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு ஏஜென்சியின் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன
மக்கா மஸ்ஜிதில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு குண்டுவெடித்தது. இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் இந்து பயங்கரவாதிகள் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில் நவம்பர் 19ம் தேதி 59 வயதாகும் அசிமானந்த்தை ஹரித்வாரில் வைத்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர் விரிவாக பார்க்க Video
அவரிடம் நடத்திய விசாரணையில் மெக்கா மசூதி குண்டுவெடிப்பில் தனக்குள்ள தொடர்பை அவர் ஒத்துக் கொண்டதுடன். மேலும் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பில் உள்ள தொடர்பையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார் என்று இந்திய தேசிய புலனாய்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது.
அதேவேளை அஜ்மீர் தர்கா, ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரியான சுனில் ஜோஷியை கொலைச்செய்தது அவரது ஆர்.எஸ்.எஸ் கூட்டாளிகள்தான் என மத்திய பிரதேச மாநில போலீஸ் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் ஏ.டி.எஸ் கைதுச்செய்த குண்டுவெடிப்புடன் தொடர்புடைய ஹர்ஷத் பாய் சோலங்கிதான் இந்த வாக்குமூலத்தை அளித்துள்ளார் அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் சாட்சியாக மாற சுனில் ஜோஷி திட்டமிட்டிருந்த காரணத்தினால் கொலைச் செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸ் கருதுகிறது .
மும்பையின் ஹேமந்த் கர்கரே மாலேகான் குண்டு வெடிப்புக்கு காரணம் பிரக்ஞைய தாகூர் என்ற இந்து காவிதான் என்றபோதுதான் இந்த இந்து பயங்கரவாதத்தின் முகத்திரை முதலில் கிழிய ஆரம்பித்தது.ஆர் எஸ் எஸ், பார”தீய” ஜனதா, சிவசேன போன்ற இந்து மதவெறி இயக்கங்களைச் சேர்ந்த காவிகள் இதற்கெல்லாம் காரணம் என்று முதலில் ஹேமந்த் கர்கரே என்ற அதிகாரி தெரிவித்தார் பின்னர் தான் புலனாய்வு அறிக்கை விவரங்கள் வெளிவர ஆரம்பித்தது.
ஹேமந்த் கர்கரே பின்னர் கொலை செய்யபட்டார் நேர்மையான ஒரு அதிகாரியின் மாறன் இதில் சந்தேகம் எழுப்பிய காங்கிரஸ் அமைச்சரின் பதவியே ஆட்டம் கண்டது அந்த அளவுக்கு இந்திய நிர்வாகத்தில் அணைத்து துறைகளிலும் இந்து பயங்கரவாதம் ஆழ ஊடுருவியுள்ளது என்பது இந்தியாவில் வெளிப்படையான உண்மை
இந்த நிலையில் பாபரி மஸ்ஜித் உடைத்து தகர்க்க காரணமாக இருந்த முக்கியமான அரசியல் புள்ளிகள் என்று கண்டுகொள்ளப்பட்ட 67 பேரில் சத்வி ரிதம்பரா முக்கியமானவர் இவர் இம்மாதம் 27ம் திகதி இலங்கை வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1992 டிசம்பர் 6ஆம் திகதி 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபரி மஸ்ஜித் இந்து பயங்கரவாதிகளால் உடைத்து தகர்க்கப்பட்டது. இதற்குத் தலைமை வகித்த 67 பேரில் சத்வி ரிதம்பரா முக்கியமானவர். இந்த காவி பயங்கரவாதியின் இலங்கை வருகையை தடுக்கும் முயற்சியில் சில இஸ்லாமிய அமைப்புகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது
http://ourummah.org/2010/12/21/%e0%ae%95%e0%af%8a%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/#more-2252

Babri Masjid Verdict

Babri Masjid Verdict - The failure of the judicial system of Capitalist India
A. Khalid Addehlawi

