Friday, July 30, 2010

ஏன் ஒரே சமுதாயம் – ஒரே பிறை – ஒரே பெருநாள் என்பது முடியாது ??

ஏன் ஒரே சமுதாயம் – ஒரே பிறை – ஒரே பெருநாள் என்பது முடியாது ??

ஒரே சமுதாயம் – ஒரே பிறை – ஒரே பெருநாள்- இது இந்தியாவில் வெளியிடப்பட்ட ஓர் துண்டுப்பிரசுரம் காலத்தின் தேவை கருதி மறு பிரசுரம் செய்யப்படுகின்றது என்று வேம் கோள் என்ற தளத்தில் வெளியான துண்டுப்பிரசுரம் இங்கு மீள் பதிவு செய்யபடுகின்றது
“மேலும் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். இன்னும் பிரிந்து விடாதீர்கள்”. ( 3:103)
ரமளான் நோன்பை ஆரம்பிப்பதிலும் பெருநாள் கொண்டாடுவதிலும் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் ஒன்றுபட்டு செயல்படுவது கடமையாகும் (Fardh). இது அல்லாஹ் (சுபு) முஸ்லிம்களுக்கு விதித்த கட்டளையாகும். இதுவே முஸ்லிம்களின் ஒற்றுமைக்குரிய நிரூபணமாகும். ஆனால் தலைப் பிறையை தீர்மானிப்பதில் வட்டார வாரியான அளவுகோல் பின்பற்றப்படுவதால் முஸ்லிம்கள் பிளவுபட்டு நிற்கிறார்கள். இதனால் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்க ஆரம்பிப்பதும், பெருநாள் கொண்டாடுவதும் வெவ்வேறு (மூன்று நாட்கள் வித்தியாசம்) நாட்களில் நிகழ்கிறது. அல்லாஹ் (சுபு) குறிப்பிட்ட பகுதி என்று எல்லையை பிரிக்காமல் அமைத்து முஸ்லிம்களுக்கும் பொதுவாகவே கட்டளையிட்டுள்ளான் விரிவாக பார்க்க.
“நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னிருந்தோர் மீது விதிக்கப்பட்டது போலவே உங்கள் மீதும் நோன்பு விதிக்கப்பட்டுள்ளது. (இதனால்) நீங்கள் இறையச்சமுடையோர்களாக ஆகலாம்.” (3:183)
இங்கு அல்லாஹ் (சுபு) நம்பிக்கையாளர்களே என்று ஒட்டுமொத்தமாகவே குறிப்பிடுகிறான். எனவே நோன்பு நோற்க ஆரம்பிப்பதும், நோன்பை நிறைவு செயவதும் எல்லா முஸ்லிம்களுக்கும் பொதுவான கட்டளையாகும். எனவே ஒரு பகுதியில் பார்க்கப்படும் பிறை ஏனைய பகுதியினரை கட்டுப்படுத்தாது என்பது சமுதாயத்தை பிளவுபடுத்தும் செயலாகும். யாரெல்லாம் இப்பிரிவினைக்கு ஊக்கமளிக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ் (சுபு) விற்கும், அவனுடைய தூதருக்கும் எதிராக செயல்படுகறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
“(தேய்ந்து வளரும்) பிறைகளைக் குறித்து உம்மிடம் கேட்கிறார்கள். அவை மனிதர்களுக்கான காலங்காட்டியகாவும், ஹஜ்ஜை அறிவிப்பவையாகவும் உள்ளன என்று கூறுவீராக”. (3:183)
இவ்வசனத்தில் பிறைகளை முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது முழு மனித சமூகத்திற்கான காலங்காட்டியாக அல்லாஹ் (சுபு) குறிப்பிடுகிறான். எனவே பிறையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் சந்திர காலண்டர் இடத்திற்கு தகுந்தாற்போல் மாறுபடுவது முரண்பாடானதாகும். ஆனால் இன்றைய நடைமுறையில் சந்திரமாதத் துவக்கம் வட்டார வாரியாக வேறுபடுவதால் ஹிஜ்ரா காலண்டர் (சந்திர காலண்டர்) நடைமுறைக்கு ஒத்து வரவில்லையே என்பதாக முஸ்லிம்கள் வருந்துகின்றனர். ஆனால் சூரிய ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காலண்டர் (Gregorian Calender) இத்தகைய வேறுபாடின்றி இருப்பதால் அதை முதன்மைப்படுத்த வேண்டிய அவல நிலையிலுள்ளனர்.
நபி (ஸல்) நோன்பின் ஆரம்ப நாளையும், பெருநாளையும் எவ்வாறு தீர்மானிக்க வேண்டு மென்பதை மிகத் தெளிவாக நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.
“பிறையைப் பார்க்காதவரை நோன்பு நோற்காதீர்கள். பிறையைப் பார்க்காதவரை நோன்பை நிறைவு செய்யாதீர்கள். மேகமூட்டமாக இருந்தால் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்”. (அபூஹீரைரா (ரலி) முஸ்லிம்)
“பிறையைப் பார்க்காதவரை நோன்பு நோற்காதீர்கள். பிறையைப் பார்க்காதவரை நோன்பை நிறைவு செய்யாதீர்கள். மேகமூட்டமாக இருந்தால் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்”. (இப்னு உமர் (ரலி), புகாரி)
இங்கு பிறை பார்க்க இடப்பட்ட கட்டளை பொதுவான (aam) தாகவே உள்ளது. இந்த ஹதீஸில் இடம்பெறும் சூமூ (Soomoo) என்ற வினைச்சொல் பன்மையாகும். எனவே முழு உம்மாவையும் கட்டுப்படுத்தும். மேலும் ருஃயத் (Ru’yath) என்ற சொல்லும் பொதுவான பொருளிலேயே பிரயோகிக்கப்பட்டுள்ளது. எனவே உலகின் எந்தப் பகுதியிலும் பார்க்கப்படும் பிறை அனைத்து முஸ்லிம்களையும் கட்டுப்படுத்தும். நபி (ஸல்) காலத்தில் முஸ்லிம்கள் பல பகுதிகளில் வாழ்ந்து வந்த நிலையிலும், ஒரே நாளில் நோன்பை ஆரம்பித்தும், பெருநாள் கொண்டாடியுமுள்ளனர். எனவே நபி (ஸல்) காட்டித் தராத நடைமுறையை நாம் பின்பற்றக் கூடாது.
“ரமளானுக்காக ஷஅபான் மாதத்தை கணக்கிட்டு வாருங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள்”. (அபூஹூரைரா (ரலி), திர்மிதி)
எனவே ரமளான் மாதத்தின் துவக்க நாளை சரியாகக் கணக்கிட்டு ஷஅபான் மாதத்தை துல்லியமாக கணக்கிட்டாக வேண்டும். ஷஅபான் சரியாக கணக்கிடப்பட வேண்டுமெனில் ரஜப் மற்றும் அதற்கு முந்தைய மாதங்களை சரியாக கணக்கிட்டிருக்க வேண்டும். இவ்வாறு கணக்கிட்டால்தான் முஸ்லிம்கள் ஒரே நாளில் ஒற்றுமையாக நோன்பையும், பெருநாளையும் கடைபிடிக்க இயலும்.
பிறையைப் பார்ப்பது என்பதைப் பொறுத்தவரை முஸ்லிமான ஒருவர் பார்த்து விட்டதாக சாட்சி கூறினாலே ஏற்கத்தக்கதாவிடும். நபி (ஸல்) முஸ்லிமான ஒருவர் பார்த்து சாட்சியமளித்த போது அதை ஏற்று செயல்பட்டுள்ளார்கள்.
“பிறையைப் பார்க்காத காரணத்தால் முஸ்லிம்கள் நோன்பை ஆரம்பிக்காம லிருந்தனர். அப்போது மதீனாவில் குடியிருக்காத ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து பிறையைக் கண்டதாக கூறினார். நபி (ஸல்) அவரிடம் மு°லிமா? என்று வினவினார். அவர் ஆம் என்று பதிலளித்தார். உடனே நபி (ஸல்) அல்லாஹூ அக்பர்! ஒருவர் பார்த்தாலே அனைத்து முஸ்லிம்களுக்கும் போதுமானது என்றவர்களாக தானும் நோன்பு நோற்க ஆரம்பித்தார்கள். மக்களையும் நோன்பு நோற்க கட்டளையிட்டார்கள்”. (இப்னு அப்பாஸ் (ரலி), அபூதாவூது)
ஹனபி மத்ஹபின் பிரபலமான இமாமான ஸர்கஸி (ரஹ்) மேற்கண்ட ஹதீஸை சுட்டிக்காட்டி பிறை பார்க்காமல் நோன்பு நோற்கலாகாது என்பதாகவும் குறிப்பிடுகிறார்கள். (A1 – Mabsoot: 3: 52))
மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது யாதெனில் நபி (ஸல்) அம்மனிதரிடம் எவ்வளவு தொலைவிலிருந்து வருகிறீர்கள் என்று கேட்கவில்லை. இதே போன்று தகவலை ஏற்று செயல்பட்டதாக கிடைக்கப்பெறும் மற்ற ஹதீஸ்களிலும் நபி (ஸல்) தூரத்தை அளவுகோலாக நிர்ணயிக்கவில்லை. எனவே நபி (ஸல்) காட்டித்தராத நடைமுறையை நிர்ணயிக்க யாருக்கும் அதிகாரமில்லை. பெருநாள் தினத்தில் நோன்பு நோற்பது ஹராமாகும். ஆனால் ஒரு பகுதி முஸ்லிம்கள் பெருநாள் கொண்டாடும் போது பிறபகுதியினர் (ஒட்டிய பகுதியில் வாழ்ந்தாலும் கூட) நோன்பை தொடர்கின்றனர். இச்செயல் ஹீகும் ஷரியா விற்கு மாற்றமான பாவமான காரியமாகும்.
“நோன்புப் பெருநாள், ஹஜ்ஜூப் பெருநாள் ஆகிய இரு தினங்களிலும் நோன்பு நோற்பதற்கு நபி (ஸல்) தடை விதித்தார்கள்” (ஆயிஷா (ரலி), முஸ்லிம்)
“யார் சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்கிறாரோ அவர் நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்விட்டார்”. (அம்மார் (ரலி), புகாரி)
நபி (ஸல்) அவர்களும், முஸ்லிம்களுக்கு நோன்பு நோற்ற நிலையிலிருந்த போது பிற பகுதியிலிருந்து பிறை பார்த்தவர்கள் தகவலை காலதாமதமாக வந்து கூறியபோது நோன்பை தொடர அனுமதிக்காமல் உடனடியாக நோன்பை விட்டுவிட கட்டளையிட்டுள்ளார்கள். ஆனால் இன்று பல பகுதிகளில் பெருநாள் கொண்டாடப்படும் தகவல் நமக்கு உடனுக்குடன் கிடைக்கப்பெற்றாலும் செயல்படுத்த தயங்குகிறோம். இதனால் அறிந்து கொண்டே பெருநாள் தினத்தில் நோன்பு நோற்கும் ஹராமான காரியத்தை செய்து வருகிறோம்.
“நாங்கள் முப்பதாம் நாள் காலை நேரத்தை அடைந்தோம். அப்போது இரு கிராமவாசிகள் வந்து நேற்று பிறை பார்த்தோம் என்பதாக சாட்சி கூறினார்கள். உடனே நபி (ஸல்) நோன்பை விட்டுவிடுமாறு மக்களுக்கு கட்டளையிட்டார்கள்”. (அபூமஸ்வூத் அல்அன்ஸாரி (ரலி), தாரகுத்னி)
“மேகமூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்கு தென்படவில்லை. எனவே நாங்கள் நோன்பு நோற்ற நிலையிலிருந்தோம். அப்போது பகலின் இறுதிப்பகுதியில் ஒரு வாகனக் கூட்டத்தினர் நபி (ஸல்) நோன்பை விடுமாறும் மறுநாள் பெருநாள் தொழுமாறும் கட்டளையிட்டார்கள். (அபூஉமைர் (ரலி), அபூதாவூது, அஹ்மது, தாரகத்னி)
வெவ்வேறு நாட்களில் நோன்பு மற்றும் பெருநாள் தினங்களை முடிவு செய்ய நபி (ஸல்) காலத்திற்கு பின்னர் இப்னு அப்பாஸ்(ரலி) காலத்தில் நடைபெற்ற பின்வரும் வரலாற்று சம்பவத்தை சிலர் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
“உம்முல் பழ்ல் (ரலி) என்னை ஷாமிலிருந்த முஆவியாவிடம் அனுப்பி வைத்தார்கள். நான் ஷாமிற்கு சென்று அவரது வேலையை முடித்தேன். நான் ஷாமிலிருக்கும்போது ரமளானின் முதல் பிறை எனக்கு தெரிந்தது. வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் இறுதியில் மதீனாவிற்கு வந்தேன். இப்னு அப்பாஸ் (ரலி) என்னை விசாரித்தார்கள். பிறகு பிறையைக் குறித்து கேட்டார்கள். நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள் என்று கேட்டார்கள். நாங்கள் வெள்ளிக்கிழமை இரவு பிறையைப் பார்த்தோம் என்றேன். நீயே பிறையைப் பார்த்தாயா? என்றார்கள். ஆம். மக்களும் பார்த்தார்கள். நோன்பு நோற்றார்கள். முஆவியாவும் நோன்பு நோற்றார்கள். நாங்கள் சனிக்கிழமை இரவில் பிறையை பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பதை பூர்த்தியாகும் வரை நோன்பை தொடர்வோம் என்றார்கள். முஆவியா பார்த்ததும் நோன்பு நோற்றதும் போதாதா? என்றேன். அதற்கவர்கள் போதாது நபி (ஸல்) இவ்வாறு தான் எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள் என்று விடை யளித்தார்கள். (குரைப், முஸ்லிம்)
இது ஹதீஸ் அல்ல. இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் கருத்து ஆகும். பிறை பார்த்து நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் என்ற நபி (ஸல்) கட்டளையை இப்னு அப்பாஸ்(ரலி) ஒவ்வொரு பகுதியினரும் பார்த்தாக வேண்டும் என்று விளங்கிருந்ததால் அவ்வாறு செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் பிறபகுதியில் பார்த்த தகவலை ஏற்று செயல்பட்டுள்ளதால் மேற்கண்ட சம்பவத்தை ஏற்கத்தக்க ஆதாரமாக கொள்ள முடியாது.
இதை இமாம் ஸவ்கானி (ரஹ்) உறுதி செய்கிறார்கள். அவர் நைலுல் அவ்தார் என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார்: ஏற்றுக் கொள்ளத்தக்க ஆதாரம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்த நபி (ஸல்) அவர்களின் ஹதீஸில் தெளிவாக இருக்கிறது. இத்தகைய தெளிவான ஆதாரத்தை மக்கள் விளங்குவது போல் அவரது கருத்திலிருந்து பெற முடியவில்லை. எனவே ஷரியாவிற்கு முரணாகவோ அல்லது சந்தேகம் கொள்ளும்படியோ இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்று இருந்தால் அதை நாம் பின்பற்றத் தேவையில்லை. நபி (ஸல்) கூறியதையே நாம் பின்பற்ற வேண்டும்.
“உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்றுக் கொள்ளவும்” (2:185) என்ற வசனத்தை வைத்து ஒவ்வொரு பகுதியினரும் வெவ்வேறு நாட்களில் ரமளானின் துவக்க நாளை அடைவதாக சமீபகாலமாக தவறாக விளக்கப்பட்டு வருகிறது. இவ்வசனத்தில் அந்த மாதத்தை அடைந்து விட்டவர் மீது நோன்பு நோற்பது கட்டாயமாகும் என்பதாகத்தான் அல்லாஹ் (சுபு) குறிப்பிடுகிறான். ஒவ்வொரு பகுதியனிரும் வெவ்வேறு நாட்களில் ரமளானை அடைவதாக குறிப்பிடவில்லை. குர்ஆனை விளங்குவதற்கென்ற அடிப்படை விதிமுறைகளைப் பின்பற்றாமல் தன்னிச்சையாக விளங்கிக் கொண்டால் இத்தகைய ஃபித்னா ஏற்படவே செய்யும்.