The verdict on Babri Masjid came amid a very tense and heated environment with a curfew like situation all over India. In some of the cities, an emergency holiday was declared for schools as well as offices.
The verdict on the title issue was announced and read to the public in the late afternoon at the high court in Allahabad, UP. The verdict came to be a source of happiness for some and sadness for others. For the Muslims whose right to the property was taken away and their hopes to rebuild the Babri Masjid broken, it was a sad day since they were given only one third of the disputed land and the allocated land will not be where the Babri Masjid stood since the title to it goes to the Hindus. The remaining two thirds will go to two different Hindu parties where the Ram Janambhoomi Temple and other Hindu religious structures would be built.
This verdict which evidently is not based on solid evidences rather on possibilities and assumptions establishes a dangerous precedent and shows the fallacy and the failure of the Secular democratic system which proves that the rights of the minorities cannot be guaranteed in this system.
The major premise upon which the final verdict was given was the finding of the Archaeological survey of India (ASI) where they found certain idols and scripts in Sanskrit which they claimed could have been from a temple that existed before the mosque was built, there is no historical proof that a temple ever existed in the disputed place. Furthermore the ASI's verdict which is based on their archaeological study is an incomplete one and prone to errors as any archaeological survey is open to debate and different inferences. It is noteworthy that the ASI did not take into consideration the fact that during the excavation there were graves and other artefacts which would prove that the site belonged to Muslims prior to the building of the mosque.
The Application of the same premise with regards to the existence of artefacts or other assumptions used during this trial on an international scenario will lead us to certain other conclusions, The Red Indians will have a larger right to run the White House (and they don't need archaeological evidences to prove that, history itself is a testament to it) and furthermore, the Aborigines will have the right to drive the Aussies out of Australia and the illegal entity of Israel will have a right to build a temple in the place of Masjid al Aqsa (they already are excavating tunnels under the masjid so as to weaken its foundation after the collapse of which they will have reason to debate the existence of the temple and hence their right to build it much akin to the reality of the Babri masjid, its destruction and eventually the Muslims losing the case in the favour of the Hindus). There are some evidences that prove the visit of Israeli Security officials visiting India just before the destruction of the Babri Masjid.
1. A verdict like todays may result in devastating results for the Muslims in the geopolitical scenario. Islam on the other hand guarantee's security and upholds the rights of the minorities that live in the Islamic State, The dhimmis (non Muslims citizens) in the Islamic state have more rights than the Muslim and the Prophet صلى الله عليه وسلم equated hurting the dhimmis to hurting himself صلى الله عليه وسلم and Allah سبحانه وتعالى.
The Messenger of Allah صلى الله عليه وسلم said: "He who hurts a dhimmi hurts me, and he who hurts me annoys Allah." Reported by al-Tabarani in Al-awsat on good authority.
The dhimmi enjoy the same economic benefits as Muslims. They can be employees, establish companies, be partners with Muslims and buy and sell goods. Their wealth is protected and if they are poor and unable to find work they are entitled to state benefits from the Khilafah's Treasury (Bait ul-Mal).
Cecil Roth mentions that the treatment of the Jews at the hands of the Ottoman State attracted Jews from all over Western Europe. The land of Islam became the land of opportunity. Jewish physicians from the school of Salanca were employed in the service of the Sultan and the Viziers (ministers). In many places glass making and metalworking were Jewish monopolies, and with their knowledge of foreign languages, they were the greatest competitors of the Venetian traders.
2. Umar ibn al-Khattab once passed by an old dhimmi begging at doors, and said: "We have not done justice to you if we have taken jizya from you in the prime of your youth and neglected you in your old age." He then ordered from the treasury what was suitable for him.
3. It was Aurangzeb the most misrepresented ruler in Indian history about the Mughal Empire who constructed a huge temple in Chitrakut (Uttar Pradesh) and made arrangements for the 'bhog' at this temple for generations. The firmaan (edict) for the construction of this temple written by Aurangzeb himself is still in possession of the mahant of the temple in Chitrakut near Allahabad. This is apart from the other firmaans by the same ruler for the allocation and building of temples at Mahakaleshwara, Ujjain, Balaji , Chitrakut, Umanand, Gauhati and the Jain of Shatrunjai and other temples and gurudwaras scattered over Northern India. These Firmaan's were issued from 1065AH (1659) to 1091AH (1685).
4. The verdicts in Islam are not given based on assumptions, hypothesis or possibilities rather they are based on solid evidences and clear proof and it is Islam that honours the rights of the minorities which is evidently nonexistent in the Capitalist democratic system.
The most famous example of this justice is in the legal trial of a Jew who stole the coat of Armour of Imam Ali (ra) as he was travelling to a battle. The judge Shurayh made no exception for Ali (ra) even though he was the Khaleefah, a Muslim and also off to fight in a battle so was in desperate need of his armour. Shurayh ruled in favour of the Jew and accepted his testimony in court. Although Ali had brought his son as a witness the judge according to the ahkam (rules of Islam) didn't except his son as the witness and awarded the armour to the jew. On seeing the justice the Jew excepted that he had stolen the armour and he embraced Islam.
The judge knew that Ali (ra) would not be lying but since he did not have any evidence the verdict was given in favour of the thief. This incident and thousands of other incidents of Islamic history show how just the Islamic system was.
Ironically today's judgement clearly showed that the judges even had differences among each other with Justice Sibgatullah Khan denying the destruction of any temple before the construction of the mosque in the disputed place. This in itself shows the contradiction in the verdict by the court. A move to the Supreme Court as proposed by many of the Muslim leaders will clearly result in a similar hopeless verdict, not because of the lack of evidences by the Muslims rather due to the failure of the Capitalist Judicial system.
Let us not forget that the Capitalist system has been unable to secure the rights of the people that live under it not to mention its failing values and systems. It is the capitalist system which has been unable to uplift the 300 Million odd dalits who are considered to be a backward caste from amongst the Hindus. Paradoxically its mind boggling how this system can give justice when they have not even provided the dalits with the basic right to enter any Hindu Temple (Dalits, considered to be a scheduled backward caste are looked down upon by the higher castes and do not have a right to enter temples except for the ones that are earmarked for them).
Unlike the English who massacred the Red Indians and eliminated them from existence and their culture or the Aryans who butchered the Sub Continental population thousands of years ago and destroyed their temples and drove the original population towards the south or the Spanish who undertook the inquisition and were responsible for the destruction of the Inca civilisation and the Aztecs, the Khilafah made sure that the security of places of worship of all religions whether the minority or the majority was taken care of, the millions of majority Hindus, Christians and Jews and the thousands of temples existent today all over India tell a story of tolerance , peace and justice of the Islamic Khilafah.
It is the Islamic system which through its sincere leadership, The Khilafah will be able to guarantee the rights of the minorities, Muslims and non-Muslims and uphold the sanctity of their sacred lands and establish a just and peaceful society much like it did during the Khilafah al Rashida.
The Prophet صلى الله عليه وسلم said: "The Imam is a shield behind whom you fight and protect yourself."

References
1. http://www.countercurrents.org/prashad261208.htm
2. Cecil Roth, ‘The House of Nasi: Dona Gracia
3. Abu ‘Ubayd al-Qasim ibn Sallam, ‘The Book of Revenue,' Translation of Kitab al-Amwal, Garnet Publishing Ltd, p. 42
4. Singhal, Damodar Prasad (2003). A History of the Indian People, Cosmo (Publications, India); New Ed edition. ISBN 8170200148.

Friday, December 17, 2010

“பலஸ்தீனரின் உரிமைகளுக்கு முன்னுரிமை ”

“பலஸ்தீனரின் உரிமைகளுக்கு முன்னுரிமை ” – கலாநிதி அபூசுஹ்ரி


கடந்த வியாழக்கிழமை -16.12.2010- கருத்துரைத்த அவர் அரபு லீக்கின் தீர்மானமானது இஸ்ரேலின் சட்டவிரோதமான குடியேற்ற விஸ்தரிப்பை மறைமுகமாக ஆதரிப்பதாகவே அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இஸ்ரேலுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இனி பேச்சுவார்த்தைகளை மட்டும் நம்பிக் கொண்டிராமல் பலஸ்தீனர்களின் உரிமைகளை மீட்டெடுக்கக்கூடிய பிற வழிமுறைகளைக் கைக்கொள்ள முன்வருமாறு அரபுநாடுகளை நோக்கி கலாநிதி அபூசுஹ்ரி அழைப்பு விடுத்துள்ளார்

கடந்த வியாழக்கிழமை -16.12.2010- கருத்துரைத்த அவர், .அரபு லீக்கின் தீர்மானமானது, இஸ்ரேலின் சட்டவிரோதமான குடியேற்ற விஸ்தரிப்பை மறைமுகமாக ஆதரிப்பதாகவே அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார் விரிவாக பார்க்க

இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்தி, அத்தகைய பயனற்ற முயற்சிகளுக்குத் தமது எதிர்ப்பை வெளிக்காட்டும் தெளிவான அறிக்கை ஒன்றை விடுப்பதோடு, அரபு-பலஸ்தீன் உரிமைகளைப் பாதுகாத்து, பலஸ்தீன் மக்களுக்கும் அவர்களின் போராட்டத்துக்கும் ஆதரவாகப் புதிய உத்திமுறைகளைக் கையாள்வதற்கு அரபுலகம் முன்வர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த புதன்கிழமை -15.12.2010- பலஸ்தீன் விவகாரத்தில் அமெரிக்காவின் “சீரியஸான” தலையீடு இடம்பெறும்வரை இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்துவதென அரபு லீக் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Monday, December 13, 2010

அமைதிப் பேரணி மீது இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் படை தாக்குதல்

கடந்த சனிக்கிழமை -11.12.2010- நேற்று அல் கலீல் அருகில் பெய்ட் உம்மார் பகுதியில் இஸ்ரேலிய பிரிவினைச் சுவருக்கு எதிராக இடம்பெற்ற வாராந்த அமைதிப் பேரணியினை இடைமறித்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை மேற்கொண்ட அடாவடித் தாக்குதலினால் பலஸ்தீனர்கள் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரின் தாக்குதலினால் பலஸ்தீனர்கள் பலரும் வெளிநாட்டு செயற்பாட்டாளர்களும் படுகாயமடைந்துள்ளனர். அமைதிப் பேரணியினர்மீது வீசியெறியப்பட்ட கண்ணீர்ப் புகைக்குண்டுகள், கைக்குண்டுகளினால் அனேகர் மயக்கமுற்றதோடு இன்னும் பலர் சுவாசிக்க முடியாமல் அவதிப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் சாட்சியமளித்துள்ளனர் விரிவாக பார்க்க
மேற்படி பேரணியில் பலஸ்தீனர்களோடு பிரேஸில், ஆர்ஜென்டீனா மற்றும் அமெரிக்க நாட்டுச் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவர்கள் தத்தமது நாட்டுக் கொடிகளோடு, 1967 ஆம் ஆண்டு எல்லைகளுடனான பலஸ்தீனைப் பெற்றுக்கொள்வது பலஸ்தீனர்களின் உரிமை என்பதான சுலோகங்களையும் ஏந்தியவாறு பேரணியில் கலந்துகொண்டனர்.
எதிர்பாராதவிதமாக அங்கே வந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் அமைதிப் பேரணியினர்மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடாத்தியதோடு, அமெரிக்கப் பிரஜையான செயற்பாட்டாளர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.