“யார் எவ்வித ஞானமின்றி குர்ஆனைப் பற்றி பேசுகிறாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்”. (திர்மிதி, அஹ்மது) என்ற நபி (ஸல்) எச்சரிக்கையை சமர்ப்பிக் கின்றோம். குர்ஆனில் நாஸிக் (மாற்றக்கூடியது), மன்ஸூக் (மாற்றப்பட்டது) என்ற விதிமுறையுடைய வசனங்கள் உள்ளன. 2:184 வசனம் மன்ஸூக் ஆகும். 2:185 வசனம் நாஸிக் ஆகும், தப்ஸீர் இப்னு கதீரில் இதற்கு தெளிவான விளக்கம் கிடைக்கிறது. ஆரம்ப காலத்தில் நோன்பு நோற்பது கட்டாயம் என்ற நிலையிலிருந்து விதி சற்று தளர்த்தப்பட்டிருந்தது. அப்போது 2:183, 2:184 ஆகிய வசனங்கள் அருளப்பட்டிருந்தன. நோன்பு நோற்க சக்தியிருந்தும் நோற்கவில்லையெனில் ஒர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாயிருந்தது. இதனால் விரும்பியவர் நோன்பு நோற்காமல் பரிகாரம் (Fidya) செய்து வந்தனர். எனவே தான் “நோன்பின் நன்மையை நீங்கள் அறிவீர்களாயின் நோன்பு நோற்பதே உங்களுக்கு சிறந்தது (என்தை அறிந்து கொள்வீர்கள்”) என்பதாக அல்லாஹ் (சுபு) குறிப்பிடு கிறான். அதன்பின் இச்சட்டத்தை மாற்றி அந்த மா தத்தை அடைந்து விட்டாலே நோன்பு நோற்றாக வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டது. ஸலமா பின் அக்வஃ (ரலி) அறிவிக்கும் பின்வரும் ஹதீ° சான்று பகர்கின்றது.
“நோன்பு நோற்க சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கவில்லையெனில்) அதற்கு பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும் என்ற (2:184) வசனம் அருளப்பட்டபோது விரும்பியவர் நோன்பு நோற்காமல் பரிகாரம் செய்து வந்தனர். பின்னர் இச்சட்டத்தை மாற்றி உங்களில் என்றவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும் என்ற வசனம் (2:185) அருளப்பட்டது”. (புகாரி – 4507)
நாம் இங்கு பகல் நேரத்திலிருக்கும்போது உலகின் மற்ற பகுதியினர் இரவு நேரத்திலிருப்பர். எனவே நோன்பும், பெருநாளும் வெவ்வேறு நாட்களில் (மூன்று நாட்கள் வித்தியாசத்தில்) வந்தே தீரும் என்ற அடிப்படையற்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. பின்வரும் வசனத்தை சிந்தித்தாலே தெளிவு பிறக்கும்.
“இன்னும் ஃபஜ்ரு நேரம் எனற் வெள்ளை நூல் (இரவு என்னும்) கருப்பு நூலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள். பருகுங்கள். பின்னர் இரவு வரும்வரை நோன்பை நிறைவு செய்யுங்கள்.” (2:187)
இவ்வசனத்திலிருந்து நோன்பை ஆரம்பிக்கும் நேரமும் (Imsak), நோன்பை நிறைவு செ ய்யும் நேரமும் (Iftar) பூமியெங்கும் மாறுபடக்கூடியது என்பதை விளங்கிக் கொள்ளலாம். எனவே உலகெங்கும் நோன்பு நோற்க ஆரம்பிக்கும் நேரமும், அதை நிறைவு செய்யும் நேரமும் பகுதி வாரியாக மாறுபட்டாலும், அந்த நாள் என்பது மாறுபடாது. இதை இன்னும் இலகுவாக விளங்கிக் கொள்ள ஜூம்ஆ தினம் எவ்வாறு கடைபிடிக்கப்படுகிறது என்பதை சிந்தித்தாலே விளங்கும். ஜூம்ஆ தொழுகை என்பது ஒரே நாளில்தான் பூமியெங்கும் நிறைவேற்றப்படுகிறது ஒரே நேரத்திலுமல்ல. ஒரே நாளுக்குள் (24 மணி நேரத்திற்குள்) உலக முஸ்லிம்கள் அனைவரும் ஜூம்ஆ தொழுகையை நிறைவேற்றி முடிப்பதை நாம் அறிந்தே வைத்துள்ளோம். வெவ்வேறு நாட்களில் நிறைவேற்றப் படுகிறது என்று யாரும் கூறுவதில்லை. எனவே பெருநாள் தொழுகை என்பது பூமியெங்கும் வெவ்வேறு நேரத்தில் நிறைவேற்றப்பட்டாலும் ஒரு நாளுக்குள் (24 மணி நேரத்துக்குள்) நிகழ்ந்து விட வேண்டும். எனவே இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவிலிருப்போர் பிறையைக் கண்டு பெருநாள் கொண்டாடுவார்களாயின் அவர்களைப் பின்பற்றி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருப்போரும் அந்நாளில் பெருநாள் கொண்டாடியாக வேண்டும். ஜகார்தாவில் பார்க்கப்படுவது முழு முஸ்லிம் உம்மாவையும் கட்டுப்படுத்தும்.
மேலும் பிறையைப் பார்க்காமல் வானியலை (ஹளவசடிnடிஅல) மட்டும் அடிப்படையாகக் கொண்டு நோன்பையும், பெருநாளையும் முடிவு செய்யலாம் என்ற கருத்து ஹூகும் ஷரியவிற்கு மாற்றமானதாகும். ஆனால் வானியலை அடிப்படையாகக் கொண்டு முன்கூட்டியே மாதங்களைக் கணக்கிட்டு பின்னர் பிறையைப் பார்த்து முடிவு செய்ய தடை இல்லை. மத்ஹபு இமாம்களின் குறிப்புகளிலிருந்து உலகம் முழுவதும் ஒரே நாள்தான் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
ஹனபி மத்ஹபின் இமாம்களில் ஒருவரான கஸானீ (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்:- முழு உம்மத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட பிறை பார்த்தலை (பகுதிவாரியாக) பின்பற்றுவது என்பது பித்அத் ஆகும். இதிலிருந்து மற்ற கருத்துக்கள் அனைத்தும் எவ்வளவு பலவீனமாகது என்பதை இமாம் அவர்கள் நன்கு விளங்கி வைத்துள்ளார்கள் என்பதை அறியலாம். இமாம் ஜூஸைரி (ரஹ்) ஹனபி மத்ஹபில் பிறையை தீர்மானிக்கும் விதத்தை குறிப்பிடும்போது:
1, எந் ஒரு முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவன், ஆண் அல்லத பெண் ஆகியயோர் பிறை பார்த்ததை அவர் ஃபாஸிக் ஆயிருந்தாலும் விசாரணையின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும்.
2. அவர் ஃபாஸிக் ஆனவரா? இல்லையா? என்பதை காதி (இஸ்லாமிய நீதிபதி) முடிவு செய்து கொள்வார். (Fiqh al Madhaahib al Arba’a)
இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்:-
“ஒருவர் பிறை பார்த்ததை யார் உரிய நேரத்தில் அறிந்து கொள்கிறாரோ அவர் அதை பின்பற்றி நோன்பை ஆரம்பித்தல், நோன்பை முடித்துக் கொள்ளல், குர்பானி ஆகியவற்றை நிறைவேற்றிட வேண்டும். இதை குறிப்பிட்ட தூரத்திற்கோ அல்லது நாட்டிற்கோ வரையறைப்படுத்துவது ஷரியாவிற்கு மாற்றமானதாகும். (A1- Fatawa Volume 5, page, 111)
தாருல் உலூம் தேவ்பந்த் நிறுவனர் மவ்லானா ரசீத் அஹமது காங்கோஹி (ரஹ்):- கல்கத்தா மக்களுக்கு வெள்ளக்கிழமையன்று ரமளானின் பிறை தெரிந்தது. ஆனால் மக்காவிலோ வியாழக்கிழமை பிறை பார்க்கப்பட்டது. கல்கத்தா மக்களுக்கு இத்தகவல் பின்னர் தெரியவந்தால் மக்காவை பன்பற்றி பெருநாளை கொண்டாட வேண்டும் பிறகு விடுபட்ட முதல் நோன்பை களா செய்திட வேண்டும். (Sharh Tirmizi, Kaukab un Durri, pge – 336)
தமிழகத்தின் தாய்க்கல்லூரியான வேலூர் பாகியாத்துஸ்ஸாலிஹாத் நிறுவனர் அஃலாஹழரத் (ரஹ்) உலகில் எங்கு பிறை பார்க்கப்பட்டாலும் அதை ஏற்று செயல்படுவது அவசியமாகும். (பாகியாத்துஸ்ஸாலிஹாத் ஃபத்வா தொகுப்பு)
தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸாவின் ஃத்வா: பிறை பார்க்கப்பட்ட தகவல் எங்கேனும் உறுதிப்படுத்தப்பட்டால் மக்கள் எவ்வளவு தொலைவிலிருப்பினும் ஆயிரக்கணக்கான மைல்கள். தூரத்திலிருப்பினும் அதை செயல்படுத்தியாக வேண்டும். (Fatawa Darul Uloom Deoband,Volu, 6, page – 380)
மௌலானா ஸஃபீகுர் ரஹ்மான் நத்வி, லக்னோ: ஒரு பகுதியில் பிறை பார்க்கப்பட்டது உறுதியாவிவிட்டால் அனைவர் மீதும் நோன்பு நோற்பது கடமையாகிவிடும். (Fikhul Myassir, page – 133)
இதே போன்று ஃபிக்ஹீ கிரந்தங்களிலும் தெளிவான சான்றுகள் கிடைக்கின்றன. ஓர் ஊரில் இறையச்சமுடைய ஒருவரால் பிறை பார்க்கப்படுமேயானால் அது இவ்வுலகிலுள்ள மற்ற அனைவர் மீதும் நோன்பை கடமையாக்கிவிடும். (ரஹ்மத்துல் உம்ம)
தெளிவான அறிவிப்புகளின்படி கருத்து வேறுபாட்டிற்கு பிறை உதிக்குமிடத்தை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. (ஃபதாவா ஆலம்கீரி, ஃபதாவா காழிகான்) பிறையைக் கண்டுவிட்ட செய்தி யாரையெல்லாம் சென்றடைகிறதோ அவர்கள் தொலை தூரக் கணக்கின்றி நோன்பு நோற்பது கடமையாகிவிடும் (மஜ்மஉல் ஃபதாவா)
ஓர் ஊரார் பிறையைப் பார்த்தால் அனைத்து ஊரார்கள் மீதும் நோன்பை கடமையாக்கிவிடும். (அல்முஃனி, அன்இன்ஸாப்)
பிறையைப் பார்த்து நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். பிறையைப் பார்த்து நிறைவு செய்து கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) கூறியுள்ளதால் ஓர் ஊரார் பிறையைப் பார்த்திடும்போது அனைத்து ஊரார்கள் மீதும் நோன்பை கடமையாக்கிவிடும். நபி (ஸல்) கட்டளை முழு உம்மத்தினரையும் முன்னிலைப்படுத்தியே கூறப்பட்டதாகும். எனவே இந்த உம்மத்தினிரில் எவரொருவர் எந்த இடத்திலாவது பிறையைப் பார்ப்பது முழு உம்மத்தினரும் பிறையைப் பாத்தது போன்றதாகும். (ஃபிக்ஹ் சுன்னாஹ்).
சுமார் 80 வருடங்களுக்கு முன்னர் வரை இந்தியத் துணைக் கண்டத்தின் முஸ்லிம்கள் கந்தஹாரிலிருந்து கொழும்பு வரை; அதே போன்று ரங்கூனிலிருந்து கராச்சி வரை ஒற்றுமையாக நோன்பை ஆரம்பித்தும், பெருநாள் கொண்டாடியும் மகிழ்ந்தனர். திடீரென்று ஒரு நவீனம் தோன்றி இந்த உம்மா பிளவுபடுத்தப்பட்டு (1947 தேசப் பிரிவினைக்குப் பின்னர்) வேறுபட்ட நாட்களில் நோன்பும், பெருநாளும் என்ற பித்அத் உருவாக்கப்பட்டது. மேலும் 1971 க்குப் பின்னர் வங்க தேச தகவலை (1971 வரை கிழக்கு பாகிஸ்தான்) ஏற்பதில்லை என்ற பித்அத்தை பாகிஸ்தான் முஸ்லிம்கள் உருவாக்கினர். அதே போன்று சில வருடங்களுக்கு முன்னர் வரை இலங்கை வானொலியின் அறிவிப்பிற்காக ஆவலுடன் காத்திருந்து ஒற்றுமையாக பெருநாள் கொண்டாடிய தமிழக முஸ்லிம்கள் மத்தியில் தத்தம் பகுதி தனிப்பிறை என்ற பித்அத் உருவாகியது. தமிழக முஸ்லிம்கள் கேரள மாநிலத்திலிருந்து தகவல் கிடைக்கப்பெற்றால் அதை ஏற்பதில்லை. ஆனால் அதைவிட தூரமான இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து கிடைக்கும் தகவலை ஏற்றுக் கொள்கிறார்கள். இது எதனால்? கேரளாவின் எல்லையை ஒட்டிய ஊர்களிலுள்ளோர் (கன்னியாகுமரி மாவட்டம்) பெரும்பாலான சமயங்களில் கேரளத்தையும், சில சமயங்களில் தமிழகத்தையும் பின்பற்றி முடிவெடுக்கின்றனர். தேசியம், வட்டாரம், மொழி உணர்வு போன்ற அளவுகோலைக் கொண்டு மனோ இச்சையின்படி முடிவெடுக்க நபி (ஸல்) கற்றுத் தந்தார்களா?
நபி (ஸல்) அவர்கள் இது குறித்து கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
“எவர் ஒருவர் அஸபிய்யாவிற்காக (தேசியவாதம்) மக்களை அழைக்கிறாரோ, அஸபிய்யாவிற்காக போராடுகிறாரோ, அஸபிய்யாவிற்காக மர ணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல”. (அபூதாவூது).
எனவே, முஸ்லிம்களே! உங்களில் ஓர் ஆடவரோ அல்லது மகளிரோ அவர் எந்த பகுதியை சார்ந்தவராயினும் பிறையைப் பார்த்தது உறுதி செய்யப்பட்டால் அதை ஏற்று செயல்படுங்கள். அத்தகவல் அஸ்ஸாம் மாநிலத்தின் டிக்பாய் பகுதியிலிருந்து அல்லது பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலாவிலிருந்து கிடைக்கப் பெற்றாலும் சரியே. எனவே எந்த மனிதருடைய காலதமாதமான அறிவிப்பிற்காக காத்திருக்க வேண்டாம். நீங்கள் நோன்பை நோற்பதும் அதை நிறைவு செய்வதும் அல்லாஹ் (சுபு) வின் திருப்பொருத்தத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அல்லாஹ் (சுபு) விற்கும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களக்கும் கட்டுப்பட்டு ஒரே உம்மாவாக செயல்பட அல்லாஹ் (சுபு) உலக முஸ் லிம்கள் அனைவர்களுக்கும் அருள்பாலிப்பானாக.
“எவர்கள் தங்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்த பிறகும் தங்களுக்குள் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து போனார்களோ அவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். இத்தகையோர்களுக்கு மகத்தான் வேதனை உண்டு”. ( 3: 105)

Sunday, July 25, 2010

ஈராக்கில் அதிகளவில் யுரேனியம் பாவித்ததை ஒப்புகொள்ளும் UK Defense

ஈராக்கில் அதிகளவில் யுரேனியம் பாவித்ததை ஒப்புகொள்ளும் UK Defense

ஈராக்கில் ஐதான யுரேனியத்தை -depleted uranium- கொண்ட ஆயுதங்களை அமெரிக்காவும், பிரிட்டனும் பாவித்தமையை பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர் லியம் பொக்ஸ்- Liam Fox- ஒத்துக்கொண்டுள்ளார் “UK forces used about 1.9 metric tons of depleted uranium ammunition in the Iraq war in 2003,” UK Defense Secretary Liam Fox said in a written reply to the House of Commons on Thursday, the Kuwait News Agency reported.
அதிகரித்துள்ள கேன்சர், பிறக்கும் குழந்தைகளின் ஊனம் போன்ற நோய்களுக்கான காரணங்களை உலக சுகாதார அமைப்பு- The World Health Organization- ஆராய தொடங்கியுள்ளது ஈராக்கில் 2000 டன் ஐதான யுரேனியம் அமெரிக்க, பிரிட்டன் ஆக்கிரமிப்பு படைகளால் பயன் படுத்த பட்டுள்ளது என்று அறிக்கைகள் கூறுகின்றன ஈராக்கின் பலுஜா போன்ற பயங்கர அமெரிக்க தாக்குதல்கள் நடைபெற்ற இடங்களில் உடல் ஊனத்துடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது அமெரிக்கா படு பயங்க இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே பிறக்கும் குழந்தைகளில் அதிகமானது உடற் குறைபாடுகளுடன் பிறப்பதாகத் ஈராக் மருத்துவ செய்திகள் கூறிவருகின்றது இதில் குறிப்பாக அதிகமாக ஐதான யுரேனியம் பயன் படுத்தபட்டுள்ளது விரிவாக பார்க்க
ஐதான யுரேனியம் அணு ஆயுதங்களுக்கும் அணு ஆலைக்கான எரிபொருள் தயாரிப்புக்கும் பயன்படுத்தும் யுரேனியம் பதப்படுத்தப்படும் போது விளையும் உபவிளைவாகும். காரீயத்தை விட 1.7 மடங்கு பாரமான ஐதான யுரேனியமானது பலமான தடைகளை ஊடறுத்து செல்வதற்கு உரிய ஆயுதங்களுக்கு சேர்க்கப்படுகின்றது. இது கதிரியக்கமுள்ள ஆவிமண்டலமான யுரேனியம் ஒக்சைட்டை உருவாக்குவதுடன், இது சுவாசிக்கப்பட கூடியதும் காற்றினால் கொண்டு செல்லப்பட்டு மண் இரசாயன தாக்கமுற்று உணவுத்தொடரிலும் பரவுதலுக்கான சாத்தியம் உள்ளது என்று .
பல டன் ஐதான யுரேனியம் அமெரிக்க, பிரிட்டன் ஆக்கிரமிப்பு படைகளால் குறிப்பாக பலுஜா பகுதியில் மிகவும் செறிவாக பயன்படுத்த பட்டுள்ளது ஐதான யுரேனிய ஆயுதத்தின் அபாயம் தொடர்பாகவும் அதிலிருந்து தம்மை பாதுகாப்பது தொடர்பாகவும் அமெரிக்க படைகள் நன்கு அறிந்திருந்தமையால் அவர்களுக்கு இந்த பாதிப்புகள் ஏற்படவில்லை
ஈராக் அதிகரிக்கும் நோய்களுக்கும் ஐதான யுரேனியத்திற்கும் உள்ள தொடர்பை அண்மைக்காலம் வரை அமெரிக்கா மறுத்து வருகின்றது . பென்டகன் பேச்சாளரான கெனத் பெக்கன் வளைகுடா யுத்தத்தின் போது பாவித்த ஆயுதங்கள் குறித்து பரந்த ஆய்வை செய்துள்ளதாகவும் புற்று நோய்க்கான அல்லது வேறு உடல் நலக்கேடுக்கான அறிகுறிகளுக்கான சாட்சியங்கள் கண்டுபிடிக்கப் படவில்லை என குறிப்பிட்டுள்ளார். ஆனால் அமெரிக்க இராணுவ சுற்றாடல் கொள்கைகளுக்கான அமைப்பு 12 வருடங்களுக்கு முன்னர் வெளிவிட்ட அறிக்கையில் ” ஐதான யுரேனியம் உடலினுள் புகுந்தால் அது மருத்துவ விளைவுகளை உருவாக்கும் தன்மைகளை கொண்டுள்ளதாகவும், அதனுடன் தொடர்பாக இரசாயன, கதிரியக்க அபாயம் இணைந்துள்ளதாகவும், ஐதான யுரேனியம் அண்மையிலுள்ள நபர்களுக்கு முக்கிய பாதுகாப்பின்மையை உருவாக்கும்” என குறிப்பிட்டுள்ளது.
விஞ்ஞானிகளும், சுற்றுசூழல் பாதுகாப்புவாதிகளும் நீண்ட காலமாக ஐதான யுரேனியம் உள்ளடங்கிய ஆயுதங்களை பாவிப்பதற்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளதுடன், எதிர்கால சமுகம் மீதான கணிப்பிடமுடியாத அதன் விளைவுகள் தொடர்பாகவும் எச்சரித்துள்ளனர். 1999 இல் லண்டனில் நடந்த மகாநாடு ஒன்றில் பிரித்தானிய உயிரியலாளரான ரொஜர் கொக்கில் வளைகுடா யுத்தத்திலும், சேர்பியாவுக்கு எதிராகவும் அமெரிக்க, பிரித்தானிய படைகளால் பாவிக்கப்பட்டதால் 10.000 மோசமான புற்றுநோயாளிகளை உருவாக்கியிருக்கும் என்ற தலைப்பில் கலந்துரையாட வேண்டும் என தெரிவித்திருந்தார் என்பது குறிபிட தக்கது

Tuesday, July 20, 2010

அமெரிக்க இரசாயன குண்டுகள் பலுஜா குழந்தைகளை ஊனமாக உருவாக்கிவருகின்றது

அமெரிக்க இரசாயன குண்டுகள் பலுஜா குழந்தைகளை ஊனமாக உருவாக்கிவருகின்றது


ஈராக்கின் பலுஜா போன்ற பயங்கர அமெரிக்க தாக்குதல்கள் நடைபெற்ற இடங்களில் உடல் ஊனத்துடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது அமெரிக்க இராணுவத்திற்கும், இஸ்லாமிய போராளிகளுக்கும் இடையில் மோதல்களின்போது அமெரிக்கா படு பயங்க இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே பிறக்கும் குழந்தைகளில் அதிகமானது உடற் குறைபாடுகளுடன் பிறப்பதாகத் ஈராக் மருத்துவ செய்திகள் கூறிவருகின்றது .
இந்த தாக்குதல்களில் பயங்கர இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது அதன் பயங்க தாக்கங்களை இன்று பலுஜா மக்கள் அனுபவிகின்றார்கள் அன்பார் ,பலுஜா, மற்றும் பல பிரதேசங்களில் வாழும் இளம் தம்பதியர் பிள்ளைகளை பெற பயப்படுகின்றார்கள் இந்த பிரதேசங்களில் அமெரிக்க பயங்கரவாதம் பயன்படுத்திய இரசாயன ஆயுதங்களின் விளைவுகளை உடனடியாக அவர்களை கொன்று ஒழித்ததுடன் விட்டுவிடவில்லை தப்பியவர்களுக்கும் இவ்வாறான பயங்கர பாதிப்புகளை ஏற்படுத்திவருகின்றது என்று குற்றசாட்டுகள் தொடர்ந்து தெரிவிக்க படுகின்றது


ஆப்கானிஸ்தானில் மக்களை சுட்டு கொல்வது ஒரு மகிழ்ச்சி தரும் விளையாட்டு


ஆப்கானிஸ்தான் அமெரிக்க படைகளுக்கு புதிய தளபதியாக ஒபாமாவினால் பெயர் குறிப்பிடபட்டுள்ள ஜெனரல் ஜேம்ஸ் மட்டிஸ்-General James Mattis- என்பவன் தெரிவித்ததாக இருதினங்களுக்கு முன்னர் -ஆப்கானிஸ்தானில் மக்களை சுட்டு கொல்வது ஒரு மகிழ்ச்சி தரும் விளையாட்டு- It’s fun to kill in Afghanistan- என்று தெரிவித்து தனது கொலை இரத்தவெறியை மிக சர்வசாதாரணமாக வெளிபடுத்தியுள்ளான்.
2004 ஆண்டு ஈராக் பலுஜா பிரதேசத்தின் மீது வெறித்தனமான தாக்குதல்கள் நடாத்தி பல ஆயிரம் உயிர்களை கொன்ற பலுஜா அமெரிக்க பயங்கரவாதப் படைக்கு தலைமை தான்கியவந்தான் இந்த ஜெனரல் ஜேம்ஸ் மட்டிஸ் அன்று பலுஜா நகர் மீது இரசாயன குண்டுகள் வீசப்பட்டு பல ஆயிரம் முஸ்லிம்கள் மொடூரமான முறையில் அழித்தவன் இந்த ஜெனரல் ஜேம்ஸ் மட்டிஸ் அன்று பலுஜாவில் பல ஆயிரம் பேர் அழிக்கப்பட்டது குறித்தும் எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அன்றைய அமெரிக்க இராணுவ அமைச்சர் டோனால்டிடம் பத்திரிக்கைகாரர்கள் கேட்ட போது, நாங்கள் பிணங்களை எண்ணுவதில்லை. என்று வெறித்தனமாக பதில் கூறி ஜெனரல் ஜேம்ஸ் மட்டிசை குற்றசாட்டுகளில் இருத்து பாதுகாத்தார் என்பதும் குறிபிட தக்கது இன்று ஆப்கானிஸ்தான் அமெரிக்க படைகளுக்கு புதிய தளபதியாக ஒபாமா ஒபாமாவினால் பெயர் குறிப்பிட பட்டுள்ள இந்த பயங்கரவாதி ஜெனரல் ஜேம்ஸ் மட்டிஸ் ஆப்கானிஸ்தானில் எத்தனை கொடூரங்களை அரங்கேற்றபோகின்றான் என்பதைத்தான் முன்னோட்டமாக கூறியுள்ளான் ஜெனரல் ஜேம்ஸ் மட்டிஸி கூற்றை அவரின் ஆப்கானிஸ்தான் தளபதி நியமனத்தை பாதுகாக்கும் முகமாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ரொபேர்ட் கேட்ஸ் Robert Gates, இந்த கூற்று ஐந்து வருடங்களுக்கு முந்தியது என்று தெரிவித்து அமெரிக்க செனட் இவனின் நியமனத்தை நிராகரிப்பதில் இருந்தும் பாதுக்காக முற்பட்டுள்ளார்

Wednesday, July 14, 2010

எல்லைகளுக்குள் விலைபோகும் பெயர்தாங்கி முஸ்லிம்கள்

எல்லைகளுக்குள் விலைபோகும் பெயர்தாங்கி முஸ்லிம்கள்


இஸ்லாம் ஏற்படுத்திய புரட்சி சவுதியின் உமரையும் பாரசீக ஸல்மானையும் எத்தியோப்பிய பிலாலையும் சகோதரர்களா ஆக்கியது- ‘நிச்சயமாக முஃமின்கள் எல்லோரும் சகோதரர்களாவர்’ -அல்ஹுஜுராத்- 10-
M.ரிஸ்னி முஹம்மட்
பிரிட்டன் அரசும் அமெரிக்க அரசும் இணைந்து பல முஸ்லிம் தேசங்களில் தமது பயங்கரவாத படைகளை ஏவிவிட்டு முஸ்லிம்களின் இரத்தத்தை ஓட்டிவருகின்றது முஸ்லிம்களை முஸ்லிம்களால் கொலை செய்கிறது சிறுவர் சிறுமியர் என்ற எந்த வேருபாடுகளும் பார்க்காமல் கொன்று குவிக்கின்றது பெண்களை சிறைகளில் அடைத்து நிர்வாணபடுத்தி வதை செய்கின்றது, இத்தனையும் செய்யும் இந்த மேற்கு பயங்கரவாத இராணுவம் தமது மாமிச வேட்டை , காம வேட்டை போன்றவற்றை முடித்துவிட்டு நாடு திரும்பும்போது பிரிட்டனிலும் , அமெரிக்கா மற்றும் ஏனைய ஆக்கிரமிப்பு மேலாதிக்க நாடுகளிலும் உள்ள முஸ்லிம் வாலிபர்கள் வெறியாட்டத்தை முடித்து விட்டு நாடு திரும்பும் சிப்பாய்கள் கூட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர் விரிவாக பார்க்க இது தவிர்க்க முடியாத இயல்பான உணர்வின் வெளிப்பாடு ஆனால் சில தினங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானிலும் , ஈராகிலும் கொல்லப்பட்ட பிரிட்டன் ஆக்கிரமிப்பு படை சிப்பாய்களை அவர்களில் சாமாதிக்கு சென்று வணக்கம் செலுத்தும் சில முஸ்லிம் பெயர்தாங்கிகளையும் அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் அரைகுறை ஆலிம் ஒன்றையும் BBC தனது செய்தி சேவையில் ஒளிபரப்பியது இத்தகைய பாவங்களில் இருந்து அல்லாஹ் அனைவரையும் பாதுகாக்க வேண்டும் தேசம் , தேசியம் ,நாடு என்ற குறுந் தேசிய எல்லைகளை காரணம் காட்டி இஸ்லாமிய கொள்கைக்கு எதிராக செயல்படமுடியாது எந்த காரணங்களையும் முன்வைத்து தனது சகோதர முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் அரசையோ , அரசின் இயந்திரமான இராணுவத்தையோ ஆதரிக்க முடியாது என்ற வலுவான குரல் இதற்கு எதிராக ஓங்கி ஒலித்து கொண்டிருகின்றது
இஸ்லாம் ஏற்படுத்திய புரட்சி சவுதியின் உமரையும் பாரசீக ஸல்மானையும் எத்தியோப்பிய பிலாலையும் சகோதரர்களா ஆக்கியது- ‘நிச்சயமாக முஃமின்கள் எல்லோரும் சகோதரர்களாவர்’ -அல்ஹுஜுராத்- 10-
இஸ்லாம் உலகளாவிய சகோதரத்துவத்தை அடித்தளமாக கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பவே முனைந்தது. முனைகிறது இந்த உலகளாவிய சகோதரத்துவதுக்கு தடையாக அமையும் , தேசம், தேசியம், மொழி, இனம் , பிராந்தியம், இயக்கம் என்ற வேறுபாடுகளை அனைத்தையும் இஸ்லாம் புறம் தள்ளி முஸ்லிம் என்ற பிரதான அடையாளத்தை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வழங்கியுள்ளது அந்த பிரதான அடையாளத்துக்கு எதிரான எந்த கோட்பாடுகளையும் முஸ்லிம் என்ற அடையாளம் புறம் தள்ளி விடுகின்றது இன்று நாட்டின் எல்லைகளுக்குள் அடையாளத்தை தொலைக்கும் தொலைக்க தூண்டும் நிகழ்வுகளை காண கூடியதாகவுள்ளது இதில் முஸ்லிம் சமுகத்தில் சிறிய ஒரு பகுதியினர் ஈடுபட்டாலும் மேற்க்கு ஊடகங்கள் உலகின் பெரும்பான்மை முஸ்லிம்களின் செயலாக இவற்றை காட்ட முனைந்து வருகின்றது இந்த வீடியோ இதைத்தான் காட்டுகின்றது
இஸ்லாமிய சகோதரத்துவம் இவ்வுலகில் மட்டுமல்லாது நாளை மறுமையிலும் வெற்றியை பெற்றுத் தருவதாக இஸ்லாம் கூறுகின்றது. மறுமை நாளில் பரந்துவிரிந்த மஹ்ஷர் வெளியில் சூரியன் தலைக்கு மேல் கொண்டுவந்து வைக்கப்படும். அந்நேரத்தில் ஏழு கூட்டத்தினருக்கு மாத்திரம் அல்லாஹ்வுடைய நிழல் வழங்கப்படும். அதில் ஒரு கூட்டம் தான் அல்லாஹ்வுக்காக நேசித்து அவனுக்காக தோழமை கொண்டு அவனது பாதையில் பிரிந்துபோன இரு சகோதரர்களாகும் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் குறிப்பிடும் போது “என் உயிரைத் தன்கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! ஈமான்கொள்ளும் வரை நீங்கள் சுவர்க்கத்தில் நுழைய மாட்டீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம், அன்பு கொள்ளும்வரை ஈமான் கொண்டவராக மாட்டீர்கள்.” -முஸ்லிம்-
‘(நபியே!) எந்த மனிதர்கள் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசங் கொண்டிருக்கின்றார்களோ அவர்கள், எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்பவர்களாக இருக்கின்றார்களோ அவர்களை நேசிக்கமாட்டார்கள். அவர்கள், தங்களுடைய மூதாதைகளாயிருந்த போதிலும் அல்லது தங்களுடைய சகோதரர்களாயிருந்த போதிலும் அவர்களுடன் இவர்கள் உறவாடுவதை நீர் காணமாட்டீர். இத்தகையோருடைய இதயங்களில் தான் அல்லாஹ் விசுவாசத்தைப் பதியவைத்துத் தன்னுடைய உணர்வைக் கொண்டும் இவர்களைப் உறுதிப் படுத்தி வைத்திருக்கின்றான்’ -அல்முஜாதலா- 22-

எங்கே செல்கிறாய்?