Saturday, December 11, 2010

விக்கிலீக்ஸ் ஸ்தாபகருக்கு நோபல் பரிசு

விக்கிலீக்ஸ் ஸ்தாபகருக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் ரஷ்யா

ரஷ்யாவின் ஜனாதிபதி திமித்ரி மெத்வெதேவ் தலைமையில், அரசசார்பற்ற மற்றும் பொது நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஜூலியனை விடுவிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும், அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசினை வழங்குவதற்கு பரிந்துரை செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளதாக, பிரிட்டனை தளமாக கொண்டியங்கும் ‘த கார்டியன்’ செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினர், ‘மாபியா குழுவினர்’ எனவும், ரஷ்ய பிரதமர் விளாடிமீர் புட்டின் ஒரு ‘அல்பா டாக்’ எனவும் அரச உயர் மட்டத்தலைவர்களிடையே கேலியாக பேசப்படுவதுண்டு என அண்மையில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசிய ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது விரிவாக பார்க்க
பாலியல் குற்றச்சாட்டின் பெயரில் கைதான ஜூலியன் அசாஞ்சே தற்சமயம் லண்டன் சிறைச்சலையில் தடுப்புக்காவலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சீன அரச எதிர்ப்பாளர் லியூ ஷியபோவிற்கு சமானாத்துக்கான நோபல் பரிசு கொடுப்பதை கடுமையாக எதிர்த்திருந்த ரஷ்யா, ஆசாஞ்சேவிற்கு இவ்விருதை வழங்க பரிந்துரை செய்வது, வேடிக்கையாகவா? அல்லது அமெரிக்காவுக்கு வஞ்சம் தீர்க்கவா? என்ற கேள்வி எழுப்படுகின்றது

Saturday, December 4, 2010

விக்கிலீக்ஸ்

விக்கிலீக்ஸ் ஆவணங்கள் உண்மையில் தகவல் கசிவா அல்லது அமெரிக்க பதிப்பா ?

இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமான ரகசிய ஆவணங்களை மூன்று தொகுதிகளாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் வெளியான ரகசிய ஆவணங்களால் பெரிதும் நன்மையடையப் போவது இஸ்ரேல்தான் என்று துருக்கி கருத்துரைத்துள்ளது.
விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்கள் சிலவற்றில் துருக்கியப் பிரதமர் ‘குறைந்தளவு வாசிப்பை உடையவர்’ ‘போதியளவு ஆய்வுத்திறனோ முன்னோக்குந்திறனோ அற்றவர்’ முதலான விமர்சனங்கள் உள்ளடங்கியுள்ளன. கடந்த வியாழக்கிழமை மத்திய கிழக்கு நாடுகளைப் பொறுத்தவரையில், மேற்படி இணையதளம் வெளியிட்டுள்ள ரகசிய ஆவணங்களினால் இஸ்ரேலே அதிகளவு நன்மையடையப் போகின்றது’ என துருக்கியின் உள்ளகத்துறை அமைச்சர் பஷீர் அதாலே குறிப்பிட்டுள்ளார் விரிவாக பார்க்க
அதேபோன்று ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நஜாதிடம் பிரஸ் தொலைக்காட்சி விக்கிலீக் மூலம் தகவல்கள் கசிந்தது குறித்து கேட்டபோது, “நான் உங்கள் கூற்றைச் சரி செய்ய விரும்புகிறேன். இந்த ஆவணங்கள் கசியவிடப்படவில்லை. இவை ஒரு ஒழுங்கமைப்பில் வெளியிடப்பட்டுள்ளன” என்று கூறினார்.
விக்கிலீக்ஸ் ஆவணங்களை வெளியிட்டதே அமெரிக்க அரசுதான். இதன் மூலம் அவர்களாகவே தீர்ப்பு எழுத விரும்புகின்றனர். இந்த ஆவணங்களுக்கு சட்ட மதிப்பு எதுவும் இல்லை. இந்த ஆவணங்களை வெளியிட்டதன் மூலம் அமெரிக்கா விரும்பும் அரசியல் மாற்றங்கள் எதுவும் ஏற்படப் போவதில்லை என்றும் ஈரானிய ஜனாதிபதி ஜனாதிபதி தெரிவித்தார்.
இஸ்ரேலின் நிர்பந்தங்களுக்கு அமெரிக்கா அடிபணிவதைக் குறித்த விபரங்களை வெளியிட்டால் மட்டுமே விக்கிலீக்ஸின் நம்பகத் தன்மையை உறுதிச்செய்ய இயலும் என அரபு உலகம் கருத்துத்துரைதுள்ளது
அத்தகையதொரு அதிர்ச்சி தகவலுக்காக தாங்கள் காத்திருப்பதாக பல அரபு முஸ்லிம் நாட்டு மக்கள் தெரிவிப்பதாக பெனின்சூலா செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் தவறான வெளி நாட்டு கொள்கைகளை விக்கிலீக்ஸ் வெளிப்படுதுகின்றது என்றால் டெல்அவீவிற்கும் வாஷிங்டன்னிற்கும் இடையே பரிமாறப்பட்ட ஆவணங்களை வெளியிட அவர்கள் தயாராக வேண்டும். அமெரிக்க அதிகாரிகள் அல்லது இஸ்ரேலின் மறைமுக உதவி விக்கிலீக்ஸிற்கு கிடைப்பதாக வளைகுடா நாட்டு மக்கள் கருதுகின்றனர். என்ற தகவல்களும் வெளிவருகின்றன
இந்த நிலையில் விக்கிலீக்ஸ் ஆவணங்கள் உண்மையில் தகவல் கசிவா அல்லது அமெரிக்கா தான் ஒரு குறித்த வெளிநாட்டு கொள்கை ஒன்றை உருவாக்கா தேவையான தகவல்களை திட்டமிட்டு விக்கிலீக்ஸ் என்ற இணையத்தளம் பெற்றுக்கொள்ள மறைமுகமாக அனுமதித்துள்ளதா ? என்பது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது இந்த நிலையில் விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ள தகவல்களின் தொகுப்பு ஒன்றை எமது OurUmmah.org வாசகர்களுக்கு வழங்குகின்றது.
இங்கு ‘என்வழி’ என்ற இணையத் தளத்தில் வெளியான ‘விக்கிலீக்ஸ் சொல்லும் வில்லங்க ரகசியங்கள்!!’ என்ற விக்கிலீக்ஸ் இணையத்தள சிறு தொகுப்பு ஒன்றை பதிவு செய்கின்றோம்
விக்கிலீக்ஸ் சொல்லும் வில்லங்க ரகசியங்கள்!!
2 ஜி அலைக்கற்றை விவகாரத்தையொட்டி மத்திய புலனாய் அமைப்புகள் அதிகாரத் தரகரான நீரா ராடியா-ஆ ராசா – கனிமொழி – பர்கா தத் – வீர் சங்வி ஆகியோரது பேச்சுக்கள் அடங்கிய 5000 ஒலிநாடாக்களை பத்திரிகைகளுக்கு வெளியிட்டு பரபரப்பேற்படுத்தியது. 500 மணி நேரம் ஓடக்கூடிய ஆடியோ பைல்கள் அவை.
இதை விட பரபரப்பான சமாச்சாரம் ஒன்று சர்வதேச அளவில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அது விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள சர்வதேச நாடுகளின் அரசியல் ரகசியங்கள்.
உலக போலீஸ் என்று கர்வமாக வலம் வந்த அமெரிக்காவை இன்று பெரும்பாலான நாடுகள் அல்பமாகப் பார்க்கின்றன, விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசிய ஆவணங்களைப் படித்த பிறகு.