எங்கே செல்கிறாய்?
மடிந்து விழுந்து நெழிந்து தவழ்ந்து புரண்டு விரைந்து சிதறும் புணலில்...இடிந்து குழைந்து அழிந்து விழுந்து விரண்டு மறைந்த பதராய்… எழுந்து விளைந்து குவிந்து அலைந்து திரண்டு ஒளிர்ந்த படரும் சுடரில்...ஒடிந்து தளர்ந்து குணிந்து வளைந்து மிரண்டு அழிந்த சிறகாய்… நீ… எங்கே செல்கிறாய்? அம்மா வாசைப் பௌணர்மியாய் ஆழிப் பேரலை அகிம்சையாய் இம்மையின் மறுமையாய் ஈராக்கின் அமைதியாய்… நீ… எங்கே செல்கிறாய்? இறக்கப் பிறந்த நீ… பறக்க நினைத்தாய்! உயரப் பறக்க சிறகை ஒடித்தாய்! நீ… எங்கே செல்கிறாய்? ஒரு நாள் நீ வல்லரசு! இன்னாள்…இல்லை… உக்கில்லை ஓர் அரசு! நீ சொன்னாய்… பரவாயில்லை… இன்று நான் நான் அல்ல… இன்று நான் நாம்! ஐம்பது, ஐம்பது சிற்றரசு! பெரிசு…ஐம்பதா ஒன்றா? ஐம்பது… நான் புதுப்பாவை… எனக்கேன் பொல்லாப்பு? பேரரசு பெருமைக்கா? போர் செய்ய முட்டாளா? தேசியம் தேனாக… ஜன நாயகம் பாலாக… கபிடலிஸம் மதுக்கோப்பை! கொம்யூனிஸம் விலைமாது! இஸ்லாம் இருக்கட்டும்…அழையா விருந்தாளி! மொடர்ண் இஸ்லாம்… ஆஹா… உல்லாசம்! நீ பாவை அல்ல – அப்பாவி இல்லை - நீ பாவி! மேற்குலகின் காலனி… அண்ணார் என்றான்- ஐரோப்பா அவனிடமிருந்ததோ இராட்சத சிலந்தி வலை பலம் அல்ல – வெறும் பிரமாண்டம் ஏமாந்தாய்…அண்ணார்ந்தாய் - கொக்கின் கழுத்து கட்டையானது அண்ணார்ந்தாய் - அவனை(அல்லாஹ்வை) அழைக்கவல்ல அன்னியனை அரவணைக்க! நீ… எங்கே செல்கிறாய்? விடுதலை என் முற்றம் சுதந்திரம் என் கொல்லை அதில் வீடு உலகாயதம் பெண்ணாட்டி அமெரிக்கா! வைப்பாட்டி ஐரோப்பா! விளையாட இஸ்ரவேலு… வாரிசு டொமோகரசி! வழக்கென்றால் ஐயன்னா நாவன்னா… இதுதானே உன் உலகம்… நீ… எங்கே செல்கிறாய்? மின்னல் மிலேனியத்தில் மில்லத்துந் இம்ராஹீமா… ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவுமா? குர்ஆனும் ஏடுதானே! ச்ச்சும்மா வாசிக்க வைத்திருப்போம்… அதில் பூஜிக்க ஒன்றுமில்லை… இதுதானே உன் கொள்கை… நீ… எங்கே செல்கிறாய்? அக்ஸா அலுப்பென்றால் கஃபாவை கைமாற்றுவோம்! விசுவாசியின் குருதி அதை விட மேலானது… அதையே ஓட்டி விட்டோம்… இது என்ன கல்தானே…இதுதானே உன் தீர்வு நீ… எங்கே செல்கிறாய்? மறுமையா மண்ணாங்கட்டி… இதுதான்(இம்மை) உள்ளங்கை நெல்லிக்கனி! கேள்வியா கணக்கா…ஐய்யோ… ஐய்யோ நாளைக்கு பிளைப்பைப் பாரப்பா… இதுதானே உன் வாதம் நீ… எங்கே செல்கிறாய்? நில்… நில்…அக்கினிப்பிளம்பொன்றில் அகோரமாய் ஓர் காட்சி! கருகிக் கருகிக் கதறிக் கதறி ஓர் ஓசை! அதோ…அதோ அது பிர்அவ்னா? இல்லை அது ஹாமான்…இல்லை நம்ரூத்… ஐய்யோ அல்ல அது ஜஹ்ல்… அபு ஜஹ்ல்… நீ… எங்கே செல்கிறாய்?

இஸ்லாமிய சாம்ராஜியங்கள் ஒரு வீடியோ பார்வை

இஸ்லாமிய சாம்ராஜியங்கள் ஒரு வீடியோ பார்வை



1300ஆண்டுகள் உலகின் அதிகார மிக்க சக்தியாக விளக்கிய இஸ்லாமிய சாம்ராஜியங்கள் 1924 மார்ச் 3 இம் திகதி திங்கள் கிழமை காலை வேளையில் உஸ்மானிய கிலாபத் அழிப்புடன் இஸ்லாமிய சாம்ராஜ்யங்களின் தொடர் நகர்வு நிறுத்தபட்டது உலகை விட்டும் அழிக்கபட்டது அதுவரையும் உலகில் முஸ்லிம்களுக்கு ஏதோ ஒருவகையில் தலைமைத்துவம் இருந்து வந்தது உஸ்மானிய கிலாபத் அழிப்புடன் முஸ்லிம் உம்மாஹ் அனாதையானது, கிலாபத் சாம்ராஜியம் கனவு தேசமானது, மேற்கு மேலாதிக்கம் கண்ட கனவு நிஜமானது, முஸ்லிம் உம்மத் துடித்தது ,அரசியல் அனாதையானது
ஆனால் சோர்வடைந்து ஒடி ஒதுங்கி இருக்க வில்லை மறு கணமே மீண்டும் சிந்தித்து செயல்பட புறபட்டது பயணம் மிகவும் நீண்டது இன்றும் தொடர்கின்றது கிலாபத் அழிக்கபட்டு இன்றுடன் 86 வருடங்களும் 4 மாதங்களும் 11 நாட்களும் கடந்தும் மீண்டும் இழந்த முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமை ஏற்படுத்த படவில்லை விரிவாக பார்க்க
இஸ்லாமிய ஆட்சி உலகில் அல்லாஹ்வின் தூதரினால் நிலை நிறுத்தப்பட்டு 7ஆம் நூற்றாண்டில் இருந்து 19 ஆம் நூற்றாண்டு வரை மனித இனத்திற்கு அருளாய் இருந்த பிரமாண்டமான சாம்ராஜ்யம் துண்டு துண்டாக உடைக்க பட்டு தேசிய வாதம் மிகவும் நுட்பமாக புகுத்தபட்டது தேசிய வாதத்தை பயன்படுத்தி மேற்கு பயங்கரவாதம் முஸ்லிம் உம்மாஹ்வை பலவீன படுத்தி முஸ்லிம் உம்மாஹ்வின் முதுகில் ஏறி ருத்ர தாண்டவம் ஆடுகிறது அழிக்கபட்ட அரசியல் தலைமை உலகில் மீண்டும் ஏற்படுத்த பல அமைப்புகள் பல முறைகளை பயன்படுத்தி முயற்சிகிறது இவை முஸ்லிம் உம்மத் மீண்டும் தலைமை கொண்டு எழும் என்பதை கட்டியம் கூறுகிறது.

நோன்பு - மாண்புகளும், படிப்பினையும்


நோன்பு - மாண்புகளும், படிப்பினையும்
இஸ்லாத்தின் அடிப்படை வணக்க வழிபாடுகளுள் நோன்பு மிகவும் முக்கியமானது. ஏனெனில் மனித வாழ்க்கையின் முழுமையான நோக்கங்களை நிறைவு செய்யும் வகையில் இதன் விளைவுகள் அமைந்திருக்கின்றன. மனித வாழ்க்கைக்குரிய இறைவழிக்காட்டலான அல்குர்ஆனை ரமழான் மாதத்தில் இறைவன் இறக்கி வைத்ததிலிருந்து இம்மாதத்தினதும், இக்கடமையினதும் புனிதத்துவத்தைப் புரிந்து கொள்ளமுடியும். ஏனைய எல்லாக் கடமைகளோடும் தொடர்புபட்ட விளக்கங்களை வழங்கும் அல்குர்ஆனின் போதனைகள் இப்புனிதமான மாதத்தோடு தொடர்புபட்டதாகவே அமைந்திருக்கின்றன.அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ரமழான் வந்த போது நபி(ஸல்) அவர்கள் உங்களிடம் வளம் மிக்க மாதமொன்று வந்துள்ளது. அதில் உங்களுக்கு நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதில் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன. ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றன. ஆயிரம் மாதங்களை விடச்சிறந்த ஓர் இரவு அதில் இருக்கிறது. அந்த நன்மையை இழந்தவன் எல்லா நன்மைகளையும் இழந்தவனாவான்.” என்று கூறினார்கள்.(அஹ்மத், நஸாஈ, பைஹகீ) நோன்பு மனித வாழ்வில் ஆத்மீக ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல மகத்தான மாற்றங்களை ஏற்படுத்துகின்றுது.நோன்பு பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிட்டுக் காட்டுகிறது, ”விசுவாசிகளே! உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போல பயபக்தியுடையோர்களாக மாறலாம் என்பதற்காக உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது (அல்பகரா:183) இந்த வசனத்தில் மனிதனுடைய வாழ்க்கை நெறிப்படுத்தப்படுகின்ற மூன்று முக்கியமான பிரிவுகளை இறைவன் சுட்டிக் காட்டுகின்றான். விசுவாசிகளே என விளீத்துப்பேசுவதிலிருந்து இறைவிசுவாசத்தின் முக்கியத்துவத்தை அவன் உணர்த்திக்காட்டுகிறான். ஒரு மனிதனிடத்தில் உண்மையான விசுவாசம் ஏற்பட்டதன் பின்னரே அவனால் செயல்கள் பற்றிய முடிவுக்கு வரமுடியும். இதனால்தான் அல்குர்ஆனில் ஈமானைப்பற்றிக்குறிப்பிடும் போது 'அமலுஸ் ஸாலிஹாத்" என்ற நல்ல செயல்களையும் இறைவன் தொடர்புபடுத்தி விடுகிறான். ஈமானுக்குப்பின்னர் நோன்பும், இறைவனைப்பற்றிய அச்சமும் அவனைப்புனிதப்படுத்தக் கூடியன என்ற கருத்து இங்கு தெளிவுபடுத்தப்படட்டுள்ளது.நோன்பு நோற்கின்ற ஒரு முஸ்லிம் இறைவன் கூறுகின்ற கருத்துப்படி மூன்று முக்கியமான மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டும்.அவன் முதலாவது வாழ்க்கையின் எல்லாக் கட்டத்திலும் அல்லாஹ்வை அஞ்சி நடக்கின்ற ஒரு நிலைக்கு மாற வேண்டும். இரண்டாவது, நேர்வழியை அருளியவனின் புகழ்பாடி அவனுடைய பெருமையை மேலோங்கச் செய்யவேண்டும். நன்மைகளை அருளியதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்தவேண்டும். இங்கு இறையச்சம், இறைவனைப் தூய்மைப்படுத்தல், இறைவனுக்கு நன்றி செலுத்தல் என்ற மூன்று அம்சங்களும் நோன்பின் விளைவுகளாக எடுத்துக் காட்டப்பட்டிருகின்றன. இத்தகைய விளைவுகளை நோன்பு மனிதனிடத்திலே ஏற்படுத்தவில்லையாயின் அது உண்மையில் நோன்பாக அமையமாட்டாது. உயிரற்ற உடலைப் போன்று,நறுமணமற்ற மலரைப்போல அந்நோன்பு காணப்படும்.உடலின் நோன்பு மட்டும் இஸ்லாத்தின் எதிர்பார்ப்பல்ல, உள்ளத்தின் நோன்பையும் சேர்த்தே அதன் பெறுமதியை இஸ்லாம் மதிக்கிறது, இதனைத்தான் நபி(ஸல்)பின்வருமாறு குறித்துக்காட்டினார்கள். ”நோன்பு பிடிப்பவர் பலர் பசியுடனும் தாகத்துடனும் இருப்பவர்களாக மட்டுமே நின்று விடுகின்றனர்.விலக்கப்பட்டதைச் செய்து நோன்பை முறித்துக்கொள்கினறனர். (ஆகுமான உணவு உன்பதை நிறுத்தி மனித ஊணைத்தின்கின்றனர். புறம் பேசுவது மனித மாமிசத்தைப் புசிப்பதாகும். )எத்தனையோ மனிதர்கள் நோன்பு நோற்கின்றனர். அவர்கள் தாகித்திருந்ததைத் தவிர வேறு எந்தவொரு பயனும் அவர்களுக்கு இல்லை. எத்தனையோ மனிதர்கள் நின்று வணங்குகின்றனர். அவர்கள் விழித்திருந்ததைத் தவிர வேறு எந்தவொரு பயனும் அவர்களுக்கு இல்லை.(தாரமி) நோன்பு ஓர் அலாதியான ஆத்மீக தெம்பினை மனிதனுக்கு வழங்குகின்றது. ஒருமாதகாலமாக ஆத்மீக மழையில் நனையக் கூடியபாக்கியம் அவனுக்குக்கிடைக்கின்றது. ஒரு வியாபாரி இலாபங்களை ஈட்டிக் கொள்வதற்கு சில மாதங்களுக்கு முன்பே தயாராகின்றான். அதிகமாக முதலீடுகளைச் செய்கின்றான். எத்தனையோ சிரமங்களை எதிர்கொள்கின்றான்.வாழ்க்கையில் ஒருமனிதனுக்கு ஒரு ரமழான் கிடைப்பதே பாக்கியமாகும். அதன் ஒவ்வொரு நிமிடமும் அருளாகும். அல்லாஹ்வின் அருள்மழையில் நனையும் பாக்கியத்தை யார்தான் இழக்க விரும்புவார்? இவவாறான ஒருமாதத்தை அடைந்து கொள்பவர்கள் நோன்பு நோற்பதிலும், இரவுநின்று வணங்குவதிலும், அல்குர்ஆனை அதிகமதிகம் ஓதுவதிலும், திக்ர் செய்வதிலும் ஈடுபட்டுவருகிற போது அல்லாஹ்வோடு வாழ்வதில் ஒரு சுவையைப் பெற்றுக் கொள்கிறார்கள். அப்போது இச்சாதாரண அடியானை அல்லாஹ் மிக உயர்ந்த இடத்தில் வைத்துநோக்குகின்றான். அவனைப்பற்றி அல்லாஹ் பெருமையடைகின்றான். அல்லாஹ்வின் உயர்ந்த அன்பும் திருப்தியும்தான் இங்கே மனிதனது நோக்கமாக அமைகின்றது. வேறு எத்தகைய உலக இலாபங்களோ முகஸ்துதியோ அங்கு காணப்படமாட்டாது. ஆதமின் மக்கள் செய்யும் அமல்கள் அனைத்தும் அவனுக்காகவே புரியப்படுகின்றன நோன்பைத்தவிர. அது எனக்கே உரியது அதற்கு நானே கூலி கொடுக்கிறேன். எனக்காகவே அவன் உண்பதைத் தவிர்க்கின்றான், எனக்காகவே அவன் பானங்களைப் பருகாதிருக்கிறான் என்னைப் பயந்தே அவன் தனது ஆசைகளை கட்டுப்படுத்திக் கொள்கிறான் எனக்குப் பயந்தே அவன் தனது மனைவியுடன் சேராதிருக்கிறான்.” என்று அல்லாஹ் நோன்பாளிகளைப்பற்றிக் கூறுகிறான். (இப்னு குதைமா)நோன்பாளி பள்ளிவாசலில் இஃதிகாப் இருப்பது கொண்டு ஆத்மீக உணர்வுகளை வளர்த்துக்கொள்ளமுடியும். நபி(ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் இவ்வாறுதான் தமது ஆத்மீகப் பசியைத் தீர்த்துக்கொண்டார்கள். இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ரஸீல்(ஸல்) ரமழானின் இறுதிப்பத்தில் இஃதிகாப் இருப்பார்கள்.” (புஹாரி,முஸ்லிம்) ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ் தஆலா ரஸீல்(ஸல்) அவர்களை வபாத்தாகும் வரை அவர்கள் ரமழானில் இறுதிப்பத்தில் இஃதிகாப் இருந்து வந்தார்கள்.” (புஹாரி,முஸ்லிம்) நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமழானிலும் பத்து நாட்கள் இஃதிகாப் இருந்து வந்தார்கள். அவர்களது உயிர் கைப்பற்றப்பட்ட வருடத்தில் இருபது நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள்.” (புஹாரி)நோன்பு காலங்களில் சாதாரண நாட்களைவிட ஒருவர் தனது பிராத்தனைகளை அதிகரித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் நோன்பாளியோடு இறைவன் இரக்கப்படுகின்றான், அன்பு கொள்கின்றான், அவன் தன்னிடம் கேட்கிறானா என்பதை அவன் ஆவலோடு பார்த்திருக்கின்றான். இதனை நபி(ஸல்)அவர்கள் பின்வருமாறு தெளிவுப்படுத்தினார்கள். மூன்று பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை. தந்தை தனது பிள்ளைக்காகக் கேட்கின்ற துஆ, நோன்பாளியின் துஆ, பிரயாணியின் துஆ.” இன்னொரு சந்தர்ப்பத்தில் நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள். நோன்பு நோற்கின்ற நோன்பாளி, நீதியான ஆட்சியாளன்,அநியாயம் இழைக்கப்பட்டவன் ஆகிய மூவருடைய பிரார்த்தனையை அல்லாஹ் நிராகரிப்பதில்லை.” (திர்மிதி, அஹ்மத்)நோன்பில் மனித ஆத்மாவுக்கு கிடைக்கும் இன்னொரு முக்கியமான உணவு இரவுத் தொழுகைகளாகும். அதில் ஓர் அலாதியான சுவை முஃமினுக்குக் கிடைக்கின்றது. அச்சுவையைப் பெற்றவர் ஒரு நாளும் அதனை இழக்க விரும்பமாட்டார். ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி(ஸல்) அவர்கள் இரவில் எழுந்து கால்கள் வீங்கும் அளவுக்கு நீண்ட நேரம் தொழுவார்கள். அல்லாஹ்வின் தூதரே முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையிலும் ஏன் இப்படி தொழ வேண்டும் என்று கேட்டேன். அதற்கவர்கள் நான் அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா என்று பதிலளித்தார்கள்.” (புஹாரி,முஸ்லிம்) இவ்வாறு தான் நபி(ஸல்) அவர்கள் ஏனையோரும் இதன் உயர்ந்த பலனைப்பெற வேண்டுமென்ற வகையில் அடுத்தவர்களையும் தூண்டினார்கள். மனிதர்களே! நீங்கள் ஸலாத்தைப் பரப்புங்கள். (ஏழைகளுக்கு) உணவளியுங்கள் மேலும், மனிதர்கள் இரவில் ஆழ்ந்து நித்திரை செய்யும் போது நீங்கள் எழுந்து கொள்ளுங்கள்,(அப்படியெனில்) மிக நிம்மதியாக சுவர்க்கத்தில் நுழைவீர்கள்.”(திர்மிதி) இவ்வாறான இரவுத்தொழுகைகளின் மூலம் அல்லாஹ்வை மனிதன் நெருங்க முடியும்.ஹதீஸ் குத்ஸியொன்றில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான். இரவில் மூன்றில் ஒரு பகுதி கழிந்தவுடன் அல்லாஹீத்தஆலா அடிவானத்திற்கு இறங்கி வந்து,என்னுடைய அடியார்களில் யார் பாவமன்னிப்புதேடுகிறார்கள்? நான் அவர்களை மன்னிக்க காத்திருக்கின்றேன் யார் என்னிடம் கேட்கிறார்கள் நான் அவர்களுக்கு கொடுக்கக் காத்திருக்கிறேன் அடியான் என்னை நோக்கி ஒரு சாண் வந்தால் நான் அவனை நோக்கி ஒருமுழம் வருவேன் அவன் நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச்செல்வேன்.’ நோன்பின் அதி உயர்ந்த அருட்பாக்கியம் லைலத்துல்கத்ர் இரவாகும். இவ்விரவை பரகத் நிறைந்த இரவென்றும் ஆயிரம் மாதங்களைவிடச்சிறந்த இரவென்றும் அல்குர்ஆன் வர்ணிக்கின்றது. நபி (ஸல்)அவர்களும் அவவிரவின் சிறப்பு பற்றி விளக்கிக் காட்டினார்கள். “லைலதுல் கத்ர் இரவில் யாராவது ஒருவர் ஈமானிய உணர்வோடும் அல்லாஹ் தருவான் என்ற எதிர்ப்பார்ப்போடும் வணங்கினால் அவரது முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.” (புஹாரி,முஸ்லிம்) இப்புனித இரவில் இபாதத் புரிவதென்பது ஆயிரம் மாதங்கள் இபாதத் புரிந்த நன்மையை வழங்ககூடியது என்பதனால் நபி(ஸல்) அவர்கள் அதன் பிரயோசனங்களை எடுத்துக் கொள்ள முற்பட்டதோடு தனது குடும்பத்தினரையும் அதற்காகத் தூண்டினார்கள் என்பதை அன்னை ஆயிஷா (ரழி) அறிவிக்கும் ஓர் அறிவிப்பு தெளிவுபடுத்துகின்றது. ரமழானின் இறுதிப் பத்தை அடைந்தால் இரவில் விழித்திருந்து வணக்கங்களில் ஈடுபடுவார்கள் தனது குடும்பத்தினரையும் எழுப்பி விடுவார்கள் தன் இல்லற வாழ்விருந்து ஒதுங்கிக் கொள்வார்கள். (புஹாரி,முஸ்லிம்) லைலத்துல் கத்ர் இரவு நரக விடுதலைக்காக அதிகம் பிரார்த்தனை புரியப்படும் இறுதிப்பத்தில் வருகின்றது ரமழானின் இறுதிப்பத்தில் லைலத்துல் கத்ரை தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள் (புஹாரி) என நபி(ஸல்) அவர்கள் குறித்துக் காட்டினார்கள். அவ்விரவைத் தேடி அமல்கள் புரிவதும்,பிரார்த்தனைகளில் ஈடுபடுவதும் மனிதனுக்குக் கிடைக்கும் உயரிய வரப்பிரசாதமாகும்.சில துர்ப்பாக்கியசாலிகள் நோன்பையே ஒரு சுமையாகக் காண்கின்றனர் அவர்களுக்கு லைலத்துல் கத்ரோ இரவுத் தொழுகைகளோ ஒரு பொருட்டாகத் தென்படுவதில்லை. அவர்கள் பற்றியும் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்கினார்கள். யார் இத்தினத்தில் நன்மைகள் செய்வதை விட்டும் தடுத்துக் கொள்கிறாரோ அவர் தன் பாதையில் தடையை ஏற்படுத்திக் கொள்கிறார். நோன்பில் ஸஹர் செய்வதிலும் ஆத்மீக உறவு வளர்கின்றது நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள். ஸஹர் செய்யுங்கள் நிச்சயமாக ஸஹர் செய்வதில் பரகத் இருக்கிறது. (புஹாரி) ஸஹர் செய்வது பரகத் ஆகும் எனவே ஸஹர் செய்வதை விட்டு விடாதீர்கள். ஒரு மிடர் தண்ணீரை அருந்தியாவது சஹர் செய்யுங்கள். ஏனென்றால் ஸஹர் செய்பவர்களுக்காக அல்லாஹ் அருள் புரிகின்றான்.மேலும் வானவர்கள் பிரார்த்திக்கின்றனர். (அஹ்மத்)உலக வாழ்க்கையில் மனிதன் காரியங்களை ஆற்றுகின்ற போது பல்வேறு தவறுகளைப்புரியலாம். இத்தவறுகள் உலக வாழ்க்கையிலும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடுவதோடு, மறுமையில் இறைவனது தண்டனைகளையும் ஒருவனுக்கு கொடுத்து விடும். இதனால் தவறு செய்கின்ற ஒரு நிலையிலிருந்து ஒருவனை மாற்றி விடுவதற்காக பாவமன்னிப்பு என்ற அம்சத்தை இறைவன் ஏற்படுத்தியிருக்கின்றான். மிகக் கூடுதலாக பாவமன்னிப்பு பற்றிய விடயம் நோன்போடு தொடர்புபடுத்தி விளக்கப்படுகிறது. யார் ஈமானுடனும், கண்காணிப்புடனும் ரமழான் நோன்பை நோற்கின்றாரோ அவரது முன்,செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும் (அஹ்மத்,திர்மிதி,நஸஈ, இப்னுமாஜா, அபுதாவூத்) என நபியவர்கள் கூறினார்கள். ஒரு மனிதன் புரியும் தவறுகள் பாவமன்னிப்பால் நீக்கப்படுகின்ற போது அவன் புது மனிதனாக மாறி சமூக பிரச்சினைகளை நல்ல முறையில் எதிர்கொண்டு தனக்கும், சமுதாயத்துக்கும் பிரயோசனமுள்ளவனாக மாற வழி பிறக்கிறது. நோன்பு மாதம் நன்மைகளை அள்ளிக் கொட்டும்மாதமாகும். இதனால் நோன்பு வருகின்ற போதே நபியவாகள் நன்மைகளை முடிந்தவரை தேடிப் பெற்றுக்கொள்ளத் தயாராகிவிடுவதாக ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன்.