இப்போது, ஒவ்வொரு நாட்டுக்கும் தனது தூதர்களை அனுப்பி, “விக்கிலீக்ஸ்’ சொல்வதை தயவு செய்து நம்பிவிடாதீர்கள்’, என்று கோரிக்கை விடுத்து வருகிறது அமெரிக்கா.
இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமான ரகசிய ஆவணங்களை மூன்று தொகுதிகளாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
இவற்றில் தலைபோகிற சமாச்சாரம் ஏதாவது இருக்கிறதா… அல்லது வெற்றுப் பரபரப்பு சமாச்சாரமா என்றால்… இனிமேல்தான் அதுபற்றிய ஒரு முடிவுக்கு வரமுடியும்.
இப்போதைக்கு பல பரபரப்பான சமாச்சாரங்கள், கிசுகிசு பாணியிலான அக்கப்போர்களே வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இரு பக்கத்து வீட்டுக்காரர்கள் பொரணி பேசுவதைப் போலத்தான் அமெரிக்க ஆட்சியாளர்களும் அவர்களது நட்பு நாடுகளும் பிற நாடுகளைப் பற்றி பேசி வந்திருக்கிறார்கள்.
‘இந்த தோணித் தலையன் லொள்ளு தாங்கலைடா மண்டையா” என்று நம்ம ஊர் கவுண்டமணி அடிக்கும் கமெண்டைப் போலவே, அமெரிக்க ஆட்சியாளர்கள் பிரான்ஸ், சவூதி, லிபியா, இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளின் தலைவர்களைப் பற்றி சகட்டு மேனிக்கு கமெண்ட் அடித்திருக்கிறார்கள். இப்போதைக்கு அவைதான் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன.
அவற்றைப் பார்க்கும் முன், முதலில் விக்கிலீக்ஸ் என்பது என்னவென்று பார்த்துவிடலாம்…
2006-ம் ஆண்டு ஜூலியன் அஸாங்கே என்ற ஆஸ்திரேலியரால் தொடங்கப்பட்டது விக்கிலீக்ஸ். இது ஒரு லாப நோக்கற்ற இணையதளம். இங்கே உலகின் அத்தனை அரசியல், வர்த்தக சாம்ராஜ்யங்களின் ரகசியங்களும் சேகரித்து பின் வெளிப்படுத்தப்படும்.
சர்வதேச அளவில் பத்திரிகையாளர்கள், புலனாய்வாளர்களுக்கு மிகப் பெரிய ஆதார தளமாக விக்கிலீக்ஸ் இருக்க வேண்டும் என்பதற்காகவும், சமூகத்தில் வெளிப்படைத் தன்மை நிலவ வேண்டும் என்பதற்காகவும் இந்தத் தளம் நிறுவப்பட்டதாக அஸாங்கே தெரிவித்துள்ளார்.
இந்த தளம், கடந்த 5 ஆண்டுகளாக, உலகமெங்கும் உள்ள அமெரிக்கா தூதரகங்கள், துணைத் தூதரகங்கள் வாஷிங்டனுக்கு அனுப்பி வைத்த முக்கிய ரகசிய ஆவணங்களை, அதிகாரிகள் மற்றும் தங்களின் சிறப்பு நிருபர்கள் மூலம் சேகரித்தது.
அப்படி சேகரித்த லட்சக்கணக்கான சர்வதேச அரசியல் ஆவணங்களை இப்போது தொகுதி தொகுதியாக வெளியிட்டு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.
அமெரிக்கா ஒவ்வொரு நாட்டிலும் வெறும் தூதரகங்களை மட்டும் வைத்திருக்கவில்லை. அதிகாரப்பூர்வமாக உளவுத் துறையையே நடத்தி வருகிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது விக்கிலீக்ஸ்.
கடந்த 2009-ல் முதல் முறையாக அமெரிக்கா தொடர்பான பல்வேறு இராணுவ ரகசியங்களையும், ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் விவகாரங்களில் அந்நாடு மேற்கொண்ட முடிவுகள் தொடர்பாகவும் பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது இந்த இணையதளம்.
ஈராக் போரில் கொல்லப்பட்ட 109,032 பேர்…
பின்னர் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22-ம் தேதி The Iraq War Logs என்ற தலைப்பில் 391,832 ஆவணங்களை வெளியிட்டு அதிர வைத்தது. உலகில் வெளியான மிகப் பெரிய ரகசிய ஆவண தொகுப்பு என்ற ‘பெருமையும்’ இதற்குண்டு.
ஈராக் போரில் அமெரிக்கா வெண்டுமென்றே செய்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை இதில் அம்பலமாக்கியது விக்கிலீக்ஸ். அமெரிக்காவின் நோக்கம் அங்குள்ள வளங்களைச் சுரண்டுவதே என்றும் அதற்குத் தடையாக இருப்பவர்களை ஒழிப்பதுதான் முதல் வேளை என்றும் இந்த ஆவணங்கள் அழுத்தமாக வெளிப்படுத்தின.
இந்தப் போரில் 2004-ம் ஆண்டி்லிருந்து 2009-ம் ஆண்டுவரை 109,032 பேர் உயிரிழந்த உண்மை அப்போதுதான் வெளியானது. இதில் சிவிலியன்கள் மட்டும் 66,081 பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளொன்றுக்கு 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர் இந்தப் போரில். ஆனால் இதனை அப்படியே அமுக்கி வைத்திருந்தது அமெரிக்கா.