ஒரு முஸ்லிம் இச்சந்தர்பத்தை நழுவவிடக் கூடாதென இஸ்லாம் விரும்புகின்றது. பாவங்களிலிருந்து விடுபட்டு சுவர்க்கத்துக்குச் செல்ல அவன் ஆசைப்பட வேண்டும். ஹதீஸ்கள் அவ்வாசையை அவனுக்கு ஊட்டிக் கொண்டே இருக்கின்றன. சுவர்க்கத்தில் அர்ரய்யான் எனப்படும் ஒரு வாயில் உண்டு. நோன்பாளிகள் மாத்திரமே மறுமையில் அதனுடாக நுழைவர். அவர்களைத் தவிர வேறு யாரும் அதனூடாக நுழையமாட்டார்கள்.நோன்பாளிகள் எங்கே என்று கேட்கப்படும். அப்போது அவர்கள் எழுந்து அதனூடாக நுழைந்து சுவர்க்கம் செல்வார்கள். அவர்களனைவரும் சென்ற பின்பு அந்த வாயில் மூடப்படும்.(புஹாரி,முஸ்லிம்)அரபுமொழியில் ‘இத்தகா’ என்றால் பாவங்களிலிருந்து தப்பித்தல், அனைத்து பாவங்களிலிருந்தும் உடலையும்,உள்ளத்தையும் பாதுகாத்தல் என்ற பொருள் கொள்ளப்படுகின்றது. இத்தகைய நிலைப்பாடுதான் ‘தக்வா’ என்ற அழைக்கப்படுகிறது. அதற்குரிய பயிற்சியை வழங்குவதே நோன்பாக அமைகிறது. தவறு செய்யாமலும்,பாவங்கள் புரியாமலும் இருப்பதுதான் உண்மையான நோன்பு என இஸ்லாம் உணர்த்துகிறது.இதனைத் தான் நபி(ஸல்); “நோன்பாளி காலையிலிருந்து மாலைவரை இன்னொருவருக்கு தீங்கு செய்யாதவரை இறை வணக்கத்திலேயே உள்ளார். தீங்கிழைத்து விட்டாலோ நோன்பைப் பாழ்படுத்திவிட்டார்".'உண்பதிலிருந்தும், குடிப்பதிலிருந்தும் விலகியிருப்பது நோன்பல்ல, தீய செயல்களிலிருந்து விலகி இருப்பதே நோன்பாகும்’’எனவும் நபி(ஸல்)அவர்கள் கூறிப்பிட்டார்கள். நோன்பின் உண்மையான இலக்கு ஒருவர் தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டு வாழ்வதே என்பது இங்கு குறித்துக் காட்டப்படுகின்றது. நோன்பு கொடுக்கின்ற இன்னொரு முக்கிய பயன் மனிதன் சர்வசாதாரணமாகச் செய்கின்ற பொய்,புறம் போன்ற தவறுகளிலிருந்து அவனைப்பாதுகாப்பதாகும். 'நோன்பு நேரத்தில் பொய் சொல்வதிலிருந்தும், பிழையான செயல்களிலிருந்தும் ஒருவன் விலகா விட்டால் அத்தகையவர்கள் உண்பதையும்,குடிப்பதையும் பற்றி கவலைப்படுவதற்கில்லை".'நோன்பு (பாவங்களிலிருந்து) காக்கும் கேடயமாகும். எனவே உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுக்கள் பேச வேண்டாம். கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்.யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் நான் நோன்பாளி எனறு அவர் சொல்லட்டும்.” (புஹாரி)என நபி(ஸல்) குறிப்பிட்டார்கள். இதனால் ஒரு மனிதன் வானவர்களின் நிலைக்கு உயர்த்தப்படுவான். ‘மிருகநிலைக்கும் வானவர் நிலைக்கும் இடையிலுள்ள ஒரு தரத்திலேயே மனிதன் படைக்கப்பட்டுள்ளான்’’ என்ற இஸ்லாத்தின் போதனைப்படி வானவர் நிலைக்கு மனிதன் உயர்த்தப்பட நோன்பு வழியமைக்கின்றது. இவ்வணக்கத்தைப் புறக்கணிக்கும் போது மிருக நிலைக்கு அவன் தாழ்ந்து விடுவான்.எந்த நேரத்திலும் உணவு உட்கொணடிருப்பதும், உடலுக்குரிய ஆகாரங்களைப் பெற்றுக்கொண்டு இருப்பதும்,இச்சைகளைத் தீர்த்துக் கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்வதும் மிருகங்களின் பண்புகளாகும்.ஆனால் வானவர்கள் உணபது பற்றியோ சிந்திக்காதவர்கள். நோனபு காலங்களில் உண்ணாமலும், பருகாமலும், இன்பம் அனுபவிக்காமலும் ஒரு மனிதன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் போது வானவர்களின் நிலைக்கு உயர்த்தப்படுகின்றான். அடிக்கடி மனித சிந்தனையிலே ஏற்படுகின்ற முரண்பாடுகள் மனித உறவுகளைப் பாதித்து சண்டை சச்சரவுகளை ஏற்படுத்திவிடக் கூடும்.இந்நிலையில் மனிதன் உடனடியாக ஏற்படுகின்ற சில மன எழுச்சிகளுக்கு அடிமைப்பட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மனித இனத்திலே அமைதி தோன்ற வழிபெறக்காது. இவ்வாறு அடிக்கடி கோபங்களுக்குள்ளாகும் மனோ நிலையிலிருந்து நோனபு மனிதனை பாதுகாக்கின்றது.ஒருவன் நோன்பாளியோடு சண்டையிட வேண்டி நேரிட்டால்தான் ஒரு நோன்பாளி எனக்கூறி சண்டைகளில் ஈடுபடுவதிலிருந்து விலகிவிடும்படி நபியவர்கள் கூறினார்கள்.பொறுமை ஒரு மனிதனிடத்திலே கட்டாயம் காணப்பட வேண்டிய ஒரு பண்பாகும். இறை நம்பிக்கை கொண்டவாகள்! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் நீங்கள் உதவி தேடுங்கள்.நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான் (அல்பகரா:153) என அல்குர்ஆன் பணிக்கின்றது.இதிலிருந்து இறைவனை நெருங்கச் செய்யும் ஒரு செயலாக பொறுமை அமைகின்றது என்பதைப் புரியலாம். அவ்வாறான பொறுமைக்கு நோன்பு வழிவகுக்கின்றது. நபி(ஸல்) அவர்கள் அதனை பின்வருமாறு விளக்கினார்கள். எல்லாப் பொருட்களுக்கும் ஸகாத் உண்டு. உடலின் ஸகாத் நோன்பாகும். மேலும் நோன்பு பொறுமையின் அரைவாசியாகும். ஒரு நோன்பாளிக்கு கடுமையான பசி காணப்படுகின்றது போது முன்னால் பசியைத் தீர்த்துக் கொள்ள ருசியான ஆகாரம் இருந்தும், கடும் தாகத்தில் தவிக்கும் போது குளிரான நீர் அவன் முன்னால் இருந்தும், உடலிச்சைகளைத் தீர்த்துக் கொள்ள மனைவி பக்கத்திலிருந்தும் தன்னை அவன் தனது இறைவனுக்காகக் கட்டுப்படுத்திக் கொள்கிறான். ஓரிரண்டு நாட்களுக்கின்றி முப்பது நாட்களுக்கு இந்நிலை தொடர்கின்றது. ஜேர்மனைச் சேர்ந்த ஒரு மனோதத்துவ அறிஞர் தனது நூலொன்றில் நோன்பு மனோ வலிமையைப் பெற்றுக் கொடுக்கும் சிறந்த வழியென விளக்குகிறார்.சமூக ரீதியிலான தாக்கங்கள் மனித கமுதாயத்தை மனதப் பணபுகளோடு நோக்கிப் பார்க்கினறஉள நிலையை நோன்பு ஒருவனிடத்திலே தோற்றுவிக்கின்றது. பல கஷ்டங்களுக்கு ஒரு மனிதன் உள்ளாகியிருக்கலாம். தீர்க்க முடியாத சிக்கல்களில் குடும்பங்கள் சிக்கிக் கொண்டிருக்கலாம். கல்விப் பிலச்சினையாலும் ஒழுக்க ரீதியிலான பிரச்சினைகளாலும், பொருளாதார சிக்கல்களினாலும் மக்கள் கஷ்டங்களுக்கு உள்ளாகியிருக்கலாம். இவ்வாறான கஷ்ட நிலைகளை அடுத்த மனிதர்கள் நீக்கி விடுவதற்குரிய பயிற்சியை நோன்பு வழங்குகின்றது.தினமும் வயிறுநிறையப் புசிக்கிறவன் நோன்பு காலங்களில் பசித்திருக்கின்ற போது வறுமைநிலைக்கு உட்பட்டவர்களது கஷ்டங்களை உணருவான். தான் ஒரு மாதகாலம் இவ்வளவு சிரமப்பட்டு பசித்திருப்பதே கடினமானது என எண்ணுகின்ற போது பன்னிரெண்டு மாதங்களாக பசித்திருப்போர் பற்றி ஒரு முறை அவனால் நோக்கிப்பார்க்க முடிகிறது. இதனால் வாரி வழங்க வேண்டுமென்ற உணர்வை அம்மனிதனிடத்திலே நோன்பு ஏற்படுத்துகின்றது. பொருளாதார ரீதியில் மனிதர்கள் வரவு செலவு விடயங்களைத் திட்டமிட்டு அமைத்துக் கொள்;ள முடியாத நிலை ஏற்படுகின்ற போது கடன்பட வேண்டிய நிலையோ, வட்டிக்குப் பணம் பெற வேண்டிய நிலையோ கொள்ளையடிக்க வேண்டிய நிலையோ உருவாகலாம். தனது வரவுக்கேற்ப செலவுகளை அமைத்துக் கொள்ளும் மனிதனின் வாழ்க்கையில் இவ்வாறான பிழையான முடிவுகளுக்கு ஒரு போதும் வரமாட்டான். அத்தகைய லௌகீக ரீதியான பயிற்சியையும் நோன்பு வழங்குகின்றது. எளிமையான முறையில் உண்கின்ற,உடுக்கின்ற, பயணங்களை அமைத்துக் கொள்கின்ற பயிற்சியை நோன்பு வழங்குகிறது. நோன்பு மனிதனின் உள்ளத்தில் தாராளத்தன்மையை வளர்த்து விடுகின்றது. அள்ளிக் கொடுக்க வேண்டுமென்ற உணர்வை அது ஓவ்வொருவரிடத்திலும் வளர்க்கின்றது.இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகவும் சிறந்த கொடைவள்ளலாக இருந்தார்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமழானில் தன்னை சந்திக்கதின்ற வேளை மிகவும் சிறந்த கொடை வள்ளலாக இருப்பார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமழான் மாதம் முடியும் வரை ஒவ்வோர் இரவும் நபி(ஸல்) அவர்களை சநடதிப்பார்கள். அவர்களுக்கு அல்குர்ஆனை முழுமையாக ஓதிக்காட்டுவார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபிகளாரை சந்திக்கும் போது அவர்கள் படுவேகமாக வீசுகின்ற காற்றை விட விரைவாக தான தர்மம் செய்கின்ற வள்ளலாக இருப்பார்கள்.வறுமை என்ற பயரங்கமான சமூக நோயிலிருந்து ஒருவனைக் காப்பதற்கு நோன்பு வழிவகுக்கின்றது . குப்ரிலிருந்தும் வறுமையிலிருந்தும் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன் என நபியவர்கள் பிரார்த்திப்பார்கள். ஒருவன் வறுமை நிலைககுள்ளாகும் போது கடன் காரான் ஆகின்றான்.ஒருவன் கடன் காரனாகிவிட்டால் பேசினால் பொய் பேசலாம். வாக்களித்தால் மாறு செய்யலாம் என்று நபியவர்கள் குறிப்பிட்டார்கள். இவ்வாறானோருக்கு உதவிகள் புரிந்து அவர்களையும் தம்மோடு இணைத்துச் செல்லும் பயிற்சியை நோன்பு வழங்குகிறது. எவர் ஒரு முஃமினின் இவ்வுலக கஷ்டமொன்றை நீக்கி வைக்கின்றாரோ அல்லாஹ் அவரை விட்டும் மறுமையின் கஷ்டமொன்றை நீக்கி வைப்பான். எவர் கஷ்டத்திலிருக்கும் ஒருவனுக்கு உதவுவாரோ அல்லாஹ் அவருக்கு உலகிலும் மறுமையிலும் கஷ்டங்களை நீக்கி வைத்து உதவுவான். மேலும் எவர் ஒரு முஸ்லிமின் மானத்தை மறைக்கின்றாரோ அல்லாஹ் அவரது மானத்தை ஈருலகிலும் மறைப்பான்.ஓர் அடியான் தனது சகோதரனுக்கு உதவியாக இருக்கும் காலமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதிவியாக இருக்கின்றான் என நபியவர்கள் குறித்துக் காட்டினார்கள்.இப்தார் எனப்படுகின்ற துறத்தல் விடயத்தில் இஸ்லாம் கருணை உணர்வைத் தோற்றுவிக்கின்றது. நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். எவரொருவர் நோன்பாளியை நோனபு துறக்க வைத்தாரோ அவருக்கு நோன்பாளிக்கு கிடைப்பது போன்ற கூலி கிடைக்கும். என்றாலும் நோன்பாளியின் நற்கூலியில் எதுவும் குறைத்து விடடமாட்டாது.(திர்மிதி) பேரீத்தம் பழத் துண்டை தண்ணீரை ஒரு மனிதனுக்கு நோன்பு திறக்கக் கொடுப்பது கொண்டு தியாகத்தின் பண்புகளில் இஸ்லாம் அத்திவாரமிடுகிறது. அதற்கு பின்னால் அவன் உணவு உடைகள் என்பவற்றை மனிதனுக்கு வழங்கும் நிலைக்கு மாறிவிடுவான். பின்னர் தனது ஸகாத் பணத்தை எளியவர்களுக்கு ஒரு வீட்டைக் கட்டிக் கொள்ளவோ வருமானம் பெறக்கூடிய முயற்சிகளில் பயன்படுத்துவதற்கோ வழங்கிவிடுகிறான்.நோன்பு நோற்று முடிந்து பெருநாளைக் கொண்டாடு முன்னர் மனித சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக பித்ரா என்ற கடமையினை நிறைவேற்றுகிறான். இவ்வாறான பயிற்சிகளால் மனித சமுதாயத்தின் மீது ஒருவித கருணை உணர்வேற்படுகிறது. வாழ்க்கையை நெறிப்படுத்தும் பொறுப்பை ஒரு மனிதன் அல்குர் ஆனிடம் கொடுத்து விட வேண்டுமென்ற நிலையையும் நோன்பு ஏற்படுத்திவிடுகிறது. நோன்பு காலங்களில் ஒரு மனிதன் கூடுதவான அளவில் பல்வேறு நபிலான தொழுகைகளைத் தொழுது வருவான். அவற்றில் பலமுறை அல்குர்ஆனை ஓதக்கூடிய நிலை ஏற்படுகிறது.அதுதவிர வேறு நேரங்களிலும் அல்குர்ஆனை அவன் படிப்பான். இதனால் உலக வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட விடயங்களை எவ்வாறு அமைத்துக் கொள்வது. அவற்றில் எதிர் கொள்ளப்படும் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்ற தடுமாற்ற நிலைகளிலிருந்து மீட்சி பெறுகின்றான். அரசியலிலும்,பொருளியலிலும்,ஒழுக்கவியலிலும் சமூக ஒழுங்கமைப்பிலும், குடும்ப வாழ்விலும், வர்த்தக கொடுக்கல் வாங்கல் முயற்சிகளிலும் அல்குர்ஆனே ஒரு மேலான வழிகாட்டியாக அமைகின்றது என்ற உணர்வைப் பெற்றுக் கொண்டு வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்வதற்கு நோன்பு பயிற்சியளிக்கிள்றது.உலகப் பொருட்கள் அனைத்தின் மீதும் ஒருவகைகக் கவர்ச்சியும் ஆசையும் ஒரு மனிதனுக்கு ஏற்பட்டு விடுவது இயல்பானது. இதனால் உலக இன்பங்களில் மூழ்கிக் கிடக்க வெண்டுமென்ற எண்ணம் அவனிலே ஏற்படும் போது அவன் சடவாதியாக மாறுவான். அந்நிலையிலிருந்து அவனைமாற்றி விட்டால் மட்டுமே மரணத்துக்குப் பின்னால் உள்ள வாழ்க்கைக்கு உலக வாழ்க்கையைப் பயன்படுத்தும் நிலை எற்படும்.இதற்காக நோன்பு ஒருபயிற்சியைக் கொடுக்கின்றது. உலகப் பொருட்களும்,உலக இன்பங்களும் கண்முன்னே வைக்கப்படுகின்ற போதும் அவனை எல்லாவற்றையும் தான் மட்டுமே அனுபவித்துக் கொள்ள வேண்டுமென்ற உணர்வு மிகைத்து விடுகின்ற போதிலும் எல்லாவற்றையும் உதறித்தள்ளிவிடக்கூடிய மனோ நிலையை நோன்பு ஒருவனிடத்திலே ஏற்படுத்துகின்றது. இதனால் உலகக் கவர்சிசிகளிலிருந்து அவன் பாதுகாக்கப்படுகின்றான். இவ்வாறான மேலான பயிறச்சிகளை தொடர்ந்து முப்பது நாட்களுக்கு நோன்பு வழங்குகின்றது. வேறு எந்தவொரு வணக்கமும் நீண்டதொரு காலப்பகுதிக்கு கடமையாக்கப்படவில்லை. நோன்பின் பயன்பாடுகளும்,அது மனித வாழ்வை நெறிப்படுத்துகின்ற முறையும் வித்தியாசமாக அமைந்திருப்பதினால் முப்பது நாட்களுக்கு அவ்வாறானதொரு தொடர்ந்த பயிற்சி அவசியமாகின்றது. நோன்பில் மனிதர்களுக்காக முகஸ்துதிக்கு செய்யப்படுகின்ற செயல்கள் காணப்படாததனால் தான் “மனிதனுடைய எல்லாச் செயல்களும் அவனுக்குரியவை நோன்பைத்தவிர அது எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்” என அல்லாஹ் கூறுகின்றான் .இறைவா ! எங்கள் நோன்புகளை உன் திருப்திக்காகவே நோற்று நோன்பில் குரானுடான உறவு செழித்து எங்கள் வாழ்க்கையை ஈருலகிலும் செழிப்பாக்கி வைப்பாயாக !

நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகள்

நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகள்
உலகில் மனிதர்கள் நேர்வழியிலிருந்து பிறழும் போது அவர்களை தூய்மைப்படுத்துவதற்காக அல்லாஹ் தூதர்களை அனுப்புகிறான். அவர்கள் தூதர் தாம் என்பதற்கு அத்தாட்சியாக சில அதிசயங்களை முன்னறிவிப்பு செய்யக் கூடிய ஆற்றல்களையும் வருங்காலத்தில் நடைபெறவிருக்கின்ற சில விஷயங்களை முன்னறிவிப்பு செய்ய கூடிய திறனையும் அல்லாஹ் கொடுத்திருக்கிறான். அவ்வாறு இறுதி நபியாக வந்த நமது நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு சில விஷயங்களை முன்னறிவிப்பு செய்திருக்கின்றார்கள். அவற்றில் சில அவர்களின் வாழ்க்கையிலும் சில இனி வரக்கூடிய காலங்களிலும் நடைபெறவிருக்கின்றன இன்ஷா அல்லாஹ்.நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் தன்னைப் பின்பற்றுவோர் படும் துன்பத்தை தடுக்க கூட முடியாத பலவீனமான நிலையில் இருந்த போது இஸ்லாத்தை ஏற்க தயங்கிக் கொண்டிருந்த கிறித்தவராயிருந்த அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்களை நோக்கி சொன்னார்கள் “ஓ! அதீ பின் ஹாத்திமே! ஏன் இஸ்லாத்தை ஏற்கத் தயங்குகிறீர்கள்? இந்த சிறு கூட்டம் உலகில் என்ன ஒரு மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களா? அறுதியிட்டு சொல்கிறேன் ஒரு காலம் வரும், ஸன்ஆ-விலிருந்து ஹலரமவத் வரை ஒரு பெண் அல்லாஹ்வின் அச்சத்தை தவிர வேறு எந்த அச்சமும் இல்லாமல் தன்னந்தனியாய் செல்வாள். தங்கத்தையும், வெள்ளியையும் தானம் செய்ய புறப்படுவீர்கள். ஆனால் அதை பெற்றுக் கொள்வோர் யாரும் இருக்க மாட்டார்கள். சீசர், கைசரின் சாம்ராஜ்யங்கள் எல்லாம் என்னை பிற்பற்றுவோரை வந்தடையும்”. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் பின்னாளில் சொல்கிறார்கள் “என் வாழ்நாளிலேயே இவை நிறைவேறியதை கண்டுக் கொண்டேன்.அது போல் ரசூல் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்த போது அவர்களை கொலை செய்ய துரத்தி வந்த சுரகா இன்னு ஜுஷமை நோக்கி “சுரகாவே! ஒரு காலத்தில் ஈரான் மன்னரின் கைகளை அலங்கரித்த ஆபரணங்கள் உங்கள் கைகளை அலங்கரிக்கும்” என்று கூறினார்கள். இது இஸ்லாத்தின் இரண்டாம் கலீபா உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் காலத்தில் ஈரான் வெற்றி கொள்ளப்பட்ட போது நிறைவேற்றிக் காட்டப்பட்டது.பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு தடவை தோழர்களான அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடன் உஹது மலையடிவாரத்தில் இருந்த போது உஹது சற்றுக் குலுங்கியது. அப்போது நாயகம் (ஸல்) அவர்கள் “உஹதே! அமைதியாக இரு. உன்னில் ஒரு தூதர் இருக்கிறார். ஒரு வாய்மையாளர் இருக்கிறார். இரண்டு ஷஹீதுகள் இருக்கிறார்கள்” என்று சொல்லி பின்னாளில் உமரும், உஸ்மானும் ஷஹீதாக்கபடவிருப்பதை அப்போதே முன்னறிவிப்பு செய்தார்கள்.தன் செல்ல மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் தான் தன் குடும்பத்தில் முதலாவதாக தன்னை வந்து அடைவார்கள் என்று நாயகம் (ஸல்) சொன்னதற்கேற்ப ரசூல் (ஸல்) இறந்த ஆறு மாதங்களுக்குள் ஃபாத்திமா (ரலி) இவ்வுலகை விட்டு பிரிந்ததை நாம் வரலாற்றில் பார்க்கிறோம். அதுபோல் தன் பேரரான ஹஸன் (ரலி) அவர்களை நோக்கி இவர் இரு கூட்டத்தினருக்கிடையில் சமாதானம் செய்து வைப்பார் என்று சொன்னது நிறைவேறியதையும் வரலாற்றில் பார்க்கிறோம்.மறுமை நாளின் அடையாளங்கள் பற்றி குறிப்பிடும் போது “ஒரு பெண் தன் எஜமானியை பெற்றெடுப்பாள்” என்று கூறினார்கள். இன்று எத்தனையோ ஆண்மக்களை பெற்ற போதும் பெண்ணை அண்டி வாழும் நிலையையும், பெண் தன் தாயை வேலைக்காரியை விட மோசமாக நடத்துவதையும் நிதர்சனமாக பார்க்கிறோம். இன்று அரசாங்கங்களே சிவப்பு விளக்கு பகுதிகளை அங்கீகரிக்கும் கொடுமையும் மது அருந்துவது நாகரீகமாக கருதப்படும் அவலத்தையும் பார்க்கிறோம். இதை தான் நாயகம் (ஸல்) அவர்கள் “விபச்சாரம் பெருகும். மது அருந்தும் பழக்கம் பரவலாகும்” என்று முன்னறிவிப்பு செய்தார்கள்.நாம் இருக்க கூடிய இந்த அமீரக பகுதிக்கு பொருத்தமான ஒரு முன்னறிவிப்பையும் நாயகம் (ஸல்) அவாகள் சொன்னார்கள். “வறுமையின் காரணத்தால் வெறுங்காலுடன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் மிகப்பெரும் கட்டிடங்களைக் கட்டுவார்கள்”. இன்று உலகின் மிகப் பெரும் கட்டிடங்கள் எல்லாம் இங்கு கட்டப்படுவதை நாம் கண்கூடாக காணலாம்.சிறந்த சமுதாயம் என்று அல்லாஹ்வினால் புகழப்டுகின்ற இந்த சிறந்த சமுதாயம் இன்று இறை நிராகரிப்பாளர்களாலும், யூத நஸ்ரானிகளிடத்திலும் சிக்கி தவிக்கும் அவல நிலையை நாயகம் (ஸல்) அவர்கள் அன்றே முன்னறிவிப்பு செய்தார்கள். “ஒரு காலம் வரும். அப்போது பிராணி தன் இரையை தேடி பாய்வது போல் பிற சமுதாயங்கள் உங்கள் மீது பாயும்” என்று சொன்னபோது ஸஹாபாக்கள் கேட்டார்கள், யாரசூலுல்லாஹ் எண்ணிக்கையில் நாங்கள் குறைவாக இருப்போமோ? என்று வினவியபோது இல்லை நீங்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பீர்கள். ஆனால் உங்களிடத்தில் வஹ்ன் இருக்கும் என்று சொல்லி விட்டு வஹ்ன் என்றால் மரணத்தை பற்றிய அச்சமும், உலகத்தை குறித்த ஆசையும் என்று சொன்னார்கள்”. இன்று அந்த வஹ்ன் இந்த உம்மத்திடம் இருப்பதற்கு சாட்சிகள் தாம் குஜராத் முதல் பாலஸ்தீன் வரை நடைபெறும் நிகழ்வுகள்.“காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது” என்று மறுமையை பற்றி குறிப்பிட்டார்கள். “சூரியன் மேற்கிலிருந்து உதித்தல், அதிசயப்பிராணி, தஜ்ஜால் மூன்றும் நிகழ்வதற்கு முன் ஈமான் கொள்ளுங்கள் ஏனென்றால் மூன்றும் நிறைவேறிவிட்ட பிறகு ஈமான் கொள்வது பலனளிக்காது”. என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் பின்னாளில் இன்ஷாஅல்லாஹ் நடைபெறவிருப்பதையும் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.இப்படி கடந்த, இன்றைய, வருங்காலத்தை பற்றி முன்னறிவிப்பு செய்திருக்கின்றன நமது முஸ்தபா நபி (ஸல்) அவர்கள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய ஒரு முன்னறிவிப்பை செய்தார்கள் “என் உம்மத்தில் ஒரு கூட்டம் மறுமை நாள் வரை இருக்கும். அவர்கள் நன்மை செய்யும்படி தூண்டுவார்கள். தீமை செய்வதிலிருந்து தடுப்பார்கள். இவர்கள் தாம் வெற்றியாளர்கள் என்று கூறினார்கள்”. அவ்வாறு நன்மையை ஏவி, தீமையை தடுக்க கூடிய வெற்றியாளர்களுள் ஒருவராக எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மையும் ஆக்கி அருள்வானாக

ஓட்டளிப்பது குறித்து இஸ்லாமிய நிலைப்பாடு

ஓட்டளிப்பது குறித்து இஸ்லாமிய நிலைப்பாடு
வாக்களிப்பது சம்பந்தமாக இஸ்லாத்தின் நிலைப்பாட்டை நன்கு ஆராய்ந்து பார்த்தோமென்றால் நாம் வாக்களிப்பது யாருக்கு என்பதையும், நம் வாக்கின் மூலம் வெற்றி பெற்றால் அவர் என்ன செய்ய போகிறார் என்பதையும் அறிந்து கொள்வது ஒரு முஸ்லீமுக்கு முக்கியமானதாகும். ஏனென்றால் "நன்மையிலும் பயபக்தியிலும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து கொள்ளுங்கள், பாவத்திலும் பகைமையிலும் ஒத்துழைக்காதீர்கள்" என்று இறைவன் திருமறையில் கூறுவதை போல் நாம் செய்ய இருக்கும் காரியத்தின் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும்.சிபாரிசு சம்பந்தமான குரான் வசனம்கீழ் காணும் 2 நிலைகளில் வாக்களிக்க இஸ்லாத்தில் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.1.இஸ்லாமிய அரசில் கலீபாவை தேர்ந்தெடுக்க வாக்களிப்பது - உமர் (ரலி) அவர்களின் மறைவுக்கு பின் கலீபாவை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்ட அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் "ஒரு ஆண், பெண்ணையும் விட மாட்டேன் அவர்களின் கருத்தறியும் வரை" என்று கூறி அனைத்து மக்களிடமும் கருத்து கேட்டதற்கு ஒப்பாக நாமும் கலீபாவை தேர்ந்தெடுக்க வாக்களிக்கலாம்.2.இஸ்லாமிய அரசின் ஆலோசனை குழுவுக்கு அந்தந்த பகுதி மக்களின் கருத்துக்களை எடுத்துச் சொல்ல ஆலோசனை குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வாக்களிப்பது - மதீனாவில் அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரத்தாரிடையே உங்களிலிருந்து பன்னிரெண்டு தலைவர்களை தேர்ந்தெடுத்து கொள்ளூங்கள் உங்களை பிரதிநிதிப்படுத்த என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதை போல் நாமும் தேர்ந்தெடுக்கலாம்.ஒரு நாட்டின் பாராளுமன்ற தேர்தலில் அல்லது ஒரு மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் என்ன செய்யப் போகிறார் என்பதை நாம் கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்.1. அரசாங்கத்தை கேள்வி கேட்பது அல்லது பொறுப்புகளை சுட்டி காட்டுதல்2. சட்டம் இயற்ற உதவி செய்தல் அல்லது சட்டம் இயற்றுதல்3. அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும் ஒப்பந்தங்கள், தீர்மானங்களுக்கு ஆதரவளிப்பது.இதில் முதலாவதாக இஸ்லாம் சொல்லுகின்ற அடிப்படையில் அரசாங்கத்தை கேள்வி கேட்பது அல்லது அதன் பொறுப்புகளை நினைவுபடுத்துதல் என்பது இஸ்லாத்துடன் மோத கூடிய ஒன்றல்ல. ஆனால் இஸ்லாத்தை பொறுத்த வரை சட்டம் இயற்ற கூடிய அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உள்ளதாலும், சட்டத்தை அமுல்படுத்த மட்டுமே மனிதனுக்கு அதிகாரம் உள்ளதாலும் இரண்டாவது செயலுக்கு இஸ்லாம் அங்கீகாரம் அளிக்கவில்லை. அது போல் இஸ்லாத்துக்கு மாற்றமான நெறிமுறையில் உள்ள அரசுடன் ஒத்துழைப்பதையும் இஸ்லாம் அங்கீகரிக்காது என்பது தெளிவானதே.எனவே எப்படி வாக்களிக்கின்றோம் என்பதை விட எதற்காக வாக்களிக்கின்றோம் எனற விஷயத்துக்கே இஸ்லாம் முக்கியத்துவம் அளித்திருப்பதை நாம் உணர்ந்தால் இன்றைய இஸ்லாத்துக்கு முரணான ஆட்சியமைப்பில் நிச்சயமாக எக்கட்சிக்கும் வாக்களிப்பது இஸ்லாமிய ஷரீயாவுக்கு முரணானதே எனும் கருத்தேக்கு வர வேண்டியதிருக்கிறது.

இரண்டு தீமைகளில் சிறிய தீமையை செய்யலாம் என்பதால் வாக்களிக்கலாமா – இஸ்லாமிய பார்வை

இரண்டு தீமைகளில் சிறிய தீமையை செய்யலாம் என்பதால் வாக்களிக்கலாமா – இஸ்லாமிய பார்வை
ஜனநாயகம் இஸ்லாத்திற்கு விரோதமனாது என்பதை நன்கு உணர்ந்தும், இஸ்லாத்திலும் இருந்து கொண்டு ஜனநாயக பதாகையை ஏந்தி கொண்டிருக்கும் முஸ்லீம்கள் தங்கள் வாதத்துக்கு வலுசேர்க்க இரண்டு தீமைகள் காணப்படும் போது சிறு தீமையை ஆதரிக்கலாம் என்ரு கூறுகின்றனர். பிரபல இஸ்லாமிய தலைமைகள் என கருதப்படும் சிலரும் இக்கருத்தை ஆதரிப்பது தான் விநோதம்.ஜனநாயகம் தவிர மாற்று தீர்வே இல்லை எனும் தொனியில் ஜனநாயகத்தை எப்படியாவது இஸ்லாமிய முலாம் பூசி இஸ்லாமிய ஜனநாயகம் என நிலைநாட்ட துடிப்பது உண்மையில் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கும் இறைதூதரின் வழிமுறைக்கும் மாறாகவே இருக்கின்றது. பெருமானார் (ஸல்) அவர்களுக்கு குறைஷிகளுடன் அதிகார பகிர்வு செய்ய வாய்ப்பு கிடைத்த போது அல்லாஹ் அதை மறுத்து " இறை நிராகரிப்பாளர்களே நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்க மாட்டேன், நான் வணங்குபவற்றை நீங்கள் வணங்க மாட்டீர்கள்................ உங்களுக்கு உங்கள் வழிமுறை, எங்களுக்கு எங்கள் வழிமுறை " என்று அல்லாஹ் வசனத்தை தெளிவாக இறக்கி அதிகார பகிர்வு நிராகரிப்பாளர்களுடன் சாத்தியமில்லை என்று தெளிவுபடுத்துகிறான்.ஆனால் இரண்டு தீமைகளில் ஒன்றை தேர்ந்தெடுப்பது என்பது அது இஸ்லாமிய அடிப்படையில் சரியா தவறா என்று ஆராய்வதோ இல்லை எது வரை அவ்வழியில் அல்லது எந்தெந்த நிலைகளில் அதில் ஈடுபடலாம் என்றோ தெளிவுபடுத்தாமல் இரண்டும் தீமை தான் இருந்தாலும் அதில் சிறிய தீமையை தேர்ந்தெடுப்பதன் மூலம் சமூகத்திற்கு நன்மை கிடைக்கும் என வாதிடுகின்றனர்.இரண்டு தீமைகளில் சிறியதை தேர்ந்தெடுப்பது என்பது எப்போது சாத்தியப்படும் என்றால் இரண்டு தீமைகளூம் இஸ்லாத்தால் விளக்கப்பட்டு எது சிறிய தீமை என்பதும் சொல்லப்பட்டிருக்க வேண்டும் அல்லது குரான் சுன்னாவின் அடிப்படையில் தெளிவுபடுத்தப்பட வேண்டும். உதாரணத்துக்கு பசியால் சாகும் தருவாயில் விலக்கப்பட்டதும் அனுமதிக்கப்பட்ட உணவாக மாறுவது போல். உதாரணத்துக்கு1. நாம் சிறிய தீமை என்று நினைப்பது சில வேளைகளில் எதிர்மறையாக முடியலாம். அப்படி சொல்லித் தான் அமெரிக்காவில் முஸ்லீம்கள் 2000-ல் கிளிண்டனுக்கு எதிராகவும் புஷ்ஷுக்கு ஆதரவாகவும் ஓட்டளித்தனர். 2008-ல் ஒபாமாவுக்கு வாக்களித்தனர். விளைவுகள் இன்னும் பயங்கரமாக அல்லவா இருந்தது. இந்தியாவில் கூட பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிராக போராடும் மக்கள் கலை இலக்கிய கழகம் 2006 பாராளுமன்ற தேர்தலில் ஒரு போஸ்டர் ஓட்டினார்கள். எந்த கயவனுக்கு ஓட்டு போட போகிறீர்கள் பாபரியை இடித்தவர்களுக்கா ? அல்லது செங்கல் பூஜைக்காக பள்ளியை திறந்து விட்டவர்களுக்கா?2. வாக்களிப்பதை தவிர வேறு வாய்ப்பிலை எனும் போது நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் வாக்களிக்கலாம். வாக்களிக்காவிட்டால் சிறை செல்ல வேண்டும் அல்லது இறக்க நேரிடும் எனும் சூழ்நிலையில் வேண்டுமானால் வாக்களிக்கலாம். அப்போது கூட வாக்கு சீட்டை செல்லாமலாக்கலாம்.3.வாக்களிப்பாமல் இருப்பதன் மூலம் முடிவுகள் நமக்கு பாதகமாக மாறுவதற்கு நாமே வழிவகுக்கிறோம் என்றும் சிலர் கூறுகினறனர். அப்படியென்றால் நம்மை விட சமூகத்தில் செல்வாக்கு பெற்றிருந்த போதும் ஆட்சி பகிர்வு கிடைத்த போதும் பெருமானார் (ஸல்) அவர்கள் அதை புறக்கணித்ததை முஸ்லீம்களுக்கு பாதகமான முடிவாக கருதுகின்றனரா?4.முஸ்லீம்களுக்கு பயன் என்றாலும் அது ஷரீயாவால் சொல்லப்பட்டிருக்க வேண்டும். மேலும் அது இஸ்லாமிய நெறிமுறையிலேயே நிறைவேற்றப்பட வேண்டும். ஒரு விஷயம் முஸ்லீம்களுக்கு பயனளிக்கும் என்பதை நம் சொந்த அனுமானங்கள் மூலம் நாம் முடிவு செய்வோம் என்றால் அது மனோஇச்சைக்கு அடிமையாவதற்கு சற்றும் குறைவானதல்ல.எனவே குப்ரை அடிப்படையாக கொண்ட ஒரு அரசியல் அமைப்பில் ஓட்டளிக்க ஒரு முஸ்லீமுக்கு அனுமதி இல்லை. ஓட்டளிப்பது எப்படி என்பது மிகப் பெரிய விஷயமல்ல மாறாக எந்த இலக்குக்காக, நோக்கத்துக்காக வாக்களிக்கிறோம் என்பதே இஸ்லாத்தின் பார்வையில் முக்கியமானதாகும்.எனவே குப்ரான ஆட்சி அமைப்பில் பங்கு பெறுவதை விட முஸ்லீம்கள் ஒன்றுபடுதல், தங்களுக்குள் சீர்திருத்தம் மற்றும் பிற மக்களுக்கு இஸ்லாத்தின் பால் அழைப்பு கொடுத்தல், அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தல், ஒடுக்கப்பட்டோருக்காக போராடுதல், இஸ்லாமிய ஆட்சிமுறையின் மேன்மையை மக்களுக்கு எடுத்துரைத்தல், குரான் சுன்னா அடிப்படையில் ஒரு சமூகத்தை வார்த்தெடுத்தல் மூலம் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதே ஒரு முஸ்லீம் அதிக கவனம் செலுத்த வேண்டிய ஒன்றாக இருக்க வேண்டும்