இந்தியா நம்பத் தகுந்த நாடல்ல…
இந்தியாவைப் பற்றி அமெரிக்காவின் உண்மையான அபிப்பிராயம் மற்றும் பிற நாடுகள் எப்படி பார்க்கின்றன என்ற உண்மையும் வெளிவந்துள்ளது.
இந்தியாவை இன்றுவரை சந்தேகத்துக்குரிய நாடாகவே அமெரிக்கா பார்ப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. இதுவரை டெல்லியில் உள்ள தூதரகம் மூலம் 3,038 ரகசிய ஆவணங்கள் வாஷிங்டனுடன் பரிமாறப்பட்டுள்ளது. ஆனால், ஆவணங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இந்த ஆவணங்களில் உள்ள தகவல்களை அறிவதில் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அது சரி செய்யப்பட்டபின்னர் அது தொடர்பான தகவலும் வெளியிடப்பட்டுவிடும் என்று விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
தவிர, துருக்கி ஏற்பாடு செய்த ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்த ஆலோசனக் கூட்டத்தில் இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பாமல் தவிர்க்கப்பட்டது ஏன் என்பது குறித்த தகவலையும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் வேண்டுகோளை ஏற்றே இந்தியாவை துருக்கி தவிர்த்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் தொடர்பான அனைத்து சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களில் இந்தியா தவிர்க்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவிடம் துருக்கி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்தே, இந்த ஆண்டு தொடக்கத்தில் துருக்கி ஆதரவில் நடைபெற்ற “தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது குறித்த ஆப்கானிஸ்தான் நட்பு நாடுகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பப்படாமல் போனதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக நாடுகள் – தலைவர்கள் பற்றிய அமெரிக்காவின் கேவலமான கிண்டல்!
பிரான்ஸ் தொடங்கி ரஷ்யா வரை பல்வேறு நாட்டு தலைவர்களை ஏளனமாக பட்ட பெயர் சூட்டி அழைப்பது ‘பெரியண்ணன்’ அமெரிக்க ஸ்டைல் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. தனது நட்பு நாடுகளையும் கேவலமாகவே பார்த்து வந்துள்ளது அமெரிக்கா என்பதும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதுதான் அமெரிக்காவுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானுடன் சவூதி அரேபியா நட்பு பாராட்டினாலும், உள்ளுக்குள் அதிபர் சர்தாரி மீது கடும் காழ்ப்புணர்ச்சியுடன் இருப்பதும் இப்போது தெரிகிறது.
பாக் பிரதமர் சர்தாரியை அழுகிப் போனவராக சவூதி மன்னர் அமெரிக்காவிடம் வர்ணித்துள்ளார். “பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு சர்தாரிதான் பெரும் இடையூறாக இருக்கிறார். தலையே அழுகிப் போனதாக இருந்தால், உடல் முழுவதையும் அது பாதிக்கத்தான் செய்யும்” என்று வர்ணித்துள்ளார் சவூதி மன்னர்.
இதுதவிர ‌‌பி‌ரி‌ட்ட‌ன் அரச குடு‌ம்ப‌த்தை சே‌ர்‌ந்த இளவரசர் ஆன்ட்ரூஸின் ஒழு‌ங்‌கீனமான செய‌ல்பாடுகளை ‌‌‌தின‌ந்தோறு‌ம் அமெ‌ரி‌க்க தூதரக அ‌திகா‌ரிக‌ள் வா‌ஷி‌ங்டனு‌க்கு அனு‌ப்‌பி வ‌ந்து‌ள்ளனர்.
“லிபியா தலைவர் மொம்மர் அல் கடாபி பெண் பித்தர். யாரையும் நம்ப மாட்டார். எங்கு சென்றாலும் உக்ரைன் நர்ஸ் ஒருவருடன் செல்கிறார். நர்சுக்கும், இவருக்கும் அந்தரங்க தொடர்பு உள்ளது. ஐநா செல்ல உரிய நேரத்தில் நர்சுக்கு விசா கிடைக்கவில்லை. பின்னர், இருவரும் தனியாக விமானத்தில் ஐ.நா. சென்றனர்…”, என அமெரிக்கா குறிப்பிட்டதும் அம்பலமாகியுள்ளது.
எந்தெந்த தூதரகங்களிலிருந்து தகவல் பெறப்பட்டதென்ற விவரம்…
இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியை, “இவர் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்களை மறைக்க அடிக்கடி இரவு விருந்து அளிக்கிறார். இதனால், இவருக்கு ஓய்வே கிடையாது. இவர் மாடர்ன் ஐரோப்பிய உலகின் திறமையற்ற, ஆடம்பர தலைவர்..” என்றும் கூறியுள்ளனர்.