சிலுவை யுத்தம் ஒரு வரலாற்று பார்வை பகுதி 1

பல நூற்றாண்டுகளாக உலகின் வளர்ச்சி பெற்றுவரும் இஸ்லாமிய எழுச்சியை தடுத்து அரசியல் நியாயாதிக்கம் பெற்றுவரும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை அழிக்க வேண்டும் அதற்கு பதிலீடாக கிறிஸ்தவ மத அரசு ஒன்றை நிறுவ வேண்டும் என்ற கிறிஸ்தவ கத்தோலிக்க சமுகத்தை ஐரோப்பாவின் பல போப்பாண்டவயர்கள் உணர்வூட்டி வந்தார்கள் எனிலும் பறந்து விரிந்து வியாபித்திருந்த முஸ்லிம் சாம்ராஜ்யத்தை தாக்குவது என்பது அன்று அவ்வளளவு இலகுவான விடையமான இருக்கவில்லை ஐரோப்பா அன்று எந்த அபிவிருத்தியும் காணாத இருண்ட கண்டமாக இருந்தது.
ஒரு இருண்ட கண்டம் எப்படி அணைத்து அறிவியல் துறைகளிலும் முன்னேரிகொண்டிருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை தாக்கமுடியும் அதனால் சரியான சந்தர்பம் பார்த்து இருந்தது கிறிஸ்தவ உலகம் – கி.பி. 1095-ம் ஆண்டு. போப்பாண்டவராக பதவிக்கு வந்த ஏர்பன் II- Pope Urban II at the Council of Clermont – முஸ்லிம்களை தாக்கி இஸ்லாத்தை வீழ்த்த தகுதியான சந்தர்பமாக கி.பி. 1095-ம் ஆண்டு கால பகுதியை கண்டார் , முஸ்லிம்கள் தமக்குள் மோதிக்கொண்டனர், இஸ்லாம் வணக்க வழிபாடுகளில் மட்டும் பிரகாசித்தது அரசியல், பொருளாதார சமுக கட்டமைப்பு விடையங்களில் பலம் இழந்து கொண்டிருந்தது விரிவாக பார்க்க
அரச தலைவர்கள் தாம் இறைவனின் அடிமைகள் என்பதை மறந்து, சுய இலாபம் கருதி செயல் பட்டுகொண்டிருந்தார்கள் பல நூற்றாண்டு கடின உழைப்பின் விளைவாக அறிவியல், விஞ்ஜானம், பொருளாதாரம் , அரசியல் , இராணுவம் போன்ற துறைகளில் உயர்ந்த இருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை உள்ளிருந்து முஸ்லிம் பெயர் தாங்கிகளும், யூதர்களும் அழித்து கொண்டிருன்தனர் இதை சிறந்த சந்தர்பமாக அனுமானித்த ஏர்பன் II முஸ்லிம்களுக்கு எதிரான யுத்தத்துக்குத் தயாராகும்படி ஒட்டுமொத்த ஐரோப்பா கிறிஸ்துவ சமூகத்தினருக்கும் அழைப்பு விடுத்தார் இந்த யுத்தத்துக்கு சிலுவை யுத்தம் என்று பெயரிட்டார் – The pope called for a “War of the Cross,” or Crusade, to retake the holy lands from the -ஜெருசலத்தை முஸ்லிம்களிடம் இருந்து கைப்பற்ற வேண்டும். இயேசுவின் மரண சுவடுகள் உள்ள பகுதி கிறிஸ்துவர்களின் நிலமாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற இலக்குடன் கிறிஸ்தவ இராணுவம் தயாரிக்கபட்டது.
அந்த கிறிஸ்தவ இராணுவம் ஐரோப்பிய நாடுகளில் இருந்த ஜெருசலம் நோக்கி பாய்ந்தது இதன் பிரதான நோக்கமாக எழுச்சி பெற்று வரும் இஸ்லாத்தை இராணுவ , அரசியல் தளங்களில் தோற்கடிப்பதும், ஆசியாவில் கத்தோலிக்க கிருஸ்தவ மேலாதிக்கத்தை நிறுவி ஐரோபாவின் கட்டுபாட்டில் முஸ்லிம் தேசங்களை கொண்டுவருவதுமாகும் இவரின் அழைப்பு ஐரோப்பிய அரசர்களின் கவனத்தை பெற்றது அன்று அரசர்களின் அரசராக போப் அதிகாரம் பெற்றிருந்தார் . அரசுத்தரப்புப் பிரதிநிதிகள் கலந்து விவாதித்தார்கள்.
ஒட்டுமொத்த கிறிஸ்துவ தேசங்களும் இந்தப் புனிதப்போரில் பங்காற்றியே ஆகவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது 11 நூற்றாண்டின் இறுதியில் கிறிஸ்தவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த போர் 300 ஆண்டுகள் தொடர்ந்த நடைபெற்றுள்ளது.
ஜெருசலத்தை மையமாக வைத்து கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஆரம்பமான இந்த போரை வரலாறு மிக கொடிய போராகவும் கிருஸ்தவ படைகள் முஸ்லிம் பெண்களையும் சிறுவர் சிறுமிகளையும் படு பயங்கரமாக கொன்ற யுத்தமாக குறிபிடுகின்றனர் இந்த யுத்தம் மூன்று கட்டங்களாக நடை பெற்றது முதல் சிலுவைப்போரில் கிறிஸ்தவ உலகம் ஜெருசலத்தை கைப்பற்றியது இரண்டாவது போரில் கட்டத்தில் சுல்தான் ஸலாஹுதீன் ஐயூபி தலைமையில் ஜெருசலம் மீட்கபட்டது இவர் இஸ்லாமிய வரலாறு கண்ட மாபெரும் தளபதி களில் முக்கியமானவர் இவர் ஒட்டுமொத்த மத்திய ஆசியாவையும் கைப்பற்றி சிதறிகிடந்த முஸ்லிம் தேசங்களை ஒன்றிணைத்து மீண்டும் இஸ்லாமிய சாம்ராச்சியத்தை உருவாக்கிய இஸ்லாமிய வரலாறு கண்ட வெற்றி தளபதிகளில் ஒருவர் இரண்டாவது சிலுவைப்போரில் எதிரிகளுக்கு தகுந்த பாடம் புகட்டி எதிரி கைப்பற்றிய மஸ்ஜிதுல் அக்சாவை மீண்டு கைப்பற்றி எதிரிக்கு தோல்விகளை விதியாக மாற்றியவர் இவர் ஒரு அரபியோ அல்லது அன்று கிலாபத் நிர்வாகத்தில் இருந்த துருகியரோ அல்ல இவர் ஒரு அஜமி கேட்- Kurdish- என்ற ஒரு மொழி பேசக்கூடியவர் என்பது குறிபிடதக்கது மூன்றாவது சிலுவைப்போரில் எதிரி ஜெருசலத்தை கைப்பற்றினான்
முதல் சிலுவை யுத்தத்தை பலர் தலைமை தாங்கியுள்ளனர் இவர்களில் முக்கியமானவர் பீட்டர் – Peter the Hermit- என்கிற பாதிரியார் இவர் தலைமையில் யுத்தம் ஆரம்பமானது இவர்தான் முதல் சிலுவைப் போருக்குத் தலைமை தாங்கினார் கி.பி. 1096-ல் மத்திய ஐரோப்பாவிலிருந்து பல பிரிவுகளை கொண்ட படைகளாகப் புறப்பட்டடு திரண்ட படையாக ஜெருசலத்தை நோக்கி முன்னேறத் தொடங்கிய படைகளுக்கு உந்து சக்தியாக இருந்தவர். இவரின் தலைமையில் படைகள் ஐரோப்பாவிலிருந்து 3000 மைல்களுக்கு அப்பால் உள்ள ஜெருசலத்தை நோக்கி திரண்டு குவிந்தது அன்றைய கலீபாவாக இருந்த அல் முஸ்தசிர் பிலாஹ், பாலஸ்தீனை நோக்கிப் போகும் அனைத்து வழிகளையும் தனது படைகளை கொண்டு அடைத்தார், எந்த இடத்தை நோக்கி வந்தாலும் ஜெருசலத்தை நெருங்க விடாமல் எதிரி படைகளை கடுமையாக தாக்கப்பட்டனர்.
இந்த போரில் கிறிஸ்துவர்களின் மாபெரும் தளபதி என்று வருணிக்கப்பட்ட வீரர் ரெஜினால்ட் – உள்பட பெரும்படையணி முஸ்லிம்களிடம் சரணடைந்தது. இவர்களில் பலர் பின்னர் இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டனர் தமது இராணுவத்தின் முக்கியத் தளபதி உள்ளிட்ட பெரும்படை சரணடைந்துவிட்டதால் கிறிஸ்தவ இராணுவம் நிலைதடுமாறியது ஜெருசலேத்தை கைப்பற்றும் எண்ணத்தை கைவிட்டு தாம் தப்பினால் போதும் என்று கருதிய கிறிஸ்தவ படைகள் ஓட்டம் எடுத்தது முதல் சிலுவைப்போரின் முதல் கட்டம் கிறிஸ்துவர்களுக்கு படு தோல்வியில் முடிந்தது.
இதனால் ஆத்திரமும் அவமானமும் கொண்ட ஐரோப்பிய நாடுகள் இரண்டாவது முறையாக ஒரு ஜெர்மானிய திருச்சபைத் தலைவரின் தலைமையில் இன்னொரு பெரிய படையை ஜெருசலேத்தை நோக்கி அனுப்பியது ஆனால் இந்தப் படையால் ஐரோப்பிய தேசமான ஹங்கேரியைக் கூடத் தாண்டமுடியவில்லை. உள்மோதல் ஒழுக்கம் இன்மை காரணமாக ஹங்கேரி படைகளுடன் மோதி தோற்றுப்போனது அதை தொடர்ந்து கி.பி. 1097-ல் ஐரோப்பிய நாடுகளின் கிறிஸ்தவ அரசர்கள் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது முஸ்லிம்களிடமிருந்து ஜெருசலத்தை கைப்பற்றுவது இந்தக் கூட்டமைப்பின் பிரதான திட்டமாக அமைந்தது
கிறிஸ்தவ அரசர்கள் அமைப்பால் சுமார் ஏழரை லட்சம் நபர்களை கொண்ட இராணுவத்தை திரட்டினார்கள் இந்த படை ஜெருசலத்தை கைப்பற்றுவது என்கிற இலக்குடன் அனுப்பப்பட்ட சிலுவை இராணுவம் இது துருக்கியில் உள்ள அண்டியோச்சை -Antioch- முற்றுகையிட்டது இந்த நகரம் மிக பலமான கோட்டை ஒன்றுக்குள் மிகவும் பாதுகாப்பாக அமைந்து இருந்தமையால் சிலுவை படைகளின் சுற்றிவளைப்பு முற்றுகை சுமார் எட்டு மாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்ததும் நகரை வெற்றிகொள்ள முடியவில்லை சிலுவை படைக்கு உணவு போதாமை ஏற்பட்டது இதனால் இறந்தவர்களின் மற்றும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் மனித மாமிசத்தை சமைத்து உண்டது கிறிஸ்தவ படை இந்த சம்பவம் எந்த அளவு இரத்த வெறியுடன் சிலுவை இராணுவம் இருந்தது என்பதை காட்டுகின்றது.
இந்த நிலை தொடரும்போது துருக்கியின் வடபகுதியில் இருந்து முஸ்லிம் இராணுவம் ஒன்று நகரை பாதுகாக்க புறபட்டடுள்ளது என்ற தகவல் சிலுவை படைக்கு எட்டியது அதேவேளை அண்டியோச் நகர கோட்டையின் தளபதியாக இருந்த பைரூஸ் என்பவன் சிலுவை படைக்கு விலைபோனான் கோட்டைக்குல் கிறிஸ்தவ சிலுவை படை நுழைய தேவையான துரோகத்தை செய்தான் கோட்டைக்குள் நுழைந்த சிலுவை படை பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை வெட்டி வீழ்த்தியது . அதை தொடர்ந்து வெற்றி வெறியுடன் தொடர்ந்தும் ஜெருசலத்தை நோக்கி முன்னேறிச் சென்றது
இரண்டாவது சிகப்பு சிலுவைப் படை ஜெருசலத்தை சுற்றிவளைத்தது கண்களில் பட்ட முஸ்லிம்கள் அனைவரையும் வெட்டி வீசியது முஸ்லிம் புத்திஜீவிகளை பிடித்து அவர்களை கால்களை இரண்டு குதிரைகளில் கட்டி குதிரைகளை இரண்டு திசை களில் வேகமாக ஓட்டி இரண்டு துண்டுகளாக கிழித்து போட்டது பெண்களை கூட்டம் கூட்டமாக கற்பழித்தது சிறுவர்களை தூக்கி விசி அடித்து கொன்றது. முஸ்லிம் படை செயல் இழந்தது முஸ்லிம்கள் மஸ்ஜிதுல் அக்சாவுகுள் Dome of the Rock, the mosque of al-Aqsa- நுழைந்து அபயம் தேடினர் அங்கும் கதவுகளை உடைத்து கொண்டு சிலுவைகளுடனும் பைபில்களுடனும் நுழைந்த சிலுவை படை எவரையும் உயிருடன் விடவில்லை அனைவரையும் கொன்றது கணவன் முன் மனைவியை கூட்டு பாலாத்காரம் செய்தது தாயிடமிருந்து சிசுக்களை பறித்து எடுத்து மஸ்ஜிதின் தூண்களின் மீது சிசுக்களின் தலைகளை அடித்து சிதறடித்து மேற்கு வரலாற்றின் பிரகாரம் ஜெருசலத்தில் எந்த முஸ்லிமும் இல்லாது அழிக்கபட்டனர் கிறிஸ்தவ படைகள் சென்ற இடமெல்லாம் மனித உடல்கள் குவிந்து கிடந்தது என்று வரலாறு கூறுகின்றது.
முஸ்லிம்களை வயது வித்தியாசம் இன்றி கொல்வதை கிறிஸ்தவ ஆன்மிக பலம் பெற உதவும் என்று கருதினர் வயோதிபர்கள், நோயாளிகள் , குழந்தைகள் , பெண்கள் என்ற எந்த வேறுபாடும் இருக்கவில்லை லட்சகணக்கில் முஸ்லிம்கள் கொல்லப்படனர் சொத்துகள் அனைத்தயும் கொள்ளையிடப்பட்டது முஸ்லிம்களில் அறிவியல் கண்டுபிட்புகள் அனைத்தும் களவாட பட்டது பிரமாண்டமான பல நூல் நிலையங்கள் எரித்து அழிக்கப்பட்டது அங்கு இருந்த லட்ச கணக்கான அறியியல் விஞ்ஜான நூல்கள் அழிக்கப்பட்டது
ஜெருசலத்தின் மஸ்ஜிதுகளில் கிறிஸ்தவ இராணுவத்தின் குதிரைகளின் அரைவாசிக் கால்கள்- முழங்கால் -புதையும் அளவுக்கு முஸ்லிம்களின் இரத்தம் ஓட்டப்பட்டுள்ளது என்று வரலாறு பதிய தவறவில்லை இவ்வாறு சிலுவை படைகள் ஜெருசலத்தை கைப்பற்றி இரண்டாம் சிலுவை போரில் வெற்றி பெற்றது இத்தனையும் நடைபெறும்போது முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் கலிபா அழுதுகொண்டிருந்தார் என்பது உண்மையான வரலாறு நிர்வாக தவறுகளை யார் விட்டாலும் அதன் விளைவு மிக பெரியதாக இருக்கும் என்பதை தான் இந்த சம்பவம் எடுத்து காட்டுகின்றது – தொடரும் ……