‘அடங்காத நாய் புடின்’
மேலும் ர‌ஷ்ய ‌பிரதம‌ர் ‌விளாடி‌‌மி‌ர் பு‌‌தினு‌க்கு, ‘அ‌ல்பா டா‌க்’ என்ற நா‌யி‌ன் பெயரை (அடங்காத நாய்) அடையாள பெயராக கு‌றிப்பி‌ட்டு, மா‌ஸ்கோ‌வி‌ல் இரு‌ந்து அமெ‌ரி‌க்க தூதரக அதிகாரிகள் தகவ‌ல்க‌ள் ப‌‌ரிமா‌றி‌க் கொ‌ண்டது தெரிய வந்துள்ளது.
அத்துடன் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் சிக்கல்களை கையாளாமல் தவிர்ப்பவர் என்றும், ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் மனநிலை பிறழ்ந்தவர் என்றும், இதேபோல பல்வேறு உலகத் தலைவர்களுக்கு பல்வேறு பெயர்களையும் சூட்டி அமெரிக்கத் தரப்பு தகவல்களைப் பரிமாறிக் கொண்டுள்ளதாம்.
ஈரான் ஹிட்லர்
ஈரான்அதிபர் அகமதி நிஜாத்தை “ஹிட்லர்” என்ற பெயரில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வர்ணித்து தகவல் அனுப்பியுள்ளனர்.
பிரான்ஸ் அதிபர் சர்கோஸிக்கு நிர்வாண ராஜா என்றும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் 2 க்கு எபிலெப்சி, லிபிய அதிபர் கடாபிக்கு ஹாட் பிளான்ட், ஜெர்மனி அதிபர் மெர்க்கலுக்கு டெப்லான், ஆப்கன் அதிபர் கர்சாய்க்கு பரோனியாவால் பாதிக்கப்பட்டவர் என பல கேவலமான அடைமொழிகளைச் சூட்டியுள்ளனர் தங்கள் தகவல் பரிமாற்றங்களின்போது.
பாகிஸ்தானிடம் ‘தோற்ற’ அமெரிக்கா!
2009 ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்க தூதர் அன்னி பேட்டர்சன், இஸ்லாமாபாத்தை அணுகி, அமெரிக்க அணு ஆயுத நிபுணர்கள் பாகிஸ்தானுக்கு வருவதாக கூறியுள்ளார்.
ஆனால் அவர்கள் வருவது பாகிஸ்தானிய ஊடகங்களுக்குத் தெரிந்தால், பாகிஸ்தானின் ஆயுதங்களை அமெரிக்கா தனது கையில் எடுத்துக்கொள்வதாக செய்தி பரவி விடும் என்று கூறி அதனை ஏற்க மறுத்து தடுத்து விட்டதாம் பாகிஸ்தான்.
உண்மையில்,பாகிஸ்தான் அணு உலையில், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஏற்றுவதைத் தடுக்கவே அந்த நிபுணர் குழு வருவதாக இருந்தது. ஆனால் பாகிஸ்தானின் கடுமையான எதிர்ப்பு காரணமாக அமெரிக்காவின் முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளது விக்கிலீக்ஸ்.
சவூதி கோரிக்கையை அமெரிக்கா தட்டிக் கழித்தது ஏன்?
அதேபோல ஈரானின் அணு ஆயுத திட்டத்தால் பெரும் கவலை அடைந்த சவூதி அரேபிய அரசு, ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியதாம். இதுதொடர்பாக சவூதி மன்னர் அமெரிக்காவுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாராம்.
அதேசமயம், அல் கொய்தா அமைப்புக்கு தேவையான அனைத்து நிதிகளையும் சவூதி அரேபியாதான் தொடர்ந்து கொடுத்து வருவதாகவும் அமெரிக்காவுக்குத் தெரிய வந்துள்ளது. இதனால் சவூதி அரேபிய மன்னரின் கோரிக்கைகளை ஏற்காமல் அமெரிக்கா தட்டிக் கழித்ததாம்.
மேலு‌ம் ‌சீனாவு‌ட‌ன் இணை‌ந்து கொ‌ரிய ‌தீபக‌ற்ப‌த்‌தி‌ல் அமைதியை ‌‌நிலைநா‌ட்ட தெ‌ன் கொ‌ரியா மே‌ற்கொ‌ண்ட முய‌ற்‌சிகளை, அமெ‌ரி‌க்க உளவு‌த் துறை த‌டு‌த்து ‌நிறு‌த்‌தியது ப‌ற்‌றிய தகவ‌ல்களு‌ம் அதில் வெ‌ளி‌யி‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளது.
இதேபோ‌ன்று ஆ‌ப்கா‌‌னி‌ஸ்தா‌‌ன் துணை ‌பிரதம‌ர் சவூ‌தி ‌விமான‌ ‌நிலை‌‌த்‌தி‌ல் சுமா‌ர் 20 கோடி ரூபா‌ய் ம‌தி‌ப்புடைய அமெ‌ரி‌க்க டாலருட‌ன் ‌பிடி‌ப‌ட்டதும், ‌பி‌ன்ன‌ர் அமெ‌‌ரி‌க்கா தலை‌யி‌ட்டு அ‌ந்த ‌விவகார‌த்தை ‌‌தீ‌ர்‌த்து வை‌த்தது‌ம் ‌வி‌க்‌கி‌லீ‌க்‌‌‌ஸி‌‌ல் வெ‌ளியா‌கியு‌ள்ளது.
ஐரோப்பாவை பற்றி கவலையில்லை. மேற்கு நாடுகளை விட கிழக்கு நாடுகளை தேர்வு செய்கிறேன்’ என்று அமெரிக்க அதிபர் ஒபாமா பேசிய பேச்சும் கசிந்துள்ளது, பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவுக்கு.
கூகுளை ஊடுருவி உளவறிந்த சீனா…
இதேபோல கூகுள் நிறுவனத்தின் இணையதளத்திற்குள் ஊடுருவி அவற்றை செயலிழக்க வைக்க சீன அரசு உத்தரவிட்டதையும் அம்பலப்படுத்தியுள்ள விக்கிலீக்ஸ், அமெரிக்க அரசின் சில இணைய தளங்கள், மேற்கத்திய நாடுகளின் கம்ப்யூட்டர் கட்டமைப்பு, தலாய் லாமாவின் கம்ப்யூட்டர் கட்டமைப்பு, அமெரிக்க வர்த்தகத் துறையின் இணையதளம் ஆகியவற்றுக்குள்ளும் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் சீன அரசு ஊடுருவி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஐ.நா. வை உளவு பார்க்குமாறும் மரபணு சோதனையைக் கூட பெற்றுக் கொள்ளுமாறும் முக்கிய அதிகாரிகளுக்கு ஹிலாரி கிளின்டன் உத்தரவிட்டிருந்தததும் வெளியாகியுள்ளது.
அதே நேரம், ஆப்கானிஸ்தானில் பிரிட்டனின் இராணுவ நடவடிக்கைகள் பற்றிய கடுமையான விமர்சனமும் இருக்கக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவை வெளியில் வந்தால் பிரிட்டன் – அமெரிக்க உறவில் எந்த மாதிரி விளைவுகள் ஏற்படும் என்று தெரியவில்லை.
ஈரான் காரணம்?
விக்கிலீக்ஸின் இந்த ஆவணங்கள் உலகை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. தவிர மத்திய கிழக்கிலும் பதற்றமான நிலைமைக்கு வழி வகுத்திருக்கிறது. அத்துடன், ஈரானுக்கெதிரான தாக்குதல் அவசியம் எனக் கருதும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிலுள்ள கடும் போக்காளர்களின் கை வலுக்கும் நிலைக்கும் வித்திட்டுள்ளது.
இந்த பின்விளைவுகளை எதிர்ப்பார்த்துதான் ‘விக்கிலீக்ஸை நம்பாதீர்கள்’ என்று அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு குடியரசுகள், ஆப்கானிஸ்தான், சீனா மற்றும் இந்தியாவுக்கு தொடர்ந்து செய்தி அனுப்பி வந்தார்.
இந்த பிரச்சினைக்கு முழுக் காரணமும் ஈரான்தான் என்றும், அமெரிக்காவுக்கு எதிராக சர்வதேச சமூகத்தைத் தூண்டுகிறது அந்த நாடு என்றும் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.
ஆனால் அமெரிக்காவின் இந்த டெக்னிக் இனி எடுபடுமா? சந்தேகம்தான். இப்போதே பல நாடுகள் அமெரிக்காவின் இந்த இரட்டை முகம் கண்டு முகம் சுளிக்க ஆரம்பித்துள்ளன. விக்கிலீக்ஸ் விவகாரத்தில் அமெரிக்கா குறித்து சம்பந்தப்பட்ட நாடுகளின் ரியாக்ஷன் என்னவென்பது வரும் நாட்களில் தெரியும